Tuesday, December 1, 2009

கூலி!!!

கடலில்
ஒரு பாலம் கட்டின
குரங்குகள்..

சின்னஞ்சிறிய அணிலும்
சித்தாளாய் மண்சுமந்து
சீராய் பணி செய்ய..

மண் சுமந்த அணிலை
மலர்ந்த தன் கையில்
எடுத்து வருடினார்
முதலாளி இராமன்..

முதன் முதலாய்
முதுகில் பட்டை நாமம்
தொழிலாளிக்கு கிடைத்த
கூலி..

.

No comments:

Post a Comment