கீழ்கண்ட தெளிவுடன் ஊடகங்களைக் கவனியுங்கள். அவை ஜனநாயகத்தின் நான்காம் தூண்கள் அல்ல என்பது தெளிவாக விளங்கும்.
ஊடகங்கள் என்பவை யாவை?
ஊடகங்கள் என்பவை மிகப்பெரிய வியாபார நிறுவனங்கள் ஆகும்.
ஊடகங்களின் வாடிக்கையாளர்கள் யார், யார்?
ஊடகங்களுக்கு விளம்பரங்கள் மூலமே பெருத்த வருமானம் வருகிறது. அந்த விளம்பரங்களைத் தருபவர்கள் வியாபாரிகளும், அரசியல் கட்சிகளும் ஆகும்.
வியாபாரிகள் பட்டியலில் தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், பொழுது போக்கு துறை எனச் சேவைகளை விற்போரும் பலவகைத் தரகர்களும் கூட அடங்குவர்.
அப்படியானால் ஊடகங்கள் தன் வாடிக்கையாளர்களுக்கு என்ன விற்கின்றன? என்ன சேவை செய்கின்றன?
ஊடகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மூளைச் சலவை செய்யப்பட்ட, நுகர்வு கலாச்சாரத்திற்கு பதப்படுத்தப்பட்ட பொதுமக்களை உருவாக்கித் தருகின்றன.
அதேபோல் அரசியல் வாடிக்கையாளர்களுக்கும் அவர்கள் தரும் லாபத்திற்கேற்ப மக்களை கட்சிகளுக்கெதிரான பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பியும் சிறு நல்லவைகளையும், எதிர்கட்சிகளின் சிறு தவற்றை பூதாகரமாக்கிக் காட்டியும் சேவை செய்கின்றன.
இதனால் நீங்கள் சொல்ல வருவது என்ன?
ஊடகங்கள் உங்களைத்தான் விற்று கொண்டிருக்கின்றன எனப் புரிந்துகொள்ளுங்கள்.