Tuesday, June 29, 2010

தாமரை பதில்கள் - 148

கேள்வி எண் 148:



கேட்டவர் : பரஞ்சோதி



ஒருவரை பார்க்காமல், பேசாமல், மற்றவர்கள் சொல்வதை வைத்து நல்லவர், கெட்டவர் என்று தீர்மானிக்கிறோமே அது ஏன்?


அது நம் மூளையின் தாகம். இது நமது ஆறாவது அறிவின் விளைவாகும். எதையும் ஆராயப்படாத, பிரிக்கப்படாத பொதுத்தகவலாக நினைவில் கொள்வது என்பது கடினம்.


எந்த ஒரு சின்ன பெயருக்கும் பண்புகளைச் சேர்த்து பலபரிமாண தகவலாக நம் மூளை வைத்துக் கொள்ள விரும்புகிறது. அதற்காக அத்தனை புலன்கள் கொடுக்கும் உள்ளீடுகளையும் உள்வாங்கிக் கொள்வது உட்பட. முகாம்பே என்றுச் சொன்னவுடன் மனம் ஒரு ஆப்பிரிக்க இனத்தவரை உடனே மனதுக்குள் வரித்து விடுகிறது. (ஏனென்றால் அதற்குத் தெரியும் இது ஆப்பிரிக்கப் பேரென்று). 


ஒருவர் பெயரைத் தெரிந்து கொண்டவுடன் நாம் நல்லவரா கெட்டவரா என் ஆராய்வது இல்லை. ஆனால் இவர் நம் வாழ்வில் எவ்வகையிலாவது (குறைந்த பட்சம் பொழுது போக்கிற்காவது) இடறுவார் எனத் தெரியும்பொழுது பண்புகளைப் பற்றி அறிய விளைகிறோம். நமது ஐந்து புலன்கள் மட்டுமல்ல உள்ளுணர்வு என்றுச் சொல்லப்படும் ஆறாவது புலன் மூலமும் அவருக்கு பண்புகளை கொடுக்க விழைகிறோம். ஏனென்றால் நமது வாழ்வில் இவர் சில மணிகளாவது பங்குபெறப் போகிறார். மற்றவர்களிடன் கேட்பதையும் எங்கோ படித்ததையும் அவருக்கு சம்பந்தப்பட்டவர்களைப் பற்றி அறியும் போதும் அந்தத் தகவல்களை ஏற்றுக் கொள்கிறோம்.


வெகுசிலர் மட்டும் மனம் கொடுத்த இந்த உருவத்தை மிகவும் எளிதாக மாற்றிக் கொள்ள முடியும். சிலருக்கு கொஞ்ச காலமும், அம்மனிதரிடம் உண்டாகும் பழக்கமும் மெல்ல மெல்ல மாற்றும். பலருக்கு ஒரு மிகப்பெரிய நிகழ்வு தேவைப்படும்..
 


மற்றவர் சொல்வதை நாம் ஏன் நம்புகிறோம்? ஏனென்றால் அதை நாம் அவரின் எண்ணம் என்று எடுத்துக் கொள்ளாமல் அனுபவம் என்று நம்புகிறோம்.. அதனால்தான்.
.

தாமரை பதில்கள் - 147

கேள்வி எண் 147:



கேட்டவர் : பரஞ்சோதி


காளிதாசரின் மகாவம்சம், குமாரகாவியம், மேகதூதம் கதைகள் படிச்சிருக்கீங்களா? தெரிஞ்சதை சொல்ல முடியுமா?


காளிதாசர் எழுதியது ரகுவம்சம். மகாவம்சம் அல்ல. மகாவம்சம் என்பது இலங்கையின் வரலாறாக புத்த மதத்தவரால் கூறப்படுவது, இது சிங்களரின் சரித்திரம் எனச் சொல்லலாம்.


ரகுவம்சம் என்பது இராமனுடைய முன்னோர்களில் ஆரம்பித்து அந்த வமிசத்தைப் பற்றிச் சொல்வதாகும். இஷ்வாகு, திலீபன், ரகுஇப்படி நீங்கள் கேள்விப்படாத பல இராமனின் முன்னோர்களை இதன் மூலம் அறியலாம். இதை சிறு சிறு கதைகளாகப் படித்திருக்கிறேன்..


மேக தூதம் சாபத்தின் காரணமாக பிரிந்த யக்ஷ/வித்யாதரன் ஒருவன், தன் மனைவிக்கு மேகத்தை தூதனுப்பும் அருமையான காவியம். நான் படிக்க வில்லை.


குமாரசம்பவம் என்பது நமது கந்த புராணம். காளிதாசனின் காவியம் நான் படிக்கவில்லை.. கச்சியப்ப முனிவரின் கந்தபுராணத்தின் உரையைக் கேட்டிருக்கிறேன்.


சாகுந்தலம் - துஷ்யந்தன் - சகுந்தலைக் காதல் காவியம்.

விக்ரம - ஊர்வசியம் - குப்தர் கால வரலாறு

மாளவிகாக்னிமித்ரம் - என்னவென்று தெரியலை..

இவ்வளவுதான் தெரியும்..

.

Monday, June 28, 2010

தமிழ் செம்மொழி மாநாடு!!!



செம்மொழி'  என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அது பிற மொழிகளைச் சாராதிருத்தலும் வேண்டும்

இதிலெல்லாம் சிறப்பு வாய்ந்த வாழும் செம்மொழி தமிழுக்கு அணி செய்யும் விதமாக, தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைத்து புதுப் பொலிவுடன் திகழும் இந்த வேளையில், கோவை மாநகரத்தில் இந்த ஆண்டு ஜூன் 23 முதல் 27 வரையில் ஐந்து நாட்களுக்கு சிறப்பாக நடந்தது.


தமிழர் தலைவர் கலைஞர் செம்மொழி மாநாட்டில் பலப் புதுமைகளைப் புகுத்தி மாநாட்டை மிகப் பெரிய வெற்றி மாநாடாக்கினார். 500 கிலோமீட்டருக்கு அப்பாலிருக்கும் கடல் ஆர்ப்பத்து கோவைக்கு வந்து விட்டதோ என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு எங்கு நோக்கினும் மக்கள் வெள்ளம்.

புத்தம் புதிய இலச்சனை, சொம்மொழியான தமிழ் மொழியே என்னும் வாழ்த்துப் பாடல், தமிழர் பெருமையை விளக்கும் "இனியவை நாற்பது" என்ற பெயரில் 40 அலங்கார ஊர்திகளில் பழந்தமிழரின் வாழ்க்கையைக் காட்டிய ஊர்வலம் எனப் பலப்பல புதுமைகளுடன் மாநாடு சிறப்பாய் ஆரம்பித்தது. தமிழ் நாடெங்கும் செம்மொழியான தமிழ் மொழியே புதிய தமிழ் வாழ்த்துப் பாடலாய் ஒலிக்கத் தொடங்கியது.

குடும்பமாக வந்த பொதுமக்கள் பொது அரங்கத்தில் அமர்ந்து ஒவ்வொரு நிகழ்வுகளையும் ரசித்தனர். மொழி ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்களுக்கு கொடிசியா உள்ளரங்கத்தில் தனியாக அரங்குகள் அமைத்து ஆய்வு கட்டுகரைகளை சமர்ப்பித்தனர்.

இணைய மாநாடு, தொல்பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை பொதுமக்கள் நாள் முழுவதும் பார்த்து ரசித்தனர்.


கருத்தரங்குகளில் பேசிய தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள்,

 "தமிழ் மக்கள் உலகம் முழுவதும் வாழ்கின்றனர். வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் தமிழ் சென்றடைய வேண்டும். அதற்காக தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களையும், தமிழையும் பாதுகாக்க தமிழர்கள் வாழும் நாட்டில் தமிழ்ப் பண்பாட்டு மையத்தை அமைக்க வேண்டும்.

இணைய தளத்தில் தமிழ் மொழிக்கான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ் அறிஞர்கள் மாநாட்டை ஆண்டுக்கு ஒருமுறை நடத்தி தமிழ் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும்'

என்று வலியுத்தினர்.

ஆய்வரங்கத்தில் 198 அமர்வுகளில் 787 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியின் வரலாறு, சிறப்புகள், மொழி பெயர்ப்புகள், இணைய தளத்தில் தமிழின் வளர்ச்சிகள், தமிழ் வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய பணிகள் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். செம்மொழி மாநாட்டில் தமிழனின் கலாச்சாரம், பண்பாடு, தமிழ் புராணங்களின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பு பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள் தினமும் அரங்கேறின

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும்;

தமிழ் மொழி வளர்ச்சிக்காக 100 கோடி சிறப்பு நிதியம் உருவாக்கப்படும்;
மத்திய ஆட்சிமொழியாக தமிழை உடனடியாக அறிவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

இந்திய தேசிய கல்வெட்டியல் மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி, பல்கலையில் தமிழ் செம்மொழி என்ற தலைப்பில் ஆய்வுகள் நடத்தப்படும்.

போன்ற தீர்மானங்கள் மாநாட்டில் போடப்பட்டு அவற்றில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை உடனடியாக வழங்கப்பட்டது.

* பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள், சான்றோர்களால் மதுரையில் தொல்காப்பியச் செம்மொழிச் சங்கம் அமைக்கப்பட்டது.

அதன் செயலாக்கங்கள் என்ன தெரியுமா?
.
* குறிப்பிட்ட கால இடைவெளியில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்துவது.

* திராவிட மொழிகளின் கலை,பண்பாடுகளை நினைவுறுத்தும் விதமாக நிரந்தர கண்காட்சி அரங்கம் அமைப்பது.

* மொழிக்கூறுகள் தொடர்பான ஆவணக்காப்பகம் அமைப்பது.

* சிதறுண்டு கிடக்கும் தமிழ் ஆராய்ச்சிக்குழுக்களை ஒருங்கிணைப்பது.

* மொழி ஆராய்ச்சியிலும், மொழித்தொண்டிலும் ஈடுபடும் சான்றோர்களுக்கும் ஆதரவளித்து துணை புரிவது.

* உலகத்தமிழறிஞர்கள் கையேடு வெளியிடுவது

* உலகத்தமிழர்களை தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்வது.

* தமிழின் சிறந்த படைப்புகளை உலக மொழிகளில் மொழி பெயர்ப்பது; பிற மொழி படைப்புகளை தமிழில் மொழி பெயர்ப்பது



வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர
வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட
உண்டா ரமரர்தேன் உண்ணா ரமரரே
கண்டாரா திச்செந் தமிழ்.


செந்தமிழ்  முதன்மையான மொழி.. ஆதிச் செந்தமிழ்.  அதைக்கண்டவர்களில்  அதை அனுபவிப்பர்கள் அதன் அமிழ்தான சுவையை உண்பதால் அமரத்துவம் பெறுகின்றனர். அதன் சுவையை பருக இயலாதவர்கள், உட்காரவியலாமல், தம்மொழி இப்படி இல்லையே என இருக்க முடியாமல் பரிதவிப்பர்.

அப்படி வண்டுகள் மொய்க்கும்படி இனிய தேனை தமிழ் வார்த்திடும் பொழுது வெண்தாமரைகள் தம்மில் அச்சுவைமிகு தேனில்லையே என வெட்கமடைந்து முகம் சிவந்து செந்தாமரையாகி மலரும்.



என்ற பாடலுக்கு ஏற்ப



இப்படித் தமிழின் பெருமையைப் போற்றி, சாதனைகளைப் பாராட்டி, எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுத்து தமிழ் மொழி மாநாடு மிகச் சிறந்த வெற்றியை அடைந்தது..

வாழ்க செந்தமிழ்! வளர்க நற்றமிழர்!!


Friday, June 25, 2010

தாமரை பதில்கள் - 146

கேள்வி எண்: 146


கேட்டவர் : மகாபிரபு



அப்ப உளுந்த போண்டாவில் ஏன் ஓட்டை போடுவதில்லை?


1. கீழே உளுந்த போண்டா மண்ணாகி இருக்கலாம். அதனால அதை எடுத்து ஏன் வேஸ்டா ஓட்டை போடணும் என்றுதான்.

2. போண்டாவுக்கும் வடைக்கும் வித்தியாசம் தெரியணுமில்ல.. அதுக்குத்தான்.

3. அறிவுரை சொல்லும்போது தட்டிக் கொடுக்கணும் என்கிற அடிப்படையை உணர்த்தத்தான் தட்டிப் போடற வடையில மட்டும் அறிவுரை சொல்லி இருக்காங்க.. யார் தலையையாவது உருட்டிட்டு அறிவுரை என்று சொல்லக்கூடாது. அதனால உருட்டுற போண்டாவில அறிவுரை இல்லை.

4. அரைத்திட வடிவில் இருக்கும் கோள வடிவத்தின் உச்சியில் இருந்து கீழே வரை ஓட்டை போட்டால் கோளவடிவம் தட்டையாகி விடும், காரணம் பரப்பு இழுவிசை.. அப்புறம் போண்டாவுக்கும் வடைக்கும் வித்தியாசம் இருக்காது

5. அப்புறம் போண்டாவுக்குள்ள மசாலா வைக்கிறாங்களே அது ஏன் என்ற கேள்வி மனசில் எழுந்தா இரப்பர் போட்டு அழிச்சிடுங்க.. இவ்வளவு மசால போண்டாவில் இருக்குன்னு காட்டத்தான்,,,

இந்த பதில் போதுமா?

தாமரை பதில்கள் - 145

கேள்வி எண் 145:



கேட்டவர் : பரஞ்சோதி



நீண்ட நாள் சந்தேகம், அது ஏன் உழுந்து வடையில் மட்டும் நடுவில் துளை வைக்கிறாங்க, பருப்பு வடையில் ஏன் இல்லை?


லொள்ளு : உளுந்தா அடி பட்டு காயமாகும் என்பதால் உளுந்த வடையில் ஓட்டை போட்டு சிம்பாலிக்கா காட்டறோமாக்கும். ஆமை மாதிரி நிதானமா காரியங்கள் செய்தால் காயம் ஆகாது அப்படின்னு காட்ட ஆமை வடையில ஓட்டை இல்லை.


அறிவியல் : உளுந்த வடை மாவு குழைவா இருக்கும் தட்டிப் போடும் போது மத்தியில் ஒரு விரல் வத்து எடுத்தால் ஓட்டை விழுந்திடும், வடையின் மத்தியில் ஓட்டை போடுவதால் எண்ணை படும் பாகும் அதிகமாவதால் வடை எளிதாக வேகும். இல்லா விட்டால் உட்புறம் வேகும் போது வெளிப்புறம் கடக் முடக்குன்னு ஆகிடும். பருப்பு வ்டையின் பதம் அதில் துளை போட அனுமதிப்பதில்லை. 

தாமரை பதில்கள் - 144

கேள்வி எண் 144:


கேட்டவர் : பரஞ்சோதி



நம் நாட்டினை பிச்சைக்காரர்கள், சோம்பேறிகளே இல்லாத நாடாக்க என்ன செய்ய வேண்டும்?



பதில் சொல்ல ரொம்ப சோம்பலா இருக்கு.    யாரையாவது கேட்டுச் சொல்றேன் இருங்க...

சரி சீரியஸா சொல்றேன்.. இந்தக் கேள்விக்கு ஏற்கனவே சினிமாவில் பதில் சொல்லிட்டாங்க ...


ஒரு டாக்ஸியில் நான்கு நண்பர்கள் டெல்லியைச் சுத்தி பார்க்கப் போனாங்களாம், டிரைவர் சர்தார்ஜியாம். சர்தார்ஜி ஜோக் சொல்லிச் சொல்லி கடுப்படிச்சாங்களாம். அவரும் சிரிச்சிகிட்டே வண்டி ஓட்டினாராம். 

கடைசியா டாக்சியை விட்டு இறங்கும் போது, அந்த டிரைவர் சர்தார்ஜி, ஒரு ரூபாயைக் கொடுத்து, டெல்லியில் நீங்க பார்க்கிற முதல் சர்தார்ஜி பிச்சைக்காரனுக்கு இதைக் கொடுங்கன்னு சொன்னாராம்.

சீரியஸாவே தேடிப்பார்த்திருக்காங்க. ஒரு சர்தார்ஜி பிச்சைக்காரனைக் கூட பார்க்க முடியலையாம். சர்தார்ஜிகள், தங்களால் முடிந்த அளவு சுயமா தொழில் செய்வாங்களாம்.

இது உங்க கேள்விக்கு பதிலா இருக்குமே.. (நன்றி : அபியும் நானும்)


ஒரு கலாச்சாரம், பண்பாடு மட்டுமே இவை இரண்டையும் ஒழிக்கக் கூடியது. நம் பண்பாடு பிச்சை எடுப்பதையோ அல்லது "சும்மா" இருப்பதையோ மிகப் பெரிய பாவம் என்று சொல்வதே இல்லையே. அது நடந்தால் தானே மாறும். வாங்க நம்ம நாட்டு சகோதரர்கிட்டயே இதையும் கத்துக்கலாம்



conspiracy theories 1 -- நிலவில் மனிதன் கால் வைத்தது பொய்? - 8

இன்னொரு சந்தேகம்.. பூமியில் பூட்ஸ் தடங்கள் பதிவது ஓக்கே.. நிலவோட அமைப்புப் படி பூட்ஸ் தடங்கள் இப்படி போட்டோவில் இருக்கற மாதிரி பதிவது சாத்தியம் தானா?





இது நல்ல கேள்வி. நிலாவின் மேலோடு முழுவதும் நம்ம ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் பேபி பவுடர் மாதிரி இருக்குமாம். அதனால காலை வச்சு அழுத்தினா அந்த படிவம் தெரியுமாம்.


இதைப் பற்றி ஒரு சந்தேகமும் அதுக்கு நாசாவின் சமாளிப்பும் இருக்கு,

அதாவது ஒரு காலடித் தடமே இப்படி அழுத்தமா படியும் பொழுது 3 டன் எடை உள்ள நிலவிறக்கக் கூட்டின் கால்கள் மணல்ல புதைஞ்சிருக்குமே? ஏன் புதையலை என்று கேட்டிருப்பாங்க..

ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூட்டட் ஓவர் த ஏரியா அப்படின்னு தத்துவம் சொல்லி இருப்பாங்க நாசா விஞ்ஞானிகள்.




ஹூஸ்டன் நாசா அருங்காட்சியகத்தில் ஒரு விளையாட்டு இருக்கும். அதாவது அங்கே ஒரு இந்த மாதிரி ஒரு லூனார் மாட்யூலை கண்ட்ரோல் பண்ண முயற்சி பண்ணலாம். அதை ஆபரேட் பண்ணிப் பார்த்தால் யாராலும் அதை அவ்வளவு எளிதா கண்ட்ரோல் பண்ண முடியாது.. அதுவும் ஈர்ப்பு விசை குறைவாக இருக்கும் இடங்களில் என்று புரியும்.


ஆனாலும் ஆடாம அலுங்காம மூணு டன் எடையுள்ள கூட்டை ஆர்ம்ஸ்ட்ராங்க் இறக்கினாரு, ஆனா அதே வாகனத்தை பூமியில் ஓட்ட முடியாம ஆக்ஸிடெண்ட் ஆகிப் போச்சுன்னு சொல்றாங்களே அதாங்கண்ணா சூப்பர்.  (கவனிக்க, சென்ற பதிவுகளில் வந்த வீடியோ)






இன்னும் சில சமீபத்திய தகவல்கள



1. 40 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கத் தூதுவர் அப்போதைய ஜெர்மன் பிரதம மந்திரிக்கு அளித்த சந்திரக் கல் போலியா?








‘Moon rock’ given to Dutch is petrified wood

01:00 AM EDT on Friday, August 28, 2009

By Thomas J. Morgan

Journal Staff Writer

The Dutch national museum says a rock supposedly brought back from the moon by U.S. astronauts, is just a piece of petrified wood.

AP /
LITTLE COMPTON — Some petrifying news has arrived from the Netherlands.
It seems that a moon rock supposedly brought back by Apollo astronauts and presented to a retired Dutch prime minister 40 years ago is actually a hunk of petrified wood, according to the Associated Press.

The news agency said the rock had been a prized possession of the Dutch national museum, the Rijksmuseum, which acquired it after Willem Drees, the former prime minister, died in 1988.
The AP reported that Drees got it as a private gift on Oct. 9, 1969, from J. William Middendorf, then U.S. ambassador to the Netherlands and now a resident of Little Compton.

Middendorf said on Thursday that he doesn’t recall presenting the rock to Drees, but does recall when the Apollo 11 astronauts visited the Netherlands as part of their “Giant Leap” goodwill tour that followed their moon landing on July 20, 1969.

“It has been 40 years,” Middendorf said, “so I can’t remember the details.”

The former ambassador said the rock must have come either from the State Department or directly from the astronauts. “If it came from the astronauts, I would have thought it would be perfectly OK,” he added.

Rijksmuseum spokeswoman Xandra van Gelder, who oversaw the investigation that proved the piece was a fake, said the museum will keep it anyway as a curiosity. “It’s a good story, with some questions that are still unanswered,” she said. “We can laugh about it.”
The U.S. Embassy in the Hague said it was investigating the matter.

The museum had vetted the moon rock with a phone call to NASA, van Gelder said. She said the space agency told the museum then that it was possible the Netherlands had received a rock: NASA gave moon rocks to more than 100 countries in the early 1970s, but those were from later missions.

“Apparently no one thought to doubt it, since it came from the prime minister’s collection,” van Gelder said.

The rock is not usually on display; the museum is primarily known for its paintings and other works of fine art by masters such as Rembrandt.

A jagged fist-size stone with reddish tints, it was mounted and placed above a plaque that said, “With the compliments of the Ambassador of the United States of America ... to commemorate the visit to The Netherlands of the Apollo-11 astronauts.” The plaque does not specify that the rock came from the moon’s surface.

It was given at the opening of an exhibition on space exploration.

It was on show in 2006 and a space expert informed the museum it was unlikely NASA would have given away any moon rocks three months after Apollo returned to Earth. Researchers from Amsterdam’s Free University said they could see at a glance the rock was probably not from the moon. They followed up the initial appraisal with extensive testing.
“It’s a nondescript, pretty-much-worthless stone,” Geologist Frank Beunk concluded in an article published by the museum.

He said the rock, which the museum at one point insured for more than half a million dollars, was worth no more than 50 euros ($70).

Van Gelder said one important unanswered question is why Drees was given the stone. He was 83 years old in 1969 and had been out of office for 11 years. On the other hand, he was the country’s elder statesman, the prime minister who helped the Netherlands rebuild after World War II.

Middendorf was treasurer of the Republican National Committee from 1965 until 1969, when President Richard Nixon dispatched him to the Netherlands.





2. அதிர்ச்சி அளிக்கும் தகவல்.. நாசாவின் நிலா உலா பதிவுகள் பல அழிக்கப்பட்டு விட்டன.. காணாமல் போயிட்டது. அவ்வளவு பெரிய சாதனையின் பதிவுகளைப் பற்றி யாருமே பெரிசா எடுத்துக்கலை... மூணே மூணு அப்போலோ பயணங்களின் 11 வீடியோக்கள் தான் இப்ப இருக்கு,,,





The Saga Of the Lost Space Tapes

NASA Is Stumped in Search For Videos of 1969 Moonwalk





By Marc Kaufman

Washington Post Staff Writer 

Wednesday, January 31, 2007
As Neil Armstrong prepared to take his "one small step" onto the moon in July 1969, a specially hardened video camera tucked into the lander's door clicked on to capture that first human contact with the lunar surface. The ghostly images of the astronaut's boot touching the soil record what may be the most iconic moment in NASA history, and a major milestone for mankind.

Millions of television viewers around the world saw those fuzzy, moving images and were amazed, even mesmerized. What they didn't know was that the Apollo 11 camera had actually sent back video far crisper and more dramatic -- spectacular images that, remarkably, only a handful of people have ever seen.

NASA engineers who did view them knew what the public was missing, but the relatively poor picture quality of the broadcast images never became an issue because the landing was such a triumph. The original, high-quality lunar tapes were soon stored and forgotten.

Only in recent years was the agency reminded of what it once had -- clean and crisp first-man-on-the-moon video images that could be especially valuable now that NASA is planning a return trip.

About 36 years after the tapes went into storage, NASA was suddenly eager to have them. There was just one problem: The tapes were nowhere to be found.

What started as an informal search became an official hunt through archives, record centers and storage rooms throughout NASA facilities. Many months later, disappointed officials now report that the trail they followed has gone cold. Although the search continues, they acknowledge that the videos may be lost forever.
-->

"When we sent our camera up on the mission, everything about it was a first and a big unknown," said Richard Nafzger, an engineer with NASA who was involved in the original transmission of the Apollo 11 images to Earth and is now part of the search to find them. "Would the camera work? Would we get TV of that first step? We just didn't know what to expect.

"In the same way, we're doing a kind of massive tape and document search that's never been done before," Nafzger said in a recent interview. "We might discover the tapes tomorrow, or we might reach a point where we have to say we can't go any further. Right now, I would have to tell you their fate is pretty much a mystery."

Stanley Lebar, who had been in charge of developing the lunar camera, is also involved in the search. He can recite all the understandable reasons why he and his colleagues did not give the tapes the attention they deserved back in 1969 -- they were cumbersome, a highly specialized format that appeared to have limited value in the pre-digital age -- but he nonetheless is kicking himself now for not getting a copy for safekeeping.

"We all understood the importance of this event to history, to posterity, and so we all should have made sure those tapes were safe and secure," said Lebar, 81. "I ask myself today, 'Why the heck didn't you think that way back then?' The answer is that I just assumed that NASA was going to do it. But, unfortunately, that was a bad assumption."

The tale of the missing Apollo 11 tapes is made all the more awkward because televised images of subsequent Apollo missions were greatly improved. It was only for Apollo 11 that an unusually configured video feed was used. It was transmitted from the moon to ground sites in Australia and the Mojave Desert in California, where technicians reformatted the video for broadcast and transmitted long-distance over analog lines to Houston. A lot of video quality was lost during that process, turning clear, bright images into gray blobs and oddly moving shapes -- what Lebar now calls a "bastardized" version of the actual footage.

The original video from the moon was in an unconventional "slow-scan" format, made necessary because almost all of the broadcast spectrum was needed to send flight data to Earth. The format scanned only 30 percent of the normal frames per second, and it was done at a much lower than normal radio frequency.

The images would probably have remained forgotten and of little consequence to Lebar, Nafzger and NASA but for the initiative of a retired California ground station engineer and several Australian technicians who meet regularly for reunions.

In 2002, one of the men who had worked at Australia's Honeysuckle Creek ground station in 1969 -- and who had seen the high-quality Apollo 11 video originals back then -- found a 14-inch reel of tape in his garage that seemed to be from that period. He brought it to a Honeysuckle Creek reunion and passed it around.

At the next year's reunion, several more Honeysuckle veterans brought in mementos from the Apollo era, and this time they included actual moonwalk photos they had taken as the video played on their special monitors. The photos were of the original images -- not the ones reformatted for television -- and they were clearly much better than what everyone else had seen. An American engineer had similar pictures taken at the Mojave site.

The Australians were eager to learn whether the tape was of the actual Apollo 11 moonwalk, but they had no way to play the ungainly reels. Convinced that the tapes could have historical and educational value, they tracked down Nafzger, 66 -- one of the few Apollo 11-era people still working at the Goddard Space Flight Center in Greenbelt, where most Apollo data had been processed.

The good luck continued when Nafzger found that the soon-to-be-mothballed Data Evaluation Lab at Goddard still had one of the few seven-foot-tall analog machines that could play the Apollo video. The Australians sent him the tapes and he put them into the recorder with great anticipation. But what came out was just chatter and computer data from an earlier Apollo mission.

It was disappointing, but the seed had been planted: Not only was NASA reminded of the original moonwalk tapes, but the agency had a machine that could play them. It also had two men -- Nafzger and Lebar -- who still lived relatively close to Goddard and were willing to spend hours of their own time looking for the three hours of video.

They spent weeks searching in the vast National Records Center in Suitland, where the tapes once were housed. They came up empty until finding documentation that some 26,000 boxes of Apollo tapes were requested by Goddard officials between the early 1970s and the early 1980s. Considering that the 45 videotapes from Apollo 11 would have been stored in just nine of those boxes, the odds against finding them were clearly daunting. Nonetheless, Nafzger and Lebar were optimistic.

Back at Goddard, however, they found no trace of the missing tapes, nor of anyone who knew much about them. Clearly someone at Goddard had forwarded the Apollo tapes to other storage, dispersed them to other NASA centers or had them destroyed, but Nafzger and Lebar have had little luck identifying who that might be. The fact that all this happened about 30 years ago made the task more difficult, since some of the most likely decision makers are deceased.
The missing tapes are now something of an embarrassment to NASA, which last August put Goddard's deputy director, Dolly Perkins, in charge of the search. She is overseeing the hunt for the tapes and, perhaps more important right now, for memos and directives that might yield clues to their fate.

"As far as we know, all the tapes were handled properly from a mission perspective," she said.

"Typically, when we record at a ground site, we don't preserve data tapes. The scientific investigators will get what they need and then erase. But here there is some indication that we didn't destroy the tapes but stored them for some period of time."

But as Perkins well understands, there is a difference between the "mission perspective" and the historical and social value of these particular tapes. The missing videos could help excite a new generation about exploring space, and they offer significant commercial possibilities as well.

"Maybe somebody didn't have the wisdom to realize that the original tapes might be valuable sometime in the future," she said. "Certainly, we can look back now and wonder why we didn't have better foresight about this."





An experiment onboard India's  maiden moon mission -- Chandrayaan-I -- has found iron-bearing minerals in abundance on the lunar surface, initial reports suggest.
Moon  Mineralogy Mapper (M3) instrument of National Aeronautics and Space Administration (NASA ) has beamed back images of the Orientale Basin on the western limb of the moon.
An analysis of the images indicates abundance of iron-bearing minerals such as pyroxene, said Carle Pieters, a senior scientist of US-based Brown University and principal investigator for the M3 experiment.

"The image is from a single wavelength of light that contains thermal emission, providing a new level of detail on the form and structure of the region's surface," he said.

The images were captured by the M3 during the commissioning phase of Chandrayaan-1, launched on October 22, as the spacecraft orbited the moon at an altitude of 100 km.

"The M3 provides us with compositional information across the moon that we have never had access to before," Pieters said, adding that the ability to now identify and map the composition of the surface in geologic context provided a new level of detail needed to explore and understand the moon.

M3 is one of the 10 instruments onboard the unmanned Chandrayaan , conducting experiments while the spacecraft orbits over the moon next two years.

Five instruments were indigenously built by the Indian Space Research Organisation (ISRO), while the remaining six experiments are of foreign origin, including three from the European Space Agency, two from NASA and one from Bulgaria.

© Copyright 2010 PTI. All rights reserved. Republication or redistribution of PTI content, including by framing or similar means, is expressly prohibited without the prior written consent.


கீழே இருக்கும் வீடியோவுக்கும்  இந்தக் கட்டுரைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை ஹி ஹி..




அமெரிக்கர்கள் நிலாவிற்குப் போனது உண்மையோ இல்லையோ கீழே உள்ள இரண்டு வாக்கியங்களில் ஒன்று சத்தியம்.


1. வெளியிடப்பட்ட படங்கள் வீடியோக்களில் பல போலியானவை.. நிலாவின் தான் அறிந்த சில இரகசியங்களை சிரமமே படாமல் மற்றவர் அறிவதை அமெரிக்கா விரும்பவில்லை. அமெரிக்கா மற்றும் இரஷ்யா இரண்டுமே ஆராய்ட்சியை போட்டியை நிறுத்தக் காரணமான ஏதோ ஒன்று இதில் அடங்கி இருக்கிறது. இப்பொழுது நிலவின் மீது ஒரு இராக்கெட்டை மோதச் செய்தததில் இதன் தொடர்ச்சி இருக்கலாம்.


2. அமெரிக்கர்கள் கண்ட்ரோல் மாட்யூலை விட்டு நகரவே இல்லை. இரஷ்யா எப்படி இயந்திரம் அனுப்பி மண் எடுத்ததோ அப்படி இயந்திரங்கள் மட்டுமே இறங்கின. மற்ற விஷயங்கள் நாடகமாக்கம்.  


நிலாவிற்கு போனது எப்படி எனச் சொல்லி இருந்ததை இதில் சரிபார்த்துக் கொள்ளவும்.




முற்றும்... 


ஆனால் அடுத்த கான்ஸ்பைரசி தியரி விரைவில் தொடங்கும்.

.

Thursday, June 24, 2010

conspiracy theories 1 -- நிலவில் மனிதன் கால் வைத்தது பொய்? - 7





சந்தேகம் : அமெரிக்கக் கொடி சந்திரனில் பறக்குது. காற்றில்லா இடத்தில் எப்படிப் பறக்கும்.



நாசா விளக்கம்: : விண்வெளிவீரர்கள் அப்பதான் கொடியை நாட்டி இருக்காங்க.. அதனால கொஞ்சம் அசையுது... அதுவுமில்லாம, கொடொயை நடும் பொழுது மேலிருக்கும் நீளவாக்கான கம்பி, கொடியை நடும் முயற்சியில் பெண்டாயிடுச்சி.. இதனால உண்டான சுருக்கத்தில் கொடி அசைவது மாதிரி தெரியுது.




என்னோட கருத்து : இந்தப் படத்துக்கு இந்த பதில் ஓகேதான்.. ஆனால்  ஃபாக்ஸ் ஒளிபரப்பிய வீடியோவை உன்னிப்பா கவனிச்சா கொடியில் கீழ் பக்க நுனி தூக்கப்படுவது நல்லா தெரியும்.. அதுக்கு இது பதில் இல்லையே மக்கா..!!!





ஒரு துவளையான துணி தொங்கும் போது எதாவது ஒரு விசையால் அது டிஸ்டர்ப் ஆனா அதனுடைய நகர்வு பெண்டுலம் மோஷன்ல தான் இருக்கும். நிலவீற்பு மையத்திற்கு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் பெண்டுலம் மாதிரிதான் ஆடும்.. ஆனா ஒரு பக்கம் மாத்திரம் தூக்குதே அதற்கு என்ன அர்த்தம்?

இதை உங்கள் அறையில் எல்லாக் கதவையும் சாத்திட்டே பார்க்கலாம். 



 

சந்தேகம் : சந்திரன்ல இறங்கினது இரண்டு பேர். (ஆல்ட்ரின்) ஒருத்தர் போட்டோவில இருக்கார். இன்னொருத்தர்(ஆர்ம்ஸ்ட்ராங்) எதிர்ல இருக்கார். கேமிரா காணலியே?



நாசா விளக்கம் : காமிர நெஞ்சில் மாட்டி இருக்கு. ஃபோட்டோவில ஆல்ட்ரினோட காமிரா பளிச்சுன்னு தெரியுதே! கண்ணு தெரியலியா என்ன?




நம்ம கேள்வி.. : அதெல்லாம் சரிங்கன்னா படத்தப் பார்த்தா சூரிய வெளிச்சம் ஆர்ம்ஸ்ட்ராங் மேல சூப்பரா விழுகுது. நிழலோட சாய்வு  கூட அப்படித்தான் காட்டுது. ஆல்ட்ரின் நிழல் அவர் முகத்தில கண்ணாடியில பளீர்னு தெரியுதில்ல..

இப்ப என்னோட சந்தேகம், அப்ப ஆல்ட்ரினின் முன் பக்கம் இருட்ட இருக்கணும். கேமிராவில் ஃபிளாஷ் இல்லை. இருந்தா ஆல்ட்ரினின் கண்ணாடி முகம் பளீர்னு காட்டிக் கொடுத்திருக்கும். அப்புறம் எப்படின்னா கேமிராவில் இருக்கும் பொடி எழுத்து கூட பளீர்னு தெரியற மாதிரி படமெடுத்தீங்க..? 

ஃபோட்டோகிராபி தெரிஞ்சவங்க சொல்லுங்கன்னா! சூரியனுக்கு நேர் எதிரா நின்னு படமெடுத்தா இவ்வளவு கிளியரா படம் வருமா? 


 

சந்தேகம் : எந்தப் படத்திலும் கருவானில் ஒரு நட்சத்திரம் கூட தெரியலையே ஏன்?



நாசா விமர்சனம்: சந்திரனோட மேற்பரப்பு ஓளியை பிரதிபலிக்கிறது.. (நம்ம சிவா.ஜி அண்ணா மாதிரி) அந்த கிளேர்ல நட்சத்திரங்கள் தெரியலை. அதுவுமில்லாம எடுத்த ஃபோட்டோக்களின் ஷட்ட்ர் ஸ்பீட் 1/150 லிருந்து 1/250 வினாடிகள் வரை. அதனால மங்கலான நட்சத்திரங்கள் தெரியாது..




என்னோட சந்தேகம் : இந்த ஷட்டர் ஸ்பீட்ல ஆல்ட்ரினோட நிழலான பாகம் அவ்வளவு கிளியரா எப்படித் தெரியுது? 






சந்தேகம்: நிலவிறக்கக் கூடு சமதளத்தில இருக்கு. அதற்குக் கீழ இருக்கிற மண் கொஞ்சம் கூட ஒரு விண்கலம் தரையிறங்கியதற்கு அடையாளமா தூசி பறந்தோ, இராக்கெட் எக்ஸாஸ்ட் வெளியேறும் வேகத்தில் பறந்த மண்ணோ கிடையாது.. இராக்கெட் எஞ்சின் மூலம் இறங்கி இருந்தா சிறு குழியாவது எஞ்ஜின் எக்ஸாஸ்ட் பக்கம் இருக்கும்



நாசா சமாளிப்பு: ஹாலிவுட் படத்தில வருகிற மாதிரி எல்லாம் எறிஞ்சுகிட்டு எல்லாம் இது இயங்காது. இறங்குவதற்கு சற்றே முன்பு பே த்ராட்டில் என்னும் எதிர் திசையில் எஞ்சின் இயங்குவதால் பள்ளம் உண்டாகாது..




எனது சந்தேகம்: இராக்கெட் எஞ்சின் விதி

ராக்கெட் இயங்கும் முறை.
Rocket thrust is caused by pressures acting on the combustion chamber and nozzle

ஒரு நுண்துளை (nozzle) வழியாக அதிக அழுத்தமுள்ள பாய்மம் (fluid) ஒன்று பீய்ச்சப்படும்போது, அதற்கு எதிர்வினை ஒன்று இருக்கும். இது நியூட்டனின் மூன்றாவது விதியிலிருந்து வருவது. ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு. படகு ஓட்டும்போது, துடுப்பால் தண்ணீரை வலிந்து பின்னோக்கித் தள்ளுகிறீர்கள். படகு முன்னோக்கிச் செல்கிறது. ராக்கெட்டில் எரிபொருளும், ஆக்சிஜனும் இருக்கும். இது திட வடிவில், தூளாக இருக்கலாம். அல்லது திரவமாக இருக்கலாம் (பெட்ரோல் போல). அல்லது வாயு எரிபொருள் ஒன்றை மிக அழுத்தத்திலும் மிகக்குறைவான வெப்பத்திலும் (அதாவது கடுங்குளிரிலும்) திரவமாக்கிச் சேர்த்து வைக்கலாம். நீர்மமாக்கப்பட்ட வாயு எரிபொருள்தான் மிக மிக அதிகச் செயல்திறன் கொண்டது. ஹைட்ரஜனை கடுங்குளிரில், கடும் அழுத்தத்தில் திரவமாக்கி, அத்துடன் ஆக்சிஜனையும் அதேபோல திரவமாக்கி எரிபொருளாகவும் ஆக்சிஜனேற்றியாகவும் எடுத்துச் செல்வதுதான் ஒரு ராக்கெட்டுக்கு மிக அதிக சக்தியைத் தரும். அந்த எஞ்சினுக்கு கிரையோஜீனிக் எஞ்சின் என்று பெயர்.

நிலவின் ஈர்ப்பு விசையை கடைசி வினாடி வரை எதிர்க்கும் திறனுடனும், விண்கலத்தின் எடையை விட சற்றே குறைந்த அளவு எடையைத் தூக்கும் திறனுடனும் இராக்கெட் செயல்பட்டால்தான் பத்திரமாக இறங்க முடியும். அப்போது வெளிப்பட்ட வாயு, டால்கம் பௌடரை விட மென்மையான மணல் துகள்களை தூக்கக் கூட சக்தியில்லாதது என்பது காதுல பூந்தோட்டத்தையே சுத்தற விஷயம். ஃபாக்ஸ் ஒளிபரப்பிய வீடியோவை பார்த்தீங்கன்னா கால் பகுதியில் கொஞ்சம் கூட தூசு படாம தொடைச்சு வச்ச மாதிரி இருப்பது தெரியும். 


தொடரும்.

.

conspiracy theories 1 -- நிலவில் மனிதன் கால் வைத்தது பொய்? - 6

ஃபாக்ஸ் டீ.வி ஒளிபரப்பியைதைப் பற்றீய்ய வீடீயோ இங்கே...




இன்னும் சில வீடியோக்கள்


Did we really land Men on the Moon? 




நாசாவின் வீடியோ தொகுப்புகள்


அறிமுகம்

அமெரிக்கக் கொடி

ஒப்பீடுகள்

கூடிறிங்குதல் ஒப்பீடு

ஆர்ம்ஸ்ட்ராங்க்



மத்தவங்க சொல்வதை தொகுத்து, அதற்கு நாசா சொன்ன பதில்களையும் யாராவது ஒருவர் விக்கிபீடியாவில் தந்திருக்கிறார்கள்.


http://en.wikipedia.org/wiki/Moon_la...iracy_theories



நிலாவில் இறங்கினதில ஏன் இவ்வளவு பிரச்சனை? ஏன்னா 1969 ஜுலை 20 அன்னிக்கு அஷ்டமி..  




அலசல் தொடரும்.

.

Wednesday, June 23, 2010

தாமரை பதில்கள் - 143

கேள்வி எண் 143:



கேட்டவர் : பரஞ்சோதி


அட்லாண்டிஸ் இன மக்கள் 9 மீட்டர் உயரம் வரை இருந்தார்களாமே? அது உண்மையா? அவர் என்ன ஆனார்கள்?


அட்லாண்டிஸ் பற்றி முதலில் எழுதியவர் அரிஸ்டாட்டிலோட மாணவரான பிளாட்டோ. 

அரிஸ்டாட்டில் தன் மாணவர்களோட உரையாடியதாக எழுதியிருக்கும் ஒரு உரையில் 9000 ஆயிரம் ஆண்ட்டுகளுக்கு முன்னால் ஏதென்ஸ் மக்களுக்கும் அட்லாண்டிஸ் மக்களுக்கும் இருந்த பகையைப் பற்றிச் சொன்னதாகச் சொல்லி அவர் ஆரம்பிக்கிறார்.


11000 ஆண்டுகளுக்குமுன்பு வாழ்ந்த அட்லாண்டிஸ் மக்களைப் பற்றிய கதை. கடல் அரசன் போஸீடன், அவனுடைய மகன் அட்லஸ் உயர்ந்த நாகரீகம் பற்றிய உண்மைக் கதைன்னு சொன்னாராம்..


பஹாமா திவுகள் பக்கத்தில் பிமினி என்ற தீவிற்கு அருகில் கடலுக்கு அடியில் 70 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் உள்ள ஒரு சுவரைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.


இதில் உள்ள ஒவ்வொரு கல்லும் 5 மீட்டர் நீளமும் 0.5 மீட்டரிலிருந்து 1.5 மீட்டர் மொத்தமும் 5 டன் எடை கொண்ட கற்களினால் கட்டப் பட்டதாம். இது ஒரு மூழ்கிய துறைமுகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதன் வயது 4000 ஆண்டுகளில் இருந்து 10 ஆயிரம் ஆண்டுகள் வரை இருக்கும் எனக் கருதப்படுகிறது.

பிளாட்டோ சொன்ன கதையையும் இதையும் இணைக்கும் மக்கள் அட்லாண்டிஸ் மக்களை மிகப் பெரிய இராட்சத உருவம் கொண்டவர்களாக கருதுகிறார்கள். 

ஆனால் இது உண்மையா என்று உறுதிப்படுத்த முடியவில்லை, பொய்யென்றும் உறுதியாகவில்லை. 

ஆனால் தஞ்சை பெரிய கோவிலையும் எகிப்தின் பிரமிடுகளையும் பார்க்கும் பொழுது அவர்கள் அவ்வளவு உயரம் இருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனப்படுகிறது.. வேணும்னா 9-10 அடி இருந்திருக்கலாம்.. 9 மீட்டர் எல்லாம் ரொம்பவே ஓவர்.

இவர்களின் அழிவைப் பற்றி பலகதைகள் உலவுகின்றன

1. இது நகர்ந்து நகர்ந்து அண்டார்டிகாவுக்கு போயிடுச்சி அப்படின்னு கனடா விஞ்ஞானிகள் சொன்னாங்க. அது தவறு என்று தெரிஞ்சுடுச்சி.

2. எகிப்தியர்களின் ஒரு கொவிலில் இந்தாபெயிண்டிங் இருக்கு..


அவங்க கருத்துப்படி இது பெரும் வெள்ளத்தின் முன்பும் பின்பும் என்பதைக் குறிக்குது. இரந்து சிங்கங்களுக்கு மத்தியில் சூரியன் இருக்கில்லையா...

சூரியன் பெருவெள்ளத்துக்கு முன்பு மேற்கில் உதிச்சதாகவும், அதற்கு பிறகு கிழக்கில் உதிப்பதாகவும் அர்த்தமாம். அதாவது பூமி சுற்றும் திசை மாறிப்போச்சி.. அல்லது துருவ மாற்றம் இதைக் குறிக்குது என்கிறார்கள்.

3. வரலாற்று ஆசிரியர்கள் இவர்கள் கிழக்கில் குடியேறிய அங்கிருந்த வேறு மனித இனங்களை அழித்துவிட்டு வாழத்தொடங்கினார்கள் என்கிறார்கள்..

4. புவியியலார் சொல்றது என்னன்னா, கிரேட் அட்லாண்டிக் ரிட்ஜ்,, அதாவது அட்லாண்டிக் மலைத்தொடர்.. இதில் அட்லாண்டிஸ் அழிந்து விட்டது அப்படின்னு சொல்றாங்க.


இதில எப்படி அழியும் மலைன்னா மேல தானே வரணும் என்று கேட்கத் தோணுதில்ல.. 

யூரேசியன் பிளேட்டும், அமெரிக்கன் பிளேட்டும் ஒன்றை விட்டு ஒன்று விலகிப் போகின்றன, இதனால் பிளவு ஏற்பட்டிருக்கிறது... இது நிலநடுக்கங்களை உண்டாக்க மேலே இருந்த நகரங்கள் கடலுக்குல் ஆழ்ந்தன..

அந்தப் பிளவு பெரிதாக பெரிதாக,பூமியின் மேலோடு வாய்பிளக்க, பூமியின் உட்கரு எரிமலைகளாக சீறி வெளிப்பட்டு இந்த மலைத்தொடர்கள் உண்டாகி இருக்கின்றன.


6. ஒரு விண்கல் விழுந்திருக்குமா என்ற சந்தேகமும் பலருக்கு உண்டு, இதனால் முதலில் மிகப் பெரிய சுனாமி போன்றவை ஏற்பட்டு அழிவை உண்டாக்கி இருக்கு, அது ஏற்படுத்திய வெப்பத்தால் பெருவெள்ளமும் உண்டாகி இருக்கும். பின் பனியுகம் தோன்றி... பனி உருகியபோது அட்லாண்டிஸ் கடலுக்குள் மூழ்கி இருக்கும் என்கிறார்கள் சிலர். ஆனால் இது இந்த அளவு ஆதாரங்களை விட்டு வைத்திருக்குமா என்ற கேள்விக்கு பதில்லில்லை.

5. பிளாட்டோவும் சரி இன்னும் பல கதைகளும் சரி நிலநடுக்கம் பெருவெள்ளம், சுனாமி போன்றவையே அழிவிற்குக் காரணம் எனச் சொல்லுவதும் இதுவும் சரியாகப் பொருந்துகிறது..


.

கசாபுக்கு எதிராக சாட்சி சொன்ன சிறுமிக்கு பள்ளியில் அட்மிஷன் மறுப்பு !!!

செய்தி பிரசுரம் ஆன நாளிதழ், நன்றி - தினகரன்


பாந்த்ரா: மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாபுக்கு எதிராக சாட்சி சொன்ன தேவிகா ரோத்வன் என்ற 11 வயது சிறுமியை பள்ளியில் சேர்த்துக்கொள்ள பாந்த்ரா கிழக்கில் உள்ள நியூ இங்லீஷ் ஸ்கூல் மறுத்து விட்டது. 


கசாபுக்கு எதிராக சாட்சி சொன்னதற்காகவே தன் குழந்தைக்கு அட்மிஷன் கொடுக்க அந்த பள்ளி மறுத்து விட்டதாக தேவிகா வின் தந்தை நட்வர்லால் ரோத்வன் கூறினார்.

“என் குழந்தைக்கு அட்மிஷன் கேட்டு இரண்டு மூன்று தடவை அந்த பள்ளிக்கு சென்றேன். ஆனால் இறுதியாக அவர்கள் என் குழந்தையை சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டனர்" என்று நட்வர்லால் கூறினார். 

ஆனால் இந்த பள்ளியை நடத்தி வரும் இந்தியன் எஜுகேஷன் சொசைட்டியின் கவுரவ செயலாளர் அமோல் தம்தாரே இந்த குற்றச்சாட்டை மறுத்து இருக்கிறார். 

“அந்த சிறுமி குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். ஆனால் 1 ஆம் வகுப்பு வரை மட்டுமே அவள் படித்து இருக்கிறாள். இப்போது 5 ஆம் வகுப்பில் சேர விரும்புகிறாள். மேலும் அவளுக்கு ஆங்கிலம் சிறிது கூட தெரியாது" என்று அவர் கூறினார்.


இருந்தாலும் கூட மாநில அரசும் கல்வி இலாகாவும் உதவி செய்வதாக இருந்தால் அந்த சிறுமியை சேர்த்துக் கொள்ள தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

“அந்த குழந்தைக்கு கல்வி கற்றுத்தர எங்கள் ஆசிரியர்கள் கூடுதல் முயற்சிகளை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அரசும் கல்வி இலாகாவும் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்Ó என்று தம்தாரே கூறினார். 


--------------------------------------------------------------------------

எனது சந்தேகங்கள் :

எந்த வகுப்பும் படிக்காமலேயே நேரிடையாக எட்டாம் வகுப்புத் தேர்வு எழுதலாம் என்ற அமைப்பு நம் கல்வித் திட்டங்களில் உள்ளது.

அப்படி இருக்க, ஒன்றாம் வகுப்பு படித்த ஒரு மாணவி 5 ஆம் வகுப்பு சேர கல்வி இலாகாவும், மாநில அரசும் எந்த வகையான உதவிகளை ஒரு பள்ளிக்குச் செய்ய வேண்டும் என்று எனக்குப் புரியவே இல்லை...

ஆங்கிலம் சிறிது கூடத் தெரியாதவருக்கு ஆங்கிலம் சொல்லித்தர ஒரு தனி ஆசிரியர் தேவைதான். ஆனால், நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழக்கில் தைரியமாகச் சாட்சி சொன்ன ஒரு குழந்தைக்கு அரசு உதவியாகவேண்டும் என்பது ஒரு பக்கம். (கசாபுக்கு ஏறத்தாழ 50 கோடி செலவு செஞ்சாச்சு.. இந்தக் குழந்தைக்கு சில ஆயிரங்கள் சலுகை தரக் கூடாதா என்ன?

ஆனால் சமுதாயத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் "'வரி விலக்கு பெற்ற" பொது நல நிறுவனங்களால் ஒரு மாணவியின் கட்டணத்தை தள்ளுபடி செய்து கல்விக்கண் திறக்க இயலா விட்டால் அவற்றிற்கு வரிவிலக்கு ஏன் என்ற கேள்வி எழுகிறதல்லவா?

ஆக அரசு செய்ய வேண்டியது என்னவென்றால், அந்தப் பள்ளியின் அங்கீகாரத்தை உடனடியாக இரத்து செய்வதுதான் அல்லவா?

இல்லை இல்லை கட்டணத்தைப் பற்றிப் பேசலை, அந்தப் பொண்ணுக்கு ஆங்கில டியூசன் யார் எடுப்பது என்று கேட்கலாம். அதற்கு தேவை என்ன? தினம் 2 மணி நேர அதிகப்படியான ஒரு ஆசிரியரின் உழைப்பு அல்லவா?

ஒரே ஒரு ஆசிரியர் தினம் இரண்டு மணிநேரம் செலவிட்டால் அந்த மாணவி இன்னும் இரண்டு வருடங்களில் எட்டாவது தேர்ச்சி பெற முடியும். அப்படி இருக்க அரசும், கல்வி இலாகவும் இதில் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் தெளிவாகச் சொல்லி இருக்கலாம்.

எதைச் சிந்திக்கும் போதும், முதலில் இக்காரியத்தைச் செய்ய வேண்டும் என உறுதியாக முடிவு எடுக்க வேண்டும். பிறகு அதற்கான வழி முறைகளை ஆராய வேண்டும். அதற்கு தேவையானவற்றைச் சிந்திக்க வேண்டும். அதன் பிறகு திட்டமும் செயலாக்கமும் இருக்க வேண்டும்.

ஒரு வருட ஆங்கிலப் பயிற்சி, அடிப்படைக் கணித / அறிவியல் பயிற்சி கொடுத்தால் அந்த மாணவி அடுத்த வருடம் ஆறாவது பாடத்திட்டத்துக்கு தயாராக முடியும்.. (அதுதானே அவங்க முக்கியப் பிரச்சனையே...)

இப்படி பிரச்சனையை எப்படித் தீர்ப்பது என்று அணுகாமல், அதற்கு என்ன சாக்கு சொல்வது என்பது கல்வி நிலையங்களில் ஆரம்பித்து போபால் பிரச்சனை வரை இருக்கு... 

அப்படி எப்படிங்க நாம முன்னேற முடியும்? 

முடிஞ்ச வரை சுயநலத்திற்காவது நான் சொன்னதை கடை பிடிக்க ஆரம்பிங்க.. அதாவது உறுதியோட யோசனை செஞ்சி திட்டம் போட்டு வேலை செய்ங்க... இன்னிக்கு வாழ்க்கையில் உயருகிற அத்தனை பேரும், காரியத்தை முடிப்பதில் இப்படி உறுதி உள்ளவங்கதான்..


பொதுநலம்? நாம இப்படி உறுதியான முடிவெடுக்க பழகிட்டா பொதுநலத்தில் அதை நாமே மிக எளிதாகச் செய்யலாம். யாரையும் நம்ப வேண்டிய அவசியம் இல்லை.

.

conspiracy theories 1 -- நிலவில் மனிதன் கால் வைத்தது பொய்? - 5


(1 newton = 0.224808943 pounds force)

இதை வச்சுப் பார்த்தா
நிலவிறக்கக் கூட்டின் திரும்ப வரும் எடை

10,024 pounds + 300 = 10324 pounds

இதை வச்சுப் பார்த்தா இதைத் தூக்க 46071 நியூட்டன் த்ரெஸ்ட் தேவைப்படும்.ஆனா நிலாவில இருப்பது பூமியின் 1/6 புவி ஈர்ப்பு விசைதான் என்பதால் இதற்கு 7000 நியூட்டன் த்ரெஸ்ட் போதும். நாம் ஏறும் வேகத்திற்காக இதில் இரண்டு மடங்கு த்ரெஸ்ட் தேவைப்படும். எனவே 14000 நியூட்டன் த்ரெஸ்ட் இருந்தால் தான் நாம நிலாவில் இருந்து அதைச் சுற்றி வரும் கட்டுப்பாடு கூட்டுக்கு வர முடியும். இவங்க டிசைன் 15700 நியூட்டன்.. 

ஆனால் எவ்வளவு எரிபொருள் என்பதில்தான் விஷயம் இருக்கு, மொத்தமா பார்க்கப் போனா திட்டமிட்டதை விட 5 நிமிஷத்திற்கான அதிக எரிபொருள் மட்டுமே இருக்கு... அதாவது நிலவிறக்கக் கூடு இறங்க இரண்டு நிமிஷம் தாமதமானாலோ அல்லது ஏறுவதில் 2 நிமிஷம் தாமதமானாலோ அங்கேயே சமாதிதான்..

நிலவில் இறங்குவது எப்படின்னு பாருங்க..

1. முதலில் நிலவுச் சுற்றுப்பாதையில் பார்க்கிங் சுற்றுப்பாதைக்கு கட்டுப்பாடு கூடு, நிலவிறக்கக் கூடு இணைந்த தொகுதி வந்து சேரும். 



2. கட்டுப்பாடுக் கூட்டில் இருந்து நிலவிறக்கக் கூட்டுக்கு குடிபெயரும் மக்கள், அதை கட்டுப் பாட்டுக் கூட்டில இருந்து பிரிக்க வேண்டும்.

3. இப்படிப் பிரிந்த நிலவிறக்கக் கூடு நிலவிலிருந்து 50000 அடி உயரம் வரை வேகமாக இறங்கும் (நம்ம போயிங் 747-400 பறக்கற உயரம்). இப்பதான் இஞ்சினை ஸ்டார்ட் செய்யணும்.

4. எஞ்ஜினில் உள்ள ஆட்டோமேடிக் கண்ட்ரோல் மூலம் 10000 அடி உயரம் வரை மெதுவா பிரேக் போட்டு இறங்கும். 

5. இங்கிருந்து நேர் செங்குத்தாக 700 அடி வரை நிலவிறக்கக் கூடு இறங்கும். 

6. சுமார் 2000 அடி உயரத்திற்கு வரும்பொழுதுதான் மனுஷனுக்கு கட்டுப்பாடு கைக்கு வரும். கல்லு முள்ளு பாறை குழி எல்லாம் பார்த்து சரியான இடத்தில் இறக்கணும்.

இப்ப இந்த 700 அடி உயரத்தை 2 நிமிஷத்தில் கடந்து இறங்கணும்.. அப்படி இரண்டு நிமிஷத்தில இறங்க முடியலைன்னா, அப்படியே திரும்பிட வேண்டியதுதான்..

ஆக திட்டமெல்லாம் பக்காவாத்தான் இருக்கு.. 

அப்போலோ 11 இறங்கிய போது 25 வினாடிகளுக்கான எர்பொருளே மிஞ்சி இருந்ததா தகவல்கள் சொல்லுது..

இதை வச்சுப் பார்க்கும் போது இத்தனைத் தகவல்களும் மிக நுட்பமாக கணக்கு போடப்பட்டு வச்சிருக்கறது புரியும். நாசாவின் அத்தனை புள்ளி விவரங்களும் பார்த்தீங்கன்னா, மிகச்சரியா கணக்கு போடப்பட்டு வச்சிருக்குமே தவிர டாலரன்ஸ் என்னும் கொஞ்சம் அதிகம் இருக்கணும் என்ற விதமே இருக்காது..

இரஷ்யா ஏன் மனிதனை ஒரு அளவுக்கு மேல் அனுப்பலை? அமெரிக்கா ஏன் அந்த நிலா பயணத்திற்குப் பின் மனிதனை அனுப்பலை என்பதுதான் நிலாவில் இறங்கியது பொய் என்பதற்கான அடிப்படைச் சந்தேகத்தை வரவழைக்கும் ஒன்றாகும்..

அதுக்கு பூமியையும் அதைச் சுற்றி இருக்கிற பல அடுக்கு வளி மண்டலத்தையும், அதற்கு பின்னான அண்டவெளியையும் பற்றி கொஞ்சம் தெரிஞ்சிக்கணும். 



பூமிக்கு பல அடுக்கு பாதுகாப்பு இருக்கு, அதை இரண்டு வகையா பிரிக்கலாம்.


1. மின்காந்தப் புல பாதுகாப்பு..


இதுதான் முக்கியமான ஒண்ணு. இது எப்படி ஏற்படுதுன்னு பார்ப்போம்.

பூமியின் காந்தப்புலத்தின் காந்த இரு துருவங்கள், அதன் இரு புவியியல் துருவங்களுக்கு அருகில் தற்போது அமைந்திருப்பதாக தோராயமாக கருதப்படுகிறது. இயக்கவியல் கொள்கையின் படி, காந்தப்புலமானது, பூமியின் உருகிய நிலையில் உள்ள வெளிக்கருவில், வெப்பம் கடத்தும் பொருள்களின் கடத்துத் திறனை உருவாக்கி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இடத்தில், உருவாக்கப்படுகிறது. இதுவே, பூமியின் காந்தப்புலத்தை உருவாக்குகிறது. வெளிக்கருவில், வெப்ப கடத்துத் திறன் ஒழுங்கற்ற நிலையில் இருக்கும். மேலும், அது அவ்வப்போது மாறிக்கொண்டேயிருக்கும். இந்த, காந்தப்புல மாற்றம் ஒவ்வொரு மில்லியன் வருடத்திற்கு சில முறை ஒழுங்கற்ற இடைவெளியில் மாறிக்கொண்டேயிருக்கும். இறுதியாக இந்த மாற்றம் 700,000 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது.

இந்த புலமானது காந்த அடுக்கை (magnetosphere) ஏற்படுத்தி, சூரியக் கதிர் காற்றுக்கு அருகில் உள்ள துகள்களை விலக்குகிறது. சூரிய கதிரின் பௌ ஷாக் (bow shock) நுனி புவியின் ஆரத்தை போன்று 13 முறை கொண்டது. காந்தப்புலதிற்கும் சூரிய காற்றுக்கும் நிகழும் மோதலினால் வான் ஆலன் கதிர்வீச்சு வளையம் உண்டாகிறது. அது பொது மையமாகக்கொண்ட, டாரஸ் (torus) வடிவமுள்ள மின்னூட்டதுகள்கள் கொண்ட பகுதியாகும். பிளாஸ்மா புவியின் வளிமண்டலத்தில் காந்த துருவங்களில் நுழையும்போது கனல் (அரோரா) ஆக மாறுகிறது.



வான் ஆலன் கதிர் வீச்சு வளையம் --- நல்லா நோட் பண்ணி வச்சுக்குங்க... அப்பால பார்ப்போம்.



சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சை எப்படி இந்தக் காந்தப்புலம் திசை திருப்பி விடுதுன்னு பாருங்க..







சூரிய புயலின் போது அளவிற்கு அதிகமாக கதிரியக்கம் இருக்கும் பொழுது, இந்தக் கதிர்கள், காந்தப் புலத்தையும் தாண்டி செயற்கை கோள்கள், பூமியில் இருக்கும் மின் சாதனங்கள் போன்றவற்றை பாதிப்பதாக நாம நிறைய தடவை படிச்சிருக்கோம். அப்படி இருக்க, தடுப்பே இல்லாத விண்வெளியில் இவை எப்பவுமே அதிகமாத்தானே இருக்கும். அப்படி இருக்க இந்தக் கதிரியக்கங்களால் எப்படி மின்சாரத்தால் இயங்கும் சாதனங்கள் பாதிக்கப் படாமல் இயங்கும் என்பது முதல் சந்தேகம்.

இந்த வேன் ஆலன் பெல்ட் இருக்கே.. அதைக் கண்டு பிடிச்சதும் அமெரிக்கா தான்,


பூமியின் மின்காந்தப் புலத்தினால் விலக்கப்படும் சூரியக் கதிர்கள் பிளாஸ்மா மாதிரி பூமியின் மறுபக்கம் விலகிப் போகுது இல்லையா? அப்போ அந்தப் பாதைகளில் கதிரியக்கம் மிக அடர்த்தியா இருக்கும்... அதாவது விண்வெளியை விட இந்த வான் ஆலன் ரேடியேஷன் பெல்ட் இருக்கே இதைத் தாண்டறதுதான் மிகப் பெரிய கஷ்டமான சமாச்சாரம், ஏன்னா இங்க கதிரியக்கம் குவிக்கப் பட்டு ஆறு மாதிரி ஓடிகிட்டு இருக்கு,,, 





இதில உள் பெல்டு வெளி பெல்டு என இரண்டு இருக்கு.




இவை மின்சார, மின்னணு சாதனங்களை தகர்த்து விடும். இதைக் கண்டு பிடித்தது எக்ஸ்ப்ளோரர் (அமெரிக்கா 1959 - ல்) விண்கலத்தின் மூலம் வான் ஆலன் என்பவர்.

இந்தப் பெல்ட் அருகில் வரும்பொழுது ஹப்புள் டெலஸ்கோப் கூட எல்லா இயக்கங்களையும் மூடி விட்டு கம்முன்னு ஆயிடும்.. 

இதைத் தாண்டி அப்போலோ பயணங்களைத் தவிர வேறு மனிதப் பயணம் நடந்தது இல்லை.. 

என்னதான் இரஷ்யா நிலாவுக்கு போறதை மூட்டை கட்டி வச்சாலும், இதைத் தாண்டிப் போகிற மாதிரி ஒரு திட்டமும் போடலை. இரஷ்யா என்ன செஞ்சது? மனுஷனை அனுப்பலை. மெஷினை அனுப்பி சந்திரனில் இருந்து கல்லையும் மண்ணையும் எடுத்து வந்து ஆராய்ந்தது.. லூனா 16. 17, 20, 21 இப்படி பல இராக்கெட்டுகள் மூலம் சந்திரனோட மண்ணை அள்ளி வந்தது.

இன்றைய தேதி வரை இந்த வான் ஆலன் பெல்ட் பக்கத்தில போனா சில தெருக்களில் மேளதாளம் வாசிக்காம அமைதியா பிள்ளையார் ஊர்வலம் போகிற மாதிரி செயற்கைக் கோள்கள் எல்லாத்தையும் பொத்தி வச்சுகிட்டு கடந்து போகுது..

இந்த பெல்டுக்கு வெளிய அந்தப் பக்கம் சில செயற்கைக் கோள்களை நிறுத்தலாமே அப்படின்னு சிலருக்குத் தோணும்.. ஆனா யாராலும் வேலை செய்யும் செயற்கைக் கோள்களை எதாவது ஒரு கிரகத்தின் காந்தப் புலம் இல்லாத இடத்தில் செயல்படுத்த முடியலை என்பதே உண்மை.. செவ்வாய், சனி, குரு இப்படி கிரகங்களின் காந்தப் புலன்களை அடைந்த பிறகே செயற்கைக் கோள்களை செயல் பட வைப்பாங்க.. அதை வரை ஒவ்வொண்ணும் கூட்டுக்குள்ள பதுங்கிக் கிடக்கும்.

இந்த ரேடியேஷன் பெல்ட்டை போகும் பொழுது கடந்ததை விட, திரும்ப வரும் பொழுது கடப்பது ரொம்பவே கஷ்டம்..ஏன்னா படம் பார்த்திருப்பீங்க.. திரும்ப வரும் போது கண்ட்ரோல் மாட்யூலோட இருக்கும் இராக்கெட்டில் ஷீல்டிங் ரொம்பவே குறைந்து போய் இருக்கும்..

சந்திரனில் இப்படிப் பட்ட காந்தப் புல பாதுகாப்பு இல்லையே! அப்படி இருக்க எப்படி மின்னணு சாதனங்கள் வேலை செய்தது என்பதும் சந்தேகப் படுபவர்களின் கேள்வி. கேமிராவுக்கு எல்லாம் அலுமினிய ஷீல்டு போட்டுதான் இருந்தாங்க என்று சொல்லலாம்.. 

நமது இண்டர் நேஷனல் ஸ்பேஸ் ஸ்டெஷன்ல விண்வெளி நடை பயில்வதற்கும், நிலாவில விண்வெளி நடை பயில்வதற்கும் இதனால மிகப் பெரிய வித்தியாசம் இருக்கு. இங்க கதிரியக்கம் குறைச்சல்தான்.. 

இரஷ்யா விண்வெளிப் பயணிகளின் பாதுகாப்பை இரண்டாம் பட்சமாக கருதும் நாடு.. ஆனால் அமெரிக்க அதை முதன்மையாக கருதும் நாடு.. சந்திரனை இயந்திரக் கை மூலம் 1959 லயே தொட்டது இரஷ்யா. ஆனால் அங்கே மனிதனை அனுப்ப அது விரும்பவில்லை. அதனால் அதிகப் பயனில்லை என்று இரஷ்யாவிற்கு முதல்லயே தெரிஞ்சிருக்கலாம். இரஷ்யா விண்வெளி ஆராய்ச்சிக்கு மிர் விண்தளத்தையும், அங்கெ சென்று வர விண்கப்பலையும் கட்டுவதில் கவனத்தை திருப்பிடுச்சி.. அமெரிக்கப் போட்டிக்காக நிலாவில் இருந்து மண் எடுத்து வந்ததைத் தவிர விண் ஆய்வுக் கூடத்தில் தான் இரஷ்யா கவனத்தை காட்டியது. 

அமெரிக்காவின் ஸ்கைலேப் குப்புற விழுந்தது,, மிர் உயரப் பறந்தது... 

இரஷ்யா விண்வெளியில் நீண்ட நாட்கள் வாழத் தேவையான நுட்பத்தை உண்டாக்கியது, அதை இப்போ அமெரிக்கா கடன் வாங்குது...


அல்மேஸின் சல்யூட்2, சல்யூட்3, சல்யூட்5, மிர், இப்படி இதற்கு முந்தைய அத்தனை வெற்றிகரமான விண்வெளித் தளங்கள் எல்லாம் இரஷ்யாவுனுடையவை. அமெரிக்காவின் ஸ்கைலேப் தோல்வியைச் சந்தித்தது...

இன்னும் கூட அமெரிக்கா தனித்து ஒரு விண்வெளி நிலையத்தைக் கட்ட முடியாமல் தவிக்கிறது..

நிலைமை இப்படி இருக்க விண்வெளித் துறையில் இன்னும் மனிதனை நீண்ட நாட்கள் தன் தொழில்நுட்பத்தின் மூலம் தங்க வைக்க இயலாத அமெரிக்காவா நிலாவிற்கு மனிதனை அனுப்பியது?

கேள்வி ஞாயமாத்தான் இருக்கு.. இல்லையா? 



தொடரும்

.

Tuesday, June 22, 2010

conspiracy theories 1 -- நிலவில் மனிதன் கால் வைத்தது பொய்? - 4

சோவியத் ரஷ்யா 1959 ஜனவரி 2 ஆம் தேதி லூனா (நம்ம பழைய காலத்து லூனா இல்லீங்க.. இது செயற்கைக் கோள்) 1 என்னும் செய்ற்கைக் கோளை நிலாவை சுற்றி வரச் செய்தது. 1953 செப்டம்பர் 3 ஆம் தேதி நிலாவின் மீது லூனா 2 க் கொண்டு மொதியது.

1966 ஆம் வருஷம் பிப்ரவரி மூணாம் தேதி லூனா 9 நிலவின் மேல் இறங்கியது..

ஆனால் அமெரிக்காவோ 1964 ஆம் ஆண்டுதான் நிலாவில் முதலில் வெற்றிகரமாக மோதியது.

Ranger 7 367 Atlas - Agena 28 July 1964 Lunar impact Success - returned 4308 photos, crash impact

இதற்கு முன்பான பயனியர் விண்கலங்களும் (9 முயற்சிகள்) ரேஞ்ஜர் கலங்களும் (6 முயற்சிகள்) படுதோல்வியைச் சந்தித்தன.

இப்படியாக சோவியத் யூனியன் முண்ணனியிலேயே இருந்தாலும் நிலவில் மனிதனை இறக்க ரஷ்யா ஒரு முயற்சியுமே செய்யவில்லை. ஏன் பூமியின் கதிரியக்க பாதுகாப்பு வளையத்திற்கு அப்பால் மனிதனை அனுப்பவே இல்லை.

ஆனால் அமெரிக்கா மட்டுமே அதுவும் அப்போலோ 8 முதல் அப்போலோ 17 வரையான ஒன்பது முறைகள் பூமியின் கதிரியக்க தடுப்பு எல்லையைத் தாண்டி மனிதனை அனுப்பி இருக்கிறது.

இதுவரை பிண்ணனிக் கதையைப் பார்த்தோம்....

இப்போ கொஞ்சம் முன்னால வருவோம். நிலவிற்கு போய் இறங்கி விட்டு திரும்ப வரணும்னா என்னென்ன நடக்கும்னு தோராயமா பார்ப்போம்.

முதலில் பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து விடுபட்டு விண்வெளிக்குப் போகணும். இதற்கு ஸாடர்ன் 5 என்ற ராக்கெட் உபயோகப் படுத்தப் பட்டது.

விண்வெளிக்குச் சென்ற பிறகு நிலவை நோக்கிப் பயணப்பட குறைந்த பட்ச எரிபொருளே தேவை.. கட்டுப்பாட்டு கூடு, நிலவிறக்க கூடு இரண்டும் நிலவை நோக்கி உந்தப்படும்..

நிலவின் சுற்றுப் பாதையை அடைந்த பிறகு நிலவிறக்கக் கூடு பிரிந்து தனது எரிபொருளை உபயோகித்து நிலவில் இறங்க வேண்டும். இதற்கென்று அந்தக் கூட்டில் இராக்கெட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். இவை மிகக் கட்டுப்பாட்டுடன் எரிக்கப் பட்டால்தான் இறங்க முடியும்.

பிறகு நிலாவில் இருந்து புறப்படும் போது சக்தி வாய்ந்த ராக்கெட்டுகள் தேவை. இந்த நிலவிறக்கக் கூடு கட்டுப்பாட்டுக் கூட்டுடன் இணைந்த பிறகு... கட்டுப்பாட்டுக் கூடு மறுபடி பூமியை நோக்கிப் பாய வேண்டும்.

பிரச்சனை என்னன்னா, மூன் லேண்டிங் மாட்யூலில் இராக்கெட் எங்க இருந்தது? அதோட சைஸ் என்ன? கண்டிப்பா நாம வீடியோக்களில் பார்த்த மூன் லேண்டர் நிலவின் ஈர்ப்பு விசையை தாண்டி கட்டுப்பாடு கூடு இருந்த ஆர்பிட்டுக்கு வந்திருக்கத் தேவையான அளவு எரிபொருள் கொண்ட ராக்கெட்டுகள் எங்கே என்ற கேள்விக்கு பதில் ????

போனாங்க சரி எப்படி திரும்பினாங்க???

இங்கதான் மக்களுக்கு முதன் முதலா மனிதன் சந்திரனில் இறங்கியது பொய்யோ என்கிற சந்தேகம் ஆரம்பிச்சது..

நீங்களே பாருங்க இந்தப் படத்தை.. . இந்த அமைப்பில இருக்கிற லேண்டர் எப்படிங்க நிலாவின் ஈர்ப்பு விசையைத் தாண்டி நிலவைச் சுற்றி வரும் கட்டுப்பாட்டுக் கூட்டை அடையும்?


பூமிக்கு திரும்பி வந்த சர்வீஸ் மாட்யூல்




சரி இப்படி வச்சுக்குவோம், பூமியில் இருந்து போன இராக்கெட்டின் ஒரு ஸ்டேஜ் திரும்பி வர பயன் பட்டது அப்படின்னு..

அப்போலோ 11 ஐ சுமந்து கிட்டுப் போன சாடர்ன் V விவரங்கள் இங்கே...


இதில மூணு ஸ்டேஜ்கள் இருந்தது.. முதல் ஸ்டேஜ் S-IC, இரண்டாம் ஸ்டேஜ் S-II மூன்றாம் ஸ்டேஜ் S-IVB


முதல் ஸ்டேஜ் 68 கிமீ உயரம் வரை கொண்டு செல்லும். மணிக்கு 6164 மைல் வேகத்தை தரும்.

இரண்டாம் ஸ்டேஜ் 6 நிமிடம் எரியும். இது பூமிச் சுற்றுப் பாதைக்கு கொண்டு செல்லும். இது புவிச் சுற்றுப் பாதையில் கட்டுப்பாட்டுக் கூடு மற்றும் நிலவிறக்கக் கூட்டை செலுத்தும். அதாவது இது மொத்தமாக 4200 கிலோ மீட்டர் தூரம் வரை எரியும். (உயரம் அல்ல தூரம் கவனிக்க)

மூணாவது ஸ்டேஜ் சுமார் 191 கி.மீ உயரத்தில் மணிக்கு 17,432 மைல்கள் வேகத்தில் சுற்றுப்பாதையில் இவற்றை ஏவி விடும்..

பிறகு மிச்சம் இராக்கெட் ஸ்டேஜ்ல எஸ்கேப் சிஸ்டம் இருக்கு,, அது 667000 நியூட்டன் த்ரஸ்ட் கொண்டது... இதை மட்டுமே வச்சு நிலாவில் இருந்து பூமிக்கு திரும்பியாகணும். நிலவில் இறங்கி ஏற கூட்டுக்கு 15700 நியூட்டன் த்ரஸ்ட் கொண்ட ஏற்ற இஞ்சினும், 4670 லிருந்து 46700 நியூட்டன் த்ரஸ்ட் கொண்ட இறக்க எஞ்சினும் தனியே இருக்கு


நிலாவை நோக்கி பயணப்பட்ட பகுதி இவ்வளவுதான்...


கீழ் பகுதியில் இருப்பது லூனார் லேண்டர் மேல் பகுதியில் கண்ட்ரோல் மாட்யூல்.

கண்ட்ரோல் மாட்யூல் இப்படித்தான் இருந்ததாம். லூனார் மாட்யூலில் இருந்து கண்ட்ரோல் மாட்யூலுக்கு பறக்கும் போதே உள்ளே செல்ல வேண்டும்...




கண்ட்ரோல் மாட்யூல் பூமிக்கு திரும்பும் அளவிற்கு எரிபொருள் இருந்ததா? என்பதுதான் முதல் கேள்வி...

நல்ல கேள்விதான்னு சொல்றீங்களா... இன்னும் குடையலாம்... சாத்தியமான்னு தான் பார்க்கிறேன்.. சூழ்நிலை அப்புறம் பாக்கலாம.


.