Thursday, July 29, 2010

சம்சாரம் அது மின்சாரம்



சம்சாரம் ஒரு
மின்சாரமாம்

உன் அப்பாவைக் கொண்டு பார்த்தால்

நீ
புனல் மின்சாரம்
(தண்ணியிலயே இருக்காரே!)

உன் அம்மாவைக் கொண்டு பார்த்தால்

நீ
அனல் மின்சாரம்
(மனுஷி இப்படியா எரிஞ்சு விழறது?)

உன் அக்காவைக் கொண்டு பார்த்தால்

நீ
அணு மின்சாரம்
(யப்பா இப்படியா வெடிக்கறது)

உன் அண்ணனைக் கொண்டு பார்த்தால்

நீ
சூரிய மின்சாரம்
(நல்லாவே வெயில்ல காயறான், பொண்ணுங்க பின்னாடி சுத்தி)

உன் தம்பியைக் கொண்டு பார்த்தால்

நீ
காற்று மின்சாரம்
(நல்லாவே சுத்தறான் ஊரையும் ஊரில் உள்ள பெண்கள் பின்னாடியும்)

எதுவாய் இருந்தால் என்ன
என் வீட்டு விளக்கேற்ற வா
மின்சாரமே நீ என்
சம்சாரமாய்...
 



-----------------------------------------------------------------------------------------------



இப்படிப் பாடி அடி விழுவலையா-ன்னு கேட்கிறீங்களா? நான் அங்க சொன்ன அர்த்தமே வேறயாச்சே!!! 

உங்கப்பா புனல் - கருணை வெள்ளம்

உங்கம்மா அனல் - கற்புக்கரசி

உங்கக்கா அணு - அளவற்ற ஆற்றல் கொண்டவள்

உங்கண்ணன் சூரியன் - ஞானப் பிரகாசம்

உங்க தம்பி காற்று - மிகவும் வேகமானவன்.. 

தலைவாழை இலை சாப்பாடு!!!



தலை வாழை இலை போட்டுச் சாப்பிடும்போது பலருக்கு ஏற்படும் சந்தேகம் இலையை எப்படிப் போடறது என்பதுதான்,


நுனி இலை இடது கை பக்கமா வருகிற மாதிரி போடணும் என்று சொல்லி மேதாவியா ஒரு பெரிய புன்னகையை காட்டுவாங்க...


சரி அதுக்கு மேல இதில என்ன இருக்கு என்று கேட்டா...


ஹி ஹி வேற என்ன இருக்குன்னு ஹிளிப்பாங்க. சரிங்க ஏன் நுனி இலை இடது பக்கம் என்றால் நூத்தில் ஒருவர் தான் வலது கையால் பிசைந்து சாப்பிடறதால வலது பக்கம் அதிக இடம் தேவைன்னு சொல்வாங்க.



அதுசரி எதை எதை எங்கே வைக்கிறோம் அப்படின்னு எதாவது வரைமுறை இருக்கா?


இருக்கே...


நூறு பேர் கிட்ட போய் என் இடது பக்கம் நுனி இலை வரணும் என்று கேட்டால்..


அந்த நூறு பேரில் ஒருத்தர் மட்டுமே கீழ்கண்ட பதிலைச் சொல்லுவார்.


பிசைஞ்சு சாப்பிட வசதிக்காக.. நாம வலது கையால் சாப்பிடுகிறோம். அதனால் நாம் சாதத்தை பிசைவது வலதுபக்கம். அதனால் வலது பக்கம் அகலமாக வருவது மாதிரி வாழை இலையை போடுகிறோம்.




வலது பக்கம் கீழ்பகுதி சாதம் இருக்கும். சாப்பிட்டு பிடிக்காததை அப்படியே இடது பக்கம் ஷிப்ட் பண்ணிடலாம்.


மேல்பக்கம் வலதுபுறமிருந்து நாம் சாப்பிட வேண்டிய வரிசையில் பக்க உணவு வகைகள் உண்டு.



உணவுடன் முதலில் சாப்பிட வேண்டியது தொகையல் / சட்னி.போன்ற்வை.


இனிப்பு முதலில் சாப்பிட வேண்டும் என்றால் இடப்பாகத்தில் கீழேயும், கடைசியாக சாப்பிடுவது என்றால் பொறியலுக்கு அடுத்ததாகவும் இடம் பிடிக்கும். அப்பளம் பொரியலின் அருகிலேயே இருக்கும்.


அடுத்து கடைசியாக ஊறுகாய், மற்றும் உப்பு ஆகியவை வைக்கப் படும்.


வாழைப்பழம் இருந்தால் அது இடதுபக்கம் வைக்கப்படும்.


இந்த அமைப்பு, சாப்பிட வேண்டிய வரிசை முறை, எளிதில் அடைவது அப்புறம் சுவை கலக்காமல் உணவருந்துவது ஆகிய மூன்று விஷயங்களுக்கு உதவுகிறது.


இடதுபக்கம் நுனிவாழை இருப்பதால் தண்ணீரை அந்தப் பக்கம் வைப்பது நல்லது.


உப்பு என்பது எப்போதாவது உபயோகப்படுத்தும் ஒன்று. இதை வாழை இலையில் இடது பக்கம் மேல் பகுதியில் வைக்கணும்.



இந்த வரிசை கட்டாயமா என்றால் இல்லைதான். ஆனால் ஆய்வுப் பூர்வமாக வரிசை சரியாக இருந்தால் உணவு வீணாவது குறைகிறது. 


------------------------------------------------------------------------------------------