Wednesday, September 15, 2010

படிச்சதும் கடிச்சதும்

 

Set என்னும் சொல்லுக்கு ஆங்கிலத்தில் 192 அர்த்தங்கள் உண்டாம்..!


எத்தனை இருந்து என்ன பிரயோசனம். நமக்குதான் ஒண்ணும் Set ஆகமாட்டேங்குதே!!!

கொசுக்களை நீல நிறம் அதிகமாகக் கவருமாம்..!

அப்புறம் பகல்ல ஏன் வானத்தை நோக்கிப் பறக்கறது இல்லை?

கங்காரு விலங்குகளால் பின்புறமாக நடக்க இயலாதாம்..!

அப்போ முன் வச்ச காலை பின் வைக்க மாட்டேன்னு சொல்றவங்களை கங்காருன்னு சொல்லலாம்னு சொல்லுங்க.


அமெரிக்கர்கள், தினமும் 75 ஏக்கர் பரப்பளவுள்ள பிட்சாவை தின்று தீர்க்கிறார்களாம்..!

ஒரு ஏக்கர் 100 செண்ட்,. ஒரு செண்ட் 100 சதுர மீட்டர். அதாவது 7 இலட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டர். ஒரு சதுர மீட்டர் பிஸாவை 16 பேர் சாப்பிடறாங்க அப்படின்னு வச்சுகிட்டா அமெரிக்காவில் 1 கோடியே25 லட்சம் பேர் ஒரு நாளைக்கு பிஸா சாப்பிடறாங்க. அமெரிக்காவின் ஜனத்தொகை 30 கோடி. அதாவது 4 சதவிகிதம் பேர். கொஞ்சம் கொறைச்சலாதான் இருக்கு.

நம்ம நாட்டுல இவ்வளவு பேர் சாப்பிடறதே இல்லை.  

சுதந்திர தேவி (அமெரிக்கா) சிலையின் சுட்டுவிரல் எட்டு அடி நீளமுள்ளது.

எட்டுன தூரம் வரை சுட்டும் விரல்னு சொல்றாங்களோ??


அடகாமா பாலைவன (சிலி) வரலாற்றில் மழையே இதுவரை பெய்ததில்லை.

அடராமா

உலகில் வாழும் மனிதர்களும், கோழிகளும் சம எண்ணிக்கை கொண்டவர்கள். ( புரட்டாசியில் கோழிகள் தொகை அதிகரிக்கக்கூடும்..!)

ஆளுக்கொரு கோழி வச்சு ஆண்டவன் படைச்சான்னு சொல்லுங்கோ!!!

(ஆளுக்கொரு தேதி வச்சு ஆண்டவன் அழைப்பான் - அப்போ

யாரழுதால் அவனுக்கென்ன காரியம் முடிப்பான்)
ஒருவகை ஹம்மிங் பறவையின் எடை நம் 5 ரூபாய் நாணயத்தைவிட குறைவு.

புதுசா? பழசா??

இல்லை 5 ரூபா மாதிரியே ஹம்மிங் பறவையும் (தேன்சிட்டு) இளைச்சுகிட்டே போகுதா?
அப்போ சுத்தத் தேன் எடையைக் குறைக்க உதவும்னு ஒரு அழகுக் குறிப்பு போட்டுடலாமே!! 

அகராதியில் ஒரு சொல்லுக்கு ஸ்பெல்லிங் தப்பா இருந்தா யாருக்குத் தெரியும்..?

படிக்கிறவங்களுக்கு.


நாய்களுக்கு பிடித்த சுவைன்னு விளம்பரம் செய்யறாங்களே.. எப்படிக் கண்டுபிடிச்சாங்க..?

நாய்க்கு பிஸ்கட் போட்டு பிராக்கெட் பண்ணும் திருடங்கதான் சொன்னாங்களாம்.



அரளிக்கொட்டையை அரைச்சுக் குடிச்சா செத்துப்போயிடுவோம்ன்னு உலகுக்கு உணர்த்திய தியாகிக்கு அப்படி நடக்கும்ன்னு முன்னாடியே தெரியுமா..? இல்லே பசிக்கு தின்னுருப்பாரா..?

அது ஒரு மாமியாரோ மருமகளோ சொன்னதா இருக்கலாம் இல்லியா! தியாகி மட்டும் இல்லை துரோகியும் கண்டுபிடிப்புகளைச் செய்யலாம். ஹி ஹி..

சோதிடர் லாட்டரி வென்றார்.. / குதிரைப்பந்தயத்தில் வென்றார்ன்னு ஏன் தகவலே வரமாட்டுது..?

அவங்களுக்குக் கிடைக்காதுங்கறது அவங்க ஜாதகத்தில இருக்கறது அவங்களுக்குத் தெரிஞ்சிருக்குமோ?? ஏன்னா இந்த லாட்டரியை வெல்வேன் அந்த பதக்கத்தை வெல்வேன் அந்த பந்தயத்தை வெல்வேன் அப்படின்னு அவங்க அறிக்கை கூட விடறதில்லையே!!!

டோக்கியோ நகரில், காரைவிட சைக்கிள் சீக்கிரம் பயணதூரத்தைக் கடக்கும்..!


பெங்களூரிலும் அப்படித்தானாம்..



சூதாட்ட நகரம் லாஸ் வேகாஸில், எந்த சூதாட்ட விடுதியிலும் கடிகாரம் இருக்காது..!

நாம கடிகாரம் கட்டிகிட்டு சூதாட்ட விடுதிக்குள்ளப் போனா விடமாட்டாங்களா? அடப் பாவமே! நான் உள்ளயே அடகு வச்சுக்கற வசதி இருக்கும்னு நெனச்சேன். 

பொதுவாகவே வாயை மூடிட்டு இருக்கறது நல்லது.. முக்கியமா நீங்க தண்ணீரில் மூழ்கிட்டு இருக்கும்போது..!

ஆமாம் வாயைத் திறக்காம எப்படி தண்ணியில முழுகறது?

ஒருக்காலும் உங்களை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள்.. அவர்கள் இந்த நிலையை அடைய என்னென்ன அவமானங்களை சந்திக்கவேண்டியிருந்ததோ..?

அதை கேட்டுச் சந்தோஷப்படவாவது ஒப்பிடணும் போல இருக்கே!!!

ஒரு வேலையை மகா சொதப்பலா செய்யறதிலக்கூட ஒரு நன்மை இருக்கு.. மறுபடி உங்ககிட்ட அதே வேலையைத்தர யாருக்கும் தைரியம் வராது..!

அதுக்குப் பதிலா வேலையே செய்யாம இருந்தா எந்த வேலையையுமே யாருமே குடுக்க மாட்டாங்க இல்லியா?

சமரசம் : நமக்கு கிடைத்திருப்பதே மற்றவர்களுக்கு கிடைத்திருப்பதைவிட அதிகம் என்று எல்லோரையும் நம்பவைக்கும் கலை..!


அடி உதையைக் கூடவா?? 
.

Tuesday, September 7, 2010

உங்க மேனேஜர் இம்புட்டு நல்லவரா?






கீழே இருப்பது இணையத்தில் பழகிப் புளித்துப் போன மென்பொருள் புராஜக்ட். நான் இந்த டீமுக்கு மேலாளரா இருந்தால் அவர்களின் பணி ஆய்விற்கான ரிபோர்ட்டை எப்படிச் செய்வேன் தெரியுமா?




1. மார்க்கெட்டிங் என்பதன் உச்சமே கஷ்டமருக்கு என்ன தேவை என்ப்தை மறக்கச் செய்வதே ஆகும். வாடிக்கையாளருக்கு என்ன வேண்டும் என்பதைக் கொடுக்க ஒரு சேல்ஸ்பாய் போதும். இதுதான் நீங்கள் விரும்புவது என ஒரு பொருளை வாடிக்கையாளருக்கு அறிமுகப் படுத்துவதே மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலை. வாடிக்கையாளரும் அந்த விரிவுரையில் மயங்கி ஆர்டர் கொடுத்திருக்கிறார். எனவே மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் தன் பணியைச் செம்மையாகச் செய்திருக்கிறார்.



வாடிக்கையாளருக்கு தன் தேவையைச் சரியாக விவரிக்கத் தெரியவில்லை. மூன்று பலகைகள் அவருடைய விவரிப்பில் இருக்கின்றன. இரண்டை அவர் உபயோகப்படுத்தவே போவதில்லை.


புராஜக்ட் லீட் தன்னுடைய மேன்மையான நேரத்தை உபயோகப்படுத்தி, மூன்று பலகைகள் தேவையில்லை ஒரே பலகை போதும் என சம்மதிக்க வைத்துள்ளார். இதனால் தயாரிப்புச் செலவு வெகுவாக குறையும். வாடிக்கையாளர் தான் ஊஞ்சலாட விரும்புவதாக ஆரம்பத்தில் சொல்லவே இல்லை. அதனால் கயிறின் இரு முனைகளையும் இருவேறு கிளைகளில் கட்டியதன் மூலம் எடை வெவ்வேறூ கிளைகளுக்கு பிரிவதால் உறுதி அதிகமாகிறது. இதனால் ஊஞ்சல் மேலும் அதிக எடையைத் தாங்கும் சக்தி உள்ளதாக இருக்கிறது. எனவே புராஜக்ட் லீட் தன்னுடைய நுண்ணறிவின் மூலம் செலவைக் குறைத்து தரத்தை உயர்த்தி மிகச் சிறப்பான காரியம் செய்திருக்கிறார்.

இதைப் பொறியாளர் வடிவமைத்த பிறகே ஊஞ்சலாடவும் வெண்டும் என்ற மாற்றம் வந்திருக்கிறது. அதை, மிகத் திறமையாக பொறியாளர், மிகக் குறைந்த நேரத்திலும், மிகக் குறைந்த மாற்றங்களுடனும் வடிவமைத்து இருக்கிறார். இது அவரின் மிகச் சிறந்த மதிநுட்பத்தையும் செயலாக்கத் திறனையும் காட்டுகிறது.

ப்ரோக்ராமருக்கு வாடிக்கையாளர் சரியான தகவல்களைத் தரவில்லை. அவர் சொன்னது பலகையை மரத்தில் இருபுறமும் கட்டவேண்டும் என்பதுதான். அவருடைய இதற்கு முந்தைய புராஜக்ட் ஒரு பசுவை மரத்தில் கட்டுவதாகும். அதற்கு எழுதிய அதே கட்டளைகளை மீண்டும் உபயோகித்ததின் மூலம் நேரத்தை மிச்சப்படுத்தினார். இதனாலேயே புராஜக்டை உரிய நேரத்தில் முடிக்க முடிந்தது.



டெஸ்டிங் டீம் இந்த புராஜக்டில் இல்லை என்பதுதான் உண்மையானப் பிரச்சனை இங்கே. வாடிக்கையாளர் டெஸ்டிங் தேவையில்லை என்று சொல்லிவிட்டதால் புராஜக்ட் டெஸ்டிங் செய்யப்படவில்லை. எனவே கம்பெனியில் இதற்கு யாரும் பொறுப்பேற்க முடியாது.




உண்மையாப் பார்க்கப் பொனால், ஆபரேசன்ஸ் டீம் மிக அழகாக வாடிக்கையாளரின் உள்ளம் அறிந்து செயல்பட்டிருக்கிறது. சரியாக ஒரு கயிறை மரத்தில் கட்டி இருக்கிறது. வாடிக்கையாளர் அவர் இஷ்டத்திற்கேதுவான டயரையோ அல்லது தனது தலையையோ தொங்கவிட்டுக் கொள்ளலாம். எந்தக் கம்பெனி டயர் என்று சொன்னால் ஆபரேஷன்ஸ் டீம் வாங்கி மாட்டி விடுவார்கள்.

டாக்குமெண்டேஷன் டீம் இருப்பதிலியே மிகச் சிறப்பான வேலையைச் செய்திருக்கிறது. எதிர்காலத்தில் உதவும் வகையில் டாக்குமெண்டை அழகாகத் தயார் செய்திருக்கிறார்கள். தற்போது வாடிக்கையாளர்களிடம் உள்ள பொருளுக்கும் இந்த டாக்குமெண்டேசனுக்கும் ஒரு வித்தியாசம் கூடக் கண்டு பிடிக்க முடியாது. அந்த அளவிற்கு தொலை நோக்கோடு செயல்பட்டு உள்ளார்கள்.

வாடிக்கையாளர் அடிக்கடித் தன் தேவைகளை மாற்றிக் கொண்டிருக்கிறார். அதற்கேற்ப பில் செய்யப்பட்டிருக்கிறார். டிஸைனில் ஒவ்வொரு முறை மாற்றம் செய்யும் போதும் இப்படி செலவுகள் அதிகரிப்பது சகஜம்தான். வாடிக்கையளர் சரியான தேவைகளைக் கொடுத்திருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்காது.



வாடிக்கையாளர் சேவைப் பிரிவுதான் மிகக் கனக்கச்சிதமாக செயல்பட்டிருக்கிறது. அவர்கள் பிரச்சனைகளை அலசும் விதம் மிகத் தீர்க்கமானது. இத்தனை களேபரங்களுக்கும் மூல காரணம், வாடிக்கையாளர் வீட்டின் புல்வெளியில் ஒரு மரம் இருந்ததுதான் என்பதை மிகச் சரியாக கண்டு பிடித்திருக்கிறார்கள். அந்த மரத்தினால்தானே ஊஞ்சல் ஆசை. அந்த ஆசையில் தானே இத்தனைக் களேபரங்கள். அந்த மரத்தை அகற்றியதன் மூலம் பிரிச்சனையின் ஆணைவேரையே அகற்றி வாடிக்கையாளருக்கு இனி ஒரு பிரச்சனை கூட வராத அளவிற்கு செயல்பட்ட இவர்களை என்ன சொல்லிப் பாராட்டினாலும் தகும்.


ஆக மொத்தம் நம் கம்பெனியின் அத்தனை ஊழியர்களும் திறமையாகவும், விவேகத்தோடும், அர்ப்பணிப்பு உணர்ச்சியோடும் செய்த இந்த புராஜக்ட் மாபெரும் வெற்றி அடைந்தது என்று அறிவிப்பதில் பெருமை அடைகிறேன்..


Friday, September 3, 2010

சீட்டு - விளையாட்டு!!




ஒரு நாள் ஒரு ட்ரெய்னிங் ப்ரோகிராம். அதில நானும் இன்னொரு என்னோட பலியாடும் கலந்துகிட்டோம்..

அதில அஞ்சு பிரிவா இருந்தது. சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக ஒரு ப்ரிவு முடிஞ்சது சீட்டுக் கட்டில ஒரு சீட்டு உருவிக்கணும்

ஐந்து பிரிவு பயிற்சியும் முடிந்ததும் யார் கைல போக்கர் விளையாட்டு விதிப்படி அதிக மதிப்புள்ள சீட்டுகள் இருக்கோ அவர்களுக்கு பரிசு உண்டுன்னு சொன்னாங்க.

எனக்கு முதல் கார்டா வந்தது டைமண்ட் குவின்.

அதைக் காட்டி அவர்கிட்ட கேட்டேன். இதுக்கப்புறம் என்ன?

அவர் முழிச்சார்,


குவின் டைஸ் - கிங் ரீ மேரிஸ். அதாவது இராணி செத்துப் போறா. அதனால ராஜா மறுமணம் செய்துக்குவாறு என்றேன்.


அதான் அதேமதிரிதாங்க அவரும் என்னைக் கொலைவெறியோடப் பார்த்தாரு..

அடுத்த சுற்று பயிற்சி முடிந்ததும் மறுபடியும் சீட்டு வினியோகிக்கப் பட்டது.

இம்முறை எனக்கு வந்தது கிங் டைமண்ட்.

அதையும் அவருக்குக் காட்டினேன். குவின் டைஸ், கிங் டைஸ், ஒய்? ஏன் என்று கேட்டேன்.

அவரும் உங்களை மாதிரிதாங்க, பேந்தப் பேந்த விழிச்சார்.

பிகாஸ் ஜாக் ஈஸ் கிளவர் அப்படின்னேன்.


அவர் என்னை அடிக்க ஆள் வச்சி நேரம் பார்த்துகிட்டு இருக்கறதா கேள்வி!!