Wednesday, September 15, 2010

படிச்சதும் கடிச்சதும்

 

Set என்னும் சொல்லுக்கு ஆங்கிலத்தில் 192 அர்த்தங்கள் உண்டாம்..!


எத்தனை இருந்து என்ன பிரயோசனம். நமக்குதான் ஒண்ணும் Set ஆகமாட்டேங்குதே!!!

கொசுக்களை நீல நிறம் அதிகமாகக் கவருமாம்..!

அப்புறம் பகல்ல ஏன் வானத்தை நோக்கிப் பறக்கறது இல்லை?

கங்காரு விலங்குகளால் பின்புறமாக நடக்க இயலாதாம்..!

அப்போ முன் வச்ச காலை பின் வைக்க மாட்டேன்னு சொல்றவங்களை கங்காருன்னு சொல்லலாம்னு சொல்லுங்க.


அமெரிக்கர்கள், தினமும் 75 ஏக்கர் பரப்பளவுள்ள பிட்சாவை தின்று தீர்க்கிறார்களாம்..!

ஒரு ஏக்கர் 100 செண்ட்,. ஒரு செண்ட் 100 சதுர மீட்டர். அதாவது 7 இலட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டர். ஒரு சதுர மீட்டர் பிஸாவை 16 பேர் சாப்பிடறாங்க அப்படின்னு வச்சுகிட்டா அமெரிக்காவில் 1 கோடியே25 லட்சம் பேர் ஒரு நாளைக்கு பிஸா சாப்பிடறாங்க. அமெரிக்காவின் ஜனத்தொகை 30 கோடி. அதாவது 4 சதவிகிதம் பேர். கொஞ்சம் கொறைச்சலாதான் இருக்கு.

நம்ம நாட்டுல இவ்வளவு பேர் சாப்பிடறதே இல்லை.  

சுதந்திர தேவி (அமெரிக்கா) சிலையின் சுட்டுவிரல் எட்டு அடி நீளமுள்ளது.

எட்டுன தூரம் வரை சுட்டும் விரல்னு சொல்றாங்களோ??


அடகாமா பாலைவன (சிலி) வரலாற்றில் மழையே இதுவரை பெய்ததில்லை.

அடராமா

உலகில் வாழும் மனிதர்களும், கோழிகளும் சம எண்ணிக்கை கொண்டவர்கள். ( புரட்டாசியில் கோழிகள் தொகை அதிகரிக்கக்கூடும்..!)

ஆளுக்கொரு கோழி வச்சு ஆண்டவன் படைச்சான்னு சொல்லுங்கோ!!!

(ஆளுக்கொரு தேதி வச்சு ஆண்டவன் அழைப்பான் - அப்போ

யாரழுதால் அவனுக்கென்ன காரியம் முடிப்பான்)
ஒருவகை ஹம்மிங் பறவையின் எடை நம் 5 ரூபாய் நாணயத்தைவிட குறைவு.

புதுசா? பழசா??

இல்லை 5 ரூபா மாதிரியே ஹம்மிங் பறவையும் (தேன்சிட்டு) இளைச்சுகிட்டே போகுதா?
அப்போ சுத்தத் தேன் எடையைக் குறைக்க உதவும்னு ஒரு அழகுக் குறிப்பு போட்டுடலாமே!! 

அகராதியில் ஒரு சொல்லுக்கு ஸ்பெல்லிங் தப்பா இருந்தா யாருக்குத் தெரியும்..?

படிக்கிறவங்களுக்கு.


நாய்களுக்கு பிடித்த சுவைன்னு விளம்பரம் செய்யறாங்களே.. எப்படிக் கண்டுபிடிச்சாங்க..?

நாய்க்கு பிஸ்கட் போட்டு பிராக்கெட் பண்ணும் திருடங்கதான் சொன்னாங்களாம்.அரளிக்கொட்டையை அரைச்சுக் குடிச்சா செத்துப்போயிடுவோம்ன்னு உலகுக்கு உணர்த்திய தியாகிக்கு அப்படி நடக்கும்ன்னு முன்னாடியே தெரியுமா..? இல்லே பசிக்கு தின்னுருப்பாரா..?

அது ஒரு மாமியாரோ மருமகளோ சொன்னதா இருக்கலாம் இல்லியா! தியாகி மட்டும் இல்லை துரோகியும் கண்டுபிடிப்புகளைச் செய்யலாம். ஹி ஹி..

சோதிடர் லாட்டரி வென்றார்.. / குதிரைப்பந்தயத்தில் வென்றார்ன்னு ஏன் தகவலே வரமாட்டுது..?

அவங்களுக்குக் கிடைக்காதுங்கறது அவங்க ஜாதகத்தில இருக்கறது அவங்களுக்குத் தெரிஞ்சிருக்குமோ?? ஏன்னா இந்த லாட்டரியை வெல்வேன் அந்த பதக்கத்தை வெல்வேன் அந்த பந்தயத்தை வெல்வேன் அப்படின்னு அவங்க அறிக்கை கூட விடறதில்லையே!!!

டோக்கியோ நகரில், காரைவிட சைக்கிள் சீக்கிரம் பயணதூரத்தைக் கடக்கும்..!


பெங்களூரிலும் அப்படித்தானாம்..சூதாட்ட நகரம் லாஸ் வேகாஸில், எந்த சூதாட்ட விடுதியிலும் கடிகாரம் இருக்காது..!

நாம கடிகாரம் கட்டிகிட்டு சூதாட்ட விடுதிக்குள்ளப் போனா விடமாட்டாங்களா? அடப் பாவமே! நான் உள்ளயே அடகு வச்சுக்கற வசதி இருக்கும்னு நெனச்சேன். 

பொதுவாகவே வாயை மூடிட்டு இருக்கறது நல்லது.. முக்கியமா நீங்க தண்ணீரில் மூழ்கிட்டு இருக்கும்போது..!

ஆமாம் வாயைத் திறக்காம எப்படி தண்ணியில முழுகறது?

ஒருக்காலும் உங்களை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள்.. அவர்கள் இந்த நிலையை அடைய என்னென்ன அவமானங்களை சந்திக்கவேண்டியிருந்ததோ..?

அதை கேட்டுச் சந்தோஷப்படவாவது ஒப்பிடணும் போல இருக்கே!!!

ஒரு வேலையை மகா சொதப்பலா செய்யறதிலக்கூட ஒரு நன்மை இருக்கு.. மறுபடி உங்ககிட்ட அதே வேலையைத்தர யாருக்கும் தைரியம் வராது..!

அதுக்குப் பதிலா வேலையே செய்யாம இருந்தா எந்த வேலையையுமே யாருமே குடுக்க மாட்டாங்க இல்லியா?

சமரசம் : நமக்கு கிடைத்திருப்பதே மற்றவர்களுக்கு கிடைத்திருப்பதைவிட அதிகம் என்று எல்லோரையும் நம்பவைக்கும் கலை..!


அடி உதையைக் கூடவா?? 
.

7 comments:

 1. அனைத்தும் அசத்தல். பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. முதல் செட்டிங் மிக சூப்பர்.

  ReplyDelete
 3. hii.. Nice Post

  Thanks for sharing


  For latest stills videos visit ..

  www.chicha.in

  www.chicha.in

  ReplyDelete
 4. (ஆளுக்கொரு தேதி வச்சு ஆண்டவன் அழைப்பான் - அப்போ
  யாரழுதால் அவனுக்கென்ன காரியம் முடிப்பான்)

  அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 5. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_31.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

  ReplyDelete