ஒரு நாள் ஒரு ட்ரெய்னிங் ப்ரோகிராம். அதில நானும் இன்னொரு என்னோட பலியாடும் கலந்துகிட்டோம்..
அதில அஞ்சு பிரிவா இருந்தது. சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக ஒரு ப்ரிவு முடிஞ்சது சீட்டுக் கட்டில ஒரு சீட்டு உருவிக்கணும்
ஐந்து பிரிவு பயிற்சியும் முடிந்ததும் யார் கைல போக்கர் விளையாட்டு விதிப்படி அதிக மதிப்புள்ள சீட்டுகள் இருக்கோ அவர்களுக்கு பரிசு உண்டுன்னு சொன்னாங்க.
எனக்கு முதல் கார்டா வந்தது டைமண்ட் குவின்.
அதைக் காட்டி அவர்கிட்ட கேட்டேன். இதுக்கப்புறம் என்ன?
அவர் முழிச்சார்,
குவின் டைஸ் - கிங் ரீ மேரிஸ். அதாவது இராணி செத்துப் போறா. அதனால ராஜா மறுமணம் செய்துக்குவாறு என்றேன்.
அதான் அதேமதிரிதாங்க அவரும் என்னைக் கொலைவெறியோடப் பார்த்தாரு..
அடுத்த சுற்று பயிற்சி முடிந்ததும் மறுபடியும் சீட்டு வினியோகிக்கப் பட்டது.
இம்முறை எனக்கு வந்தது கிங் டைமண்ட்.
அதையும் அவருக்குக் காட்டினேன். குவின் டைஸ், கிங் டைஸ், ஒய்? ஏன் என்று கேட்டேன்.
அவரும் உங்களை மாதிரிதாங்க, பேந்தப் பேந்த விழிச்சார்.
பிகாஸ் ஜாக் ஈஸ் கிளவர் அப்படின்னேன்.
அவர் என்னை அடிக்க ஆள் வச்சி நேரம் பார்த்துகிட்டு இருக்கறதா கேள்வி!!
உங்களைமாதிரி க்ளவரைப் பார்த்துட்டு நாங்க ஆஸ் மாதிரி முழிக்கிறோம்..!!!
ReplyDeleteஇத படிக்கிற எல்லாரும் டைஸ் தான்
ReplyDeleteமொத்தத்தில் நான் ஜோக்கர்!!!
ReplyDelete"ஹார்ட்ஸ்" நிறைந்த பின்னூட்டங்களுக்கு நன்றி!!!
கொஞ்ச நேரம் இப்படிப் பேசினா "ரம்மி"யமா இருக்கும். ஆனா இப்படியே பேசிகிட்டு இருந்தா.. இந்தப்பக்கம் "ஃபுல்" ஆயிடும். அதனால இத்தோட "ஸ்கூட்" உட்டுடறேன்.