Tuesday, September 7, 2010

உங்க மேனேஜர் இம்புட்டு நல்லவரா?






கீழே இருப்பது இணையத்தில் பழகிப் புளித்துப் போன மென்பொருள் புராஜக்ட். நான் இந்த டீமுக்கு மேலாளரா இருந்தால் அவர்களின் பணி ஆய்விற்கான ரிபோர்ட்டை எப்படிச் செய்வேன் தெரியுமா?




1. மார்க்கெட்டிங் என்பதன் உச்சமே கஷ்டமருக்கு என்ன தேவை என்ப்தை மறக்கச் செய்வதே ஆகும். வாடிக்கையாளருக்கு என்ன வேண்டும் என்பதைக் கொடுக்க ஒரு சேல்ஸ்பாய் போதும். இதுதான் நீங்கள் விரும்புவது என ஒரு பொருளை வாடிக்கையாளருக்கு அறிமுகப் படுத்துவதே மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலை. வாடிக்கையாளரும் அந்த விரிவுரையில் மயங்கி ஆர்டர் கொடுத்திருக்கிறார். எனவே மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் தன் பணியைச் செம்மையாகச் செய்திருக்கிறார்.



வாடிக்கையாளருக்கு தன் தேவையைச் சரியாக விவரிக்கத் தெரியவில்லை. மூன்று பலகைகள் அவருடைய விவரிப்பில் இருக்கின்றன. இரண்டை அவர் உபயோகப்படுத்தவே போவதில்லை.


புராஜக்ட் லீட் தன்னுடைய மேன்மையான நேரத்தை உபயோகப்படுத்தி, மூன்று பலகைகள் தேவையில்லை ஒரே பலகை போதும் என சம்மதிக்க வைத்துள்ளார். இதனால் தயாரிப்புச் செலவு வெகுவாக குறையும். வாடிக்கையாளர் தான் ஊஞ்சலாட விரும்புவதாக ஆரம்பத்தில் சொல்லவே இல்லை. அதனால் கயிறின் இரு முனைகளையும் இருவேறு கிளைகளில் கட்டியதன் மூலம் எடை வெவ்வேறூ கிளைகளுக்கு பிரிவதால் உறுதி அதிகமாகிறது. இதனால் ஊஞ்சல் மேலும் அதிக எடையைத் தாங்கும் சக்தி உள்ளதாக இருக்கிறது. எனவே புராஜக்ட் லீட் தன்னுடைய நுண்ணறிவின் மூலம் செலவைக் குறைத்து தரத்தை உயர்த்தி மிகச் சிறப்பான காரியம் செய்திருக்கிறார்.

இதைப் பொறியாளர் வடிவமைத்த பிறகே ஊஞ்சலாடவும் வெண்டும் என்ற மாற்றம் வந்திருக்கிறது. அதை, மிகத் திறமையாக பொறியாளர், மிகக் குறைந்த நேரத்திலும், மிகக் குறைந்த மாற்றங்களுடனும் வடிவமைத்து இருக்கிறார். இது அவரின் மிகச் சிறந்த மதிநுட்பத்தையும் செயலாக்கத் திறனையும் காட்டுகிறது.

ப்ரோக்ராமருக்கு வாடிக்கையாளர் சரியான தகவல்களைத் தரவில்லை. அவர் சொன்னது பலகையை மரத்தில் இருபுறமும் கட்டவேண்டும் என்பதுதான். அவருடைய இதற்கு முந்தைய புராஜக்ட் ஒரு பசுவை மரத்தில் கட்டுவதாகும். அதற்கு எழுதிய அதே கட்டளைகளை மீண்டும் உபயோகித்ததின் மூலம் நேரத்தை மிச்சப்படுத்தினார். இதனாலேயே புராஜக்டை உரிய நேரத்தில் முடிக்க முடிந்தது.



டெஸ்டிங் டீம் இந்த புராஜக்டில் இல்லை என்பதுதான் உண்மையானப் பிரச்சனை இங்கே. வாடிக்கையாளர் டெஸ்டிங் தேவையில்லை என்று சொல்லிவிட்டதால் புராஜக்ட் டெஸ்டிங் செய்யப்படவில்லை. எனவே கம்பெனியில் இதற்கு யாரும் பொறுப்பேற்க முடியாது.




உண்மையாப் பார்க்கப் பொனால், ஆபரேசன்ஸ் டீம் மிக அழகாக வாடிக்கையாளரின் உள்ளம் அறிந்து செயல்பட்டிருக்கிறது. சரியாக ஒரு கயிறை மரத்தில் கட்டி இருக்கிறது. வாடிக்கையாளர் அவர் இஷ்டத்திற்கேதுவான டயரையோ அல்லது தனது தலையையோ தொங்கவிட்டுக் கொள்ளலாம். எந்தக் கம்பெனி டயர் என்று சொன்னால் ஆபரேஷன்ஸ் டீம் வாங்கி மாட்டி விடுவார்கள்.

டாக்குமெண்டேஷன் டீம் இருப்பதிலியே மிகச் சிறப்பான வேலையைச் செய்திருக்கிறது. எதிர்காலத்தில் உதவும் வகையில் டாக்குமெண்டை அழகாகத் தயார் செய்திருக்கிறார்கள். தற்போது வாடிக்கையாளர்களிடம் உள்ள பொருளுக்கும் இந்த டாக்குமெண்டேசனுக்கும் ஒரு வித்தியாசம் கூடக் கண்டு பிடிக்க முடியாது. அந்த அளவிற்கு தொலை நோக்கோடு செயல்பட்டு உள்ளார்கள்.

வாடிக்கையாளர் அடிக்கடித் தன் தேவைகளை மாற்றிக் கொண்டிருக்கிறார். அதற்கேற்ப பில் செய்யப்பட்டிருக்கிறார். டிஸைனில் ஒவ்வொரு முறை மாற்றம் செய்யும் போதும் இப்படி செலவுகள் அதிகரிப்பது சகஜம்தான். வாடிக்கையளர் சரியான தேவைகளைக் கொடுத்திருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்காது.



வாடிக்கையாளர் சேவைப் பிரிவுதான் மிகக் கனக்கச்சிதமாக செயல்பட்டிருக்கிறது. அவர்கள் பிரச்சனைகளை அலசும் விதம் மிகத் தீர்க்கமானது. இத்தனை களேபரங்களுக்கும் மூல காரணம், வாடிக்கையாளர் வீட்டின் புல்வெளியில் ஒரு மரம் இருந்ததுதான் என்பதை மிகச் சரியாக கண்டு பிடித்திருக்கிறார்கள். அந்த மரத்தினால்தானே ஊஞ்சல் ஆசை. அந்த ஆசையில் தானே இத்தனைக் களேபரங்கள். அந்த மரத்தை அகற்றியதன் மூலம் பிரிச்சனையின் ஆணைவேரையே அகற்றி வாடிக்கையாளருக்கு இனி ஒரு பிரச்சனை கூட வராத அளவிற்கு செயல்பட்ட இவர்களை என்ன சொல்லிப் பாராட்டினாலும் தகும்.


ஆக மொத்தம் நம் கம்பெனியின் அத்தனை ஊழியர்களும் திறமையாகவும், விவேகத்தோடும், அர்ப்பணிப்பு உணர்ச்சியோடும் செய்த இந்த புராஜக்ட் மாபெரும் வெற்றி அடைந்தது என்று அறிவிப்பதில் பெருமை அடைகிறேன்..


No comments:

Post a Comment