அநித்தியத்தை நித்யமென்று ஆதரவா யெண்ணுதே
தனித்திருக்கேன் என்குதே தனைமறக்கேன் என்குதே
பட்டினத்தார்.
எது நிலையானது? எது நிலையற்றது?
அத்தனை புலன்களும் தான் உணர்வதை எல்லாம் நிலையானது என்றே எண்ணுகின்றன.
இந்த உடலில் இருக்கும் ஆன்மாவிற்குத் தெரியும். உடல் நிலையற்றதென்று. ஆனால் உடலே நான் என நினைத்துக் கொள்கிறது.
உடல் பெறும் இன்ப துன்பங்களை தனக்கே உண்டானதாக ஆன்மா எண்ணுகிறது. நான் என்பது இவ்வுடல் என மயக்கம் கொள்கிறது..
இந்த உடலிற்கு உண்டாகும் புகழ், இகழ் ஆகியவற்றைத் தனக்கே உண்டானதாகக் கருதுகிறது.
நான் தனித்தன்மையானவன் என்று உடலை தானாகக் கருதிக் கொள்ளும் ஆன்மா கருதிக்
கொள்கிறது. அந்த உடலில் இன்னும் எத்தனை ஆன்மாக்கள் இருக்கின்றன என
உணர்வதும் இல்லை. அதன் பகுதியாக இறைவனும் இருக்கிறான் என்பதையும்
உணர்வதில்லை.
நான் என்ற உணர்வு இருக்கிறதே அது தன்னை மறக்கவும் விரும்புவதில்லை. இறப்பு
என்ற ஒன்று தன்னை மறந்து விடச் செய்யுமே என்றும் அஞ்சுகிறது..
நான் என்ற அந்த உணர்வு ஆத்மாவை எதனுடனும் சேராமல் ஒட்ட விடமால் ஒன்ற விடாமல் செய்து விடுகிறது..
உடலை அழியாமல் பாதுகாக்க நினைக்கும் அம்மாய வலையில் சிக்கிக் கொண்ட ஆன்மா தான் அழியாதவன் என்பதை உணர்வதில்லை.
தான் தனியாகவும் இல்லை.. பேரான்மாவாகிய இறைவனின் ஒரு பகுதியே தான் என்றும்
அறிவதில்லை. இன்னும் பலப் பல ஆன்மாக்கள் அதே உடலிலே இருப்பதையும்
அறிவதில்லை. தான் தனித்து இருப்பதாகவே எண்ணிக் கொள்கிறது..
நான் என்ற அந்த உணர்வை ஆன்மா விடுத்து மறந்து தன்னுடன் உள்ள அனைத்தையும்
கவனிக்குமானால் எது நித்தியம் எது அநித்தியம் என்று புரியும்.
No comments:
Post a Comment