Thursday, October 29, 2015

உத்தமர் உறவு!
சித்த நினைவும் செய்யும் செயலும் நீயென வாழ்
உத்தமர்க்கான உறவே பராபரமே

                                                      தாயுமானவர்சித்த நினைவும்
செய்யும் செயலும்
நீ என வாழும்


இதன் பொருள் இறைவனுக்காக இறை நினைவில் எல்லாம் செய்வது என்று பலரும் பொருள் சொன்னாலும்....


சித்தம் என்பது ஆழ்மனம்.. மனசாட்சி என்று சொல்கிறோமே அது. அதை இறைவனாகவே கொள்ளவேண்டும். அதன் வழி நடக்க வேண்டும்.


செய்யும் செயலையும் தெய்வமாக என்ன வேண்டும். ஒரு தொழிலை பணம், புகழ் இத்யாதி புறக்காரணங்களுக்காக செய்யாமல் அதை தெய்வ சேவையாக நினைத்து செய்தல்..


இப்படி சிந்தனையிலும் செயலும் இருக்கப் பெற்றவர் உத்தமர்.


அந்த உத்தமருடன் எனக்குத் தொடர்பு ஏற்பட வேண்டும்.


மருத்துவத் துறையில் இந்த கொள்கை இருந்தது, கல்வித் துறையில் இந்தக் கொள்கை இருந்தது.


இன்னும் ஒரு சில மனிதர்களிடம் இருக்கிறது.


சித்த நினைவு, சித்தர்களெல்லாம் சித்தனாகிய முதல் சித்தன் சிவனின் நினைவு.. மாறாத ஒரே திட நினைவு. கைவசமாகும் என்ற நம்பிக்கையும் உறுதியும் கொண்டு நீங்காத மாறாத நினைவு...


பராபரக் கண்ணியின் விளக்கத்தை  கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன்
அறிதல், அனுபவம் எல்லாமே இறைவனன்றோ. அப்படியெனில் நம்முள் அறிவாகி நிற்பவனும் இறைவனே.. எதையறிந்தாலும் அதன் மூலம் நாம் அறிவது இறைவனை அன்றி வேறொன்றில்லையே.அறிவாகி நின்றவன் இறைவன். அந்த அறிவிலிருந்து நல் திட சிந்தனையாகவும் நற்செயல்களாகும் வெளிப்படுகிறான்.


உறுதியான எண்ணமும், அதே போன்ற உறுதியான செயலும்... இறைவனை நோக்கியே இருக்கும். மற்றவை மாறிக் கொண்டே இருக்கும்.


செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள்.


இவை மட்டுமே உத்தமர்களின் உறவுகள். உத்தமர்கள் என்றுமே இவற்றைப் பேணி இவற்றுடனே வாழ்வார்கள்.அறிவும், சிந்தனையும் செயலும் இறைவனே!!! உத்தமர்க்கு அவனே உறவு!!!அந்த உறவை நாடுகிறார் தாயுமானவர். நாமும் அவர் உறவை நாடுவோம்.

2 comments:

  1. வணக்கம் சார்,பால்ய வயதில் அடியேன் மிகவும் ரசித்து வாசித்த நூலின் தேடலின்போது தங்கள் பதிவைக்காண நேர்ந்தது.புதையலைக்கண்டது போல் மகிழ்ச்சி கொண்டேன்.அந்த நூலின் பெயர் ஆரேகான்பாதை.
    // இன்னொரு புத்தகமும் உண்டு. ஆரேகான் பாதை. இது ஒரு மொழிபெயர்ப்பு நூல். இதில் காணும் பயணம், காட்டெருமைகள்.. அவற்றை வேட்டையாடும் விதம், நாடோடிகள் வாழ்க்கை முறை என புத்தகத்தின் நிகழ்வுகள் கண்ணின் முன்னே விரியுமாறு எழுதப்பட்ட மொழிமாற்றக் கதை.//
    இன்று அந்த நூலைத் தேடினால் பதிப்பில் இல்லை என்று நினைக்கிறேன்.தமிழில் யார் மொழி பெயர்த்தது,எந்த பதிப்பகம் என்பதும் அறியமுடிய வில்லை.ஆங்கிலத்தில் அதனைப் படைத்தவர் பிரான்ஸிஸ் பார்க்மென் என்று அறிகிறேன்.அதனைப்பற்றிய விவரங்களை அறியத்தரமுடியுமா சார்..நன்றி....

    ReplyDelete
  2. நண்பரே, நான் ஆரேகான் பாதை புத்தகம் படித்தது 1983, பள்ளி நூலகத்தில். அதனால் அதன் மொழிபெயர்ப்பாளர் பெயரும் பதிப்பகமும் நினைவில்லை, முடிந்தால் அதன் ஆங்கில வடிவை தேடித்தருகிறேன். உங்களது மின்னஞ்சல் முகவரியை அறியத் தரவும்

    ReplyDelete

The Mahabharat Chronology: Dr. K.N.S. Patnaik

The present European calendar came into vogue around 7 A.D. India, since ancient times, has been following the lunar calendar. The Western...