Tuesday, May 25, 2010

தாமரை பதில்கள் : 90

கேள்வி எண் 90:
கேட்டவர் : சுகந்தப்பிரீதன்


பெரும்பாலும் மற்ற இனங்களில் (உம்: சிங்கம், யானை, கோழி, மயில்..etc..) எல்லாம் பெண்ணைவிட ஆண் அழகாய் இருக்கும்போது மனித இனத்தில் மட்டும் இது மாறுபடுவது ஏன்..??



அழகு என்ற சொல்லாகவே சொல்லப்படும் முருகன் ஆண்தானே!

ஒரு சின்ன கதை.

ஞானி கேட்டார்; கடவுள் ஆணினத்தை அழகாகவும் பெண்ணினத்தை அழகுக் குறைவாகவும் படைச்சிகிட்டே வந்தார்.. மனிதனைப் படைக்கிறப்ப இந்த முறை மனிதரில் பெண்ணை அழகாகப் படைத்தார், அதுவே கடவுளின் கடைசி புதுப் படைப்பாக அமைந்து விட்டது. பரிணாம வளர்ச்சியே நின்னு போச்சு. ஏன்?


பெண் சொன்னாள்: இதுவரைக்கும் கடவுளுக்கு கிடைக்காத படைப்பின் திருப்தி பெண்ணை அழகாக படைச்சவுடன் கிடைச்சுட்டது..இதுக்கு மேல எதையும் படைக்க முடியாது என்று அமைதி ஆயிட்டார்.

ஆண் சொன்னான்: ஒரு பெண்ணினத்தை அழகாப் படைச்சவுடனே அதனோட அட்டகாசம் தாங்காம கடவுளுக்கு படைப்புத் தொழில் மேலயே வெறுப்பு வந்திட்டது.. இனி எதையாவது புதுசா படைச்சேன்னா ஏன்னு கேளு என வி ஆர் எஸ் வாங்கிட்டாரு.

நான் சொன்னேன்:

அழகான ஆணினம் தங்களுக்குள்ள போட்டி போட்டு இனப்பெருக்கம் கட்டுக்குள் இருந்தது, அழகான பெண்ணினம் படைச்சா பெண்ணினம் என்ன செய்யும்னு பார்த்தார்,, அப்பவும் ஆணினத்தோட சண்டை தீரலை. ஆனால் பெண்ணினத்திலும் சண்டை வந்தது. அப்போ சண்டைக்குக் காரணம் அழகா இல்லையான்னு கடவுளுக்கே சந்தேகம் வந்து குழம்பி அமைதி ஆயிட்டார்.

ஞானி சொன்னார்: ........ 

அதாவது எதுவும் சொல்லலை. மௌனமாயிட்டார்

மற்ற படைப்புகளில் பெண் இனத்திற்கு இவ்வளவு பாதுகாப்பு தேவைப்பட்டது இல்லை. ஆகவே பெண்களைக் கவர அதிகம் மெனக்கெட வேண்டி இருந்தது. 

மனிதப் படைப்பில் பெண்களுக்கு அதிகப் பாதுகாப்பு தேவைப்பட்டது. ஆகவே பெண்களுக்கு ஆண்களைக் கவர வேண்டிய அவசியம் அதிகமானது, அதனால் பெண்ணினத்திற்கு அழகுணர்ச்சி அதிகம்.

ஒரு இருபது தலைமுறைக்கு மெனக்கெட்டா ஆண்களும் அழகாகலாம். (ஆண்கள் தான் அழகுன்னு சொல்லிகிட்டே இருந்தா.. அழகை பெற, பாதுகாக்க முயற்சி செய்துகிட்டே இருந்தா அது அப்படியே பரவி ஆண்கள் அழகாகி விடுவார்கள்.)

அங்கே ஆணிற்கு பெண்ணைக் கவரவேண்டியத் தேவை.. இயற்கை..

இங்கே பெண்ணிற்கு ஆணைக் கவரவேண்டியத் தேவை.. இயற்கை..

ஆனால் இந்த ஆண் பெண் வித்தியாசம் பல உயிரினங்களில் இல்லை. அதையும் கவனித்தீர்களா? 

போட்டி மனப்பான்மை.. அழகிற்கு மட்டுமல்ல.. அனைத்து கவர்ச்சிகளுக்கும் அதுதான் அடிப்படை
.

No comments:

Post a Comment