கேள்வி எண் 96:
கேட்டவர் : அன்புரசிகன்
அமெரிக்காவில் இராணுவ ஆட்சி வந்தால் உலகளாவிய ரீதியில் எதை எதிர்பார்க்கலாம்???
அமெரிக்காவில் மட்டுமல்ல இந்தியாவிலும் இராணுவ ஆட்சி வரவேண்டுமென்றால், அதற்கு மிகப்பெரிய ஒரு காரணம் இருக்கும். மிகவும் வலுவான ஜனநாயக நாடுகளில் இராணுவ ஆட்சி வந்தால் மிகப் பெரியதொரு போரை எதிர்பார்க்கலாம். ஏனென்றால் இந்நாடுகளில் ஓரிரு இராணுவ அதிகாரிகள் சதிசெய்து ஆட்சியைக் கைப்பற்ற இயலாது. அதற்கென வலுசேர்க்க வலுவான எதிரி வேண்டும். நாட்டிற்கு பேராபத்து இருக்க வேண்டும்.
சாணக்கியர்கள் நிறைந்த அரசியல், துப்பாக்கிகளுக்கு அவ்வளவு எளிதில் விட்டுத்தராது. ஏனென்றால் ஜனநாயக நாட்டில் ஓரிருவரை மடக்கி ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது நடக்காது. மிகப் பெரிய இராணுவம் ஒரு அதிகாரியின் கீழ் ஒன்றுபட்டுச் செயல்பட ஒரு வலுவான காரணம் வேண்டும். ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் அதிகாரப்பசி உண்டு. அதிகாரிகளுக்கும் அந்த அகோரப்பசி இருக்கும். கட்டி ஆள்வது சிரமம்.
அப்படி இல்லாமல் ராணுவம் அரசியல்வாதிகளை அடக்கி ஆட்சியைக் கைப்பற்றுகிறதென்றாலும் மக்களை திசை திருப்பவாவது புரட்சிகளை அடக்கவாவது யார் மீதாவது பழி சுமத்தி போரில் இறங்க வேண்டிய கட்டாயம் இருக்கும். உள் நாட்டுப் போராவது இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் மக்களின் உணர்வுகளை மட்டுப்படுத்தவதில் கை தேர்ந்தவர்கள். எனவே நாடே பிளக்கும் அளவிற்கான உள்நாட்டுப் போருக்கு காரணம் வேண்டும்.
பொருளாதாரப் பிரச்சனைகளால் இராணுவ ஆட்சி வருவது என்பது சிறிய நாடுகளில் மட்டுமே சாத்தியம். பெரிய நாடுகளில் மிகக் கடினம். ஏனென்றால் பொருளாதரம் நிர்வாகத்தையும் வளத்தையும் சார்ந்தது, அதை அரசு மட்டுமல்ல பல தொழிலதிபர்களும் கவனித்துக் கொள்வார்கள்.
No comments:
Post a Comment