Tuesday, May 25, 2010

தாமரை பதில்கள் : 93

கேள்வி எண் 93:
கேட்டவர் : சிவா.ஜி



சில நேரங்களில் எதைப்பற்றியுமே சிந்திக்க முடியாமல், மூளை ஸ்தம்பித்துவிடுகிறதே....இந்த வெறுமையை எப்படி சமாளிப்பது?



சிந்திக்க முடியலையே என்பதே ஒரு சிந்தனைதான் சிவா.ஜி

உங்களுக்கு கொஞ்சமும் நம்பிக்கை ஏற்படுத்தாத, சிறிதும் ஆறுதலைத் தருவதான எந்தச் சிந்தனையும் வரவில்லை என்பதுதான் நிஜம்.

காரணம் படபடப்பு, கோபம், பயம் இதைப் போல பல உணர்வுகள்...

முதலில் வெளியே வாருங்கள்.. (ஓடும் டிரெய்னில் இருந்தால் என்ன செய்யறது.. சரி இருக்கும் இடத்தை விட்டு சற்று வசதியாக மாறிக் கொள்ளுங்கள்). கண்ணில் தென்படும் 5 விஷயங்களின் நல்லது என்ன கெட்டது என்ன என்று யோசியுங்கள்..

இப்படி ஒரு ஐந்து நிமிஷம் பத்து நிமிஷம் செலவிட்டு விட்டு அப்புறம் சிந்தியுங்கள் போதும்.

பலபேர் புகை பிடித்தால், மது அருந்தினால் ஐடியா வர்துன்னு சொல்றது இதனால தான், அவற்றினால் இல்லை.



No comments:

Post a Comment