கேள்வி எண் 95:
கேட்டவர் : அமரன்
செய்தியாளர்கள், செய்தி ஊடகங்கள் எப்படி இருக்க வேண்டும்?
செய்தியாளர்கள் ஆரோக்யமான உடலும், சுறுசுறுப்பும், நல்ல நினைவுத் திறனும், மற்றவரைச் சற்றே கவரும் சில நல்ல விஷயங்கள் (புன்னகை முகம், புத்துணர்வு காட்டும் முகம் .. இப்படி) கொண்டவராகவும் நல்ல மதிநுட்பமுடையவராகவும் இருக்க வேண்டும்.
ஊடகங்கள், உபயோகிக்க எளிமையாகவும், மக்கள் விரும்பும் செய்திகளையும், மக்களுக்குத் தேவையான தகவல்களையும் சரியான விகிதத்தில் கலந்து தருபவையாகவும், பொது நலனில் அக்கறை உள்ளதாகவும் இருத்தல் வேண்டும்..
ஓ கேட்டது அமரன் அல்லவா?
செய்தியாளர்களுக்கு என்று சில கடமைகள் இருக்கிறது அமரன். அதாவது நாம் தரும் இந்தச் செய்தி என்ன வித தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற தொலைநோக்கு இருத்தல் வேண்டும். இன்னார் தந்த செய்தியா? சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையைத் தருவதாக இருக்கவேண்டும். (பத்திரிக்கை ஆசிரியர், நிலைய இயக்குனர், மக்கள் எல்லோருக்கும்).
நாட்டுக்கு என்ன இப்பொழுதைய அவசியத் தேவை என்பதை உணர்ந்தவராக இருத்தல் நல்லது,
ஊடகங்கள் நாட்டில் பல பணிகளைச் செய்கின்றன, பொழுதுபோக்கு, தகவல்தொடர்புகள், அரசியல், தொழில்கள், வியாபாரம், சமயம் இப்படிப் பலப்பல துறைகளில் ஊடகங்கள் உண்டு.
ஊடகங்களே நம் கனவுத்திரையில் பல காட்சிகளை உண்டாக்குகின்றன. அந்த ஊடகங்கள் லாபநோக்கத்துடன் நடக்கின்றன. கூடவே
1. கொஞ்சம் தொலைநோக்கு(எதிர் நோக்கி இருக்கும் சவால்களை சற்றேனும் வெளிச்சம் போட்டுக் காட்டுவது)
2. கொஞ்சம் சமூக அக்கறை(கலகங்கள் மூட்டி விடாமல் இருப்பது)
3. கொஞ்சம் தன்னுடைய நற்பெயர்(நம்பத் தகுந்த ஊடகமாக இருத்தல்)
4. கொஞ்சம் பயனுள்ளதாக இருத்தல் (மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களுக்கு முக்கியத்துவம் அளித்தல்)
ரொம்ப மாறவேணாம்.. அதில கொஞ்சம் இதில கொஞ்சம் என நல்ல விஷயங்களைக் கலந்து கொடுத்தா போதும்.
No comments:
Post a Comment