கேள்வி எண் 92:
கேட்டவர் : அன்புரசிகன்
காதலிக்கு ரோஜாவும் மனைவிக்கு மல்லிகையும் கொடுக்கவேண்டும் என்ற கருத்து ஏன் வந்தது?
தெரியாமால் கேட்டீர்களா தெரிந்து கேட்டீர்களா தெரியவில்லை.
ரோஜா என்பது காதல் தேவதையின் சின்னமாகக் கருதப்படுகிறது. (வீனஸ்) காதலியைப் போலவே பளிச்சென பல வண்ணங்களில் வருகிறது. மென்மையான நறுமணம். கண்ணுக்கழகு.. அவ்வப்போது செல்லமாய் குத்தும் முட்கள்... அதான் அது காதலிக்கு..
ஆனா மல்லிகை இருக்கே ..
அரபியில் யாஸ்மின் என்றால் கடவுளின் பரிசு. கடவுளின் பரிசை.. கடவுளின் பிரதிநிதிக்கே தருவது தானே முறை.
எப்பொழுது பூ வாங்கித் தருகிறோம். மாலை பணி முடிந்து வீட்டிற்குச் செல்லும் பொழுது. மல்லிகை என்பது காலையிலேயே பறித்து வைத்தாலும் மாலை 6 மணி முதல் 8 மணிக்குள் மலரும் பண்பு உள்ளது. இதன் மணம் 4 மணி நேரத்திற்கு மேல் தாங்கும். ஆக மாலை முதல் அன்று இரவு உறங்கும் வரையிலான காலம் முழுதும் மலர்ந்து இருக்கும் மலரைக் கொடுத்து உன் முகம் போல இருக்கிறது பார் இதற்குத்தான் உன்னைக் கண்டு என்ன சந்தோஷம் என்று நாலு பிட்டைப் போட்டுச் சந்தோஷமா இருக்கலாம்.. (உங்க சின்னச் சின்ன தவறுகளை அவங்க மன்னிச்சிருவாங்க)
ரோஜா வாங்கிப்போனா ஏன் அந்தச் சக்களத்தி இன்னிக்கு வரலைன்னு மிச்சத்தை கொண்டு வந்தீங்களா என்ற வசை கிட்டலாம். தனித்தனி பூ வரையறை இதுக்கும் உதவும்.
No comments:
Post a Comment