Tuesday, May 25, 2010

தாமரை பதில்கள் : 89

கேள்வி எண் 89:
கேட்டவர் : தென்றல் 


D/L கிரிக்கெட்டில் டக்வொர்த் லீவிஸ் விதி.... புரியாத புதிர் விதி.. இதைப்பற்றி சற்று விளக்குங்களேன்.. இதனால் யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம்? (இன்னிங்க்ஸ் ஆடுபவர்களுக்கு)


டக்-வொர்த் மற்றும் லீவிஸ் என்ற இருவரால் தயாரிக்கப்பட்ட அட்டவணை, இதை மன்றத்தில் மின்புத்தகப் பகுதியில் பதிவேற்றி இருக்கிறேன்


http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=434



இதன் அடிப்படையைப் பார்ப்போம். கிரிக்கெட் விளையாட்டில் இரண்டு முக்கிய சொத்துக்கள் இருக்கின்றன. 1. ஓவர்கள் 2. விக்கெட்டுகள்.

ஆட்டத்தில் தடை வெவ்வேறு இடங்களில் ஏற்படலாம். முதல் அணி ஆடும் பொழுது மழை வந்து மொத்த ஓவர்கள் குறைக்கப்படலாம்.  முதல் அணி முழுமையாக ஆடிய பிறகு இரண்டாவது அணி ஆடும் பொழுது ஓவர்கள் குறைக்கப்படலாம்.  இரண்டிற்கும் வெவ்வேறு வகை கணக்குகள். கணக்குகளை எளிமையாக்க உதாரணம் முக்கியம்

1. டீம் 1 50 ஓவர்கள் முழுமையாக ஆடி எடுத்த ஓட்டங்கள் 250 / 8

2. டீம் 2 40 ஓவர்கள் ஆடி விட்டது ஸ்கோர் 186 / 4

மழையால் 10 ஓவர்கள் இழப்பு.

இப்பொழுது 10 ஓவர்களை இழந்ததினால் ஏற்பட்ட சொத்து இழப்பு = 28.3% (அட்டவணையில் 10 ஓவர்கள் 4 விக்கெட்டுகளுக்கு நேராகப் பார்க்கவும்.

அப்படியானால் மாற்றிக் கணிக்கப்படும் வெற்றி இலக்கு

250 x( (1-0.283)/1.00) = 180. 

டீம் 2 186 ரன்கள் எடுத்ததினால் வெற்றி..
முதல் அணி முழுமையாக விளையாடியதால் அதன் சொத்து 1. இரண்டாம் அணி 10 ஓவர்களை இழந்ததாலும் 4 விக்கெட்டுகளை இழந்து விட்டதாலும் அதன் சொத்தில் 28.3 சதவிகித இழப்பு ஏற்ப்பட்டதாக கருதப் பட்டது. இதுவே 6 விக்கெட்டுகள் இழந்து விட்டிருந்தால் இழப்பு 22.8 சதவிகிதமாக கருதப் பட்டிருக்கும். அப்பொழுது 

250x((1-0.228)/1 = 193 ரன்கள். 

டீம் இரண்டு தோற்றுப் போய் இருக்கும்


இது எளிய கணக்கு. ஆனால் முதல் அணி ஆடும் பொழுது மழை வந்து விடுகிறது.

இன்றைய தேடலில் கிடைத்த இணையப் பக்கம்



http://www.duckworth-lewis.com/Calculator/tabid/72/Default.aspx

இதில் கால்குலேட்டர் இருக்கிறது. உபயோகித்துக் கொள்ளலாம்.

ஆக இம்முறையில் முக்கியமான விஷயம் சில

1. அணியின் சொத்துக்கள் - ஓவர்கள் விக்கெட்டுகள்
2. தடை ஏற்படுவதால் சொத்திழப்பு ஏற்படுகிறது.
3. அதற்குத் தகுந்த அளவிற்கு தடை ஏற்பட்ட நேரம், அப்பொழுது கையிழப்பில் உள்ள விக்கெட்டுகள் இதுவரை சேர்த்த ரன்கள் இவை மூன்றையும் சேர்த்து இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
4. இது மிகச்சரியான இலக்குதான் என்று 100 சதவிகிதம் சொல்ல முடியாது. இதிலும் குறைகள் உண்டு. ஆனால் இதுவரை அறியப்பட்டதில் இது ஒரு நல்ல முறை..


இதில் யாருக்கு லாபம். யாருடைய இன்னிங்க்ஸ் தடை படுகிறதோ அவருக்கு நஷ்டம் வரலாம். தடை ஏற்படும் என அறியாத வரையில்.
அதே சமயம் அந்தத் தடையை முன்னராகவே ஊகித்து அதற்குரிய திட்டத்தோடு களமிறங்கும் அணிக்கு இது சாதகமாக இருக்கும்.

அதாவது தடை ஏற்படும் என்று அறியாததால் அவர்கள் 50 ஓவர்களுக்கான திட்டத்தோடு ஆடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இடையில் தடை ஏற்படுவதால் பிரச்சனை வரும்.

சில அணிகளில் துவக்க ஆட்டக்காரர்கள் நிலைத்து ஆடுவார்கள்.. அவர்களுக்கு இது நல்லது. சில அணிகளில் 4 வது 5 வது ஆறாவது வீரர்கள் நன்கு ஆடுவார்கள். அவர்களுக்கு கொஞ்சம் கடினம்

அதேபோல ஆரம்பப் பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்துவதும் இதற்கு முக்கியமானது ஆகும்.

ஒரு முறை தென் ஆப்பிரிக்கா இலக்கை அறிந்திருந்தும், இலக்கு என்பது சமன் செய்வதற்கு என்றும் அதைத் தாண்டினால்தான் ஜெயிக்க முடியும் என்பதை அறியாமல் ஒரு ஆட்டம் டிரா ஆனது. கடைசிப் பந்தில் விக்கெட் விழுந்துவிடக்கூடாது எனக் காப்பு ஆட்டம் ஆடி ஆட்டம் சமனில் முடிந்தது.

ஆக யாருக்கு இந்த விதியைப் பற்றி அறிவு அதிகமோ, யாருக்கு இன்று என்ன வானிலை என்ன நடக்கும் என யூகிக்கத் தெரிந்த அணித்தலைவர் உள்ள அணிக்கும், நல்ல தொடக்க வீரர்கள், நல்ல தொடக்க பந்துவீச்சாளர்கள் மற்றும் வெற்றி பெறும் ஆர்வமும் ஊக்கமும் சிறந்த ஃபீல்டிங்கும் உள்ள அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.

No comments:

Post a Comment