கேள்வி எண் 91:
கேட்டவர் : ஆதி
அண்ணா, இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெருவதற்கான முக்கிய தகுதிகள் எவை எவை ? நம் இலக்கிய உலகில் கவியரசு கண்ணதாசன், கவிக்கோ அப்தூல் ரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து போன்ற பெரும் கவிஞர்கள் பலரிருந்து இவர்களின் ஆக்கங்கள் ஏன் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க படவில்லை ?
ஒரு பழைய நகைச்சுவை துணுக்கு ஞாபகத்துக்கு வருகிறது.
ஒருவன் கடவுளை தன்னை ஏழையாக படைத்ததற்கு மிகவும் திட்டினானாம்.
கடவுள் தாங்க முடியாமல் எதிரே வந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்க எனக்கு லாட்டரியில் 5 கோடி பரிசு விழ வேண்டும். நான் கோடீஸ்வரனாக ஆக வேண்டும் என்பானாம்..
கடவுளும் வரம் தந்து மறைந்தார். தினம் தினம் லாட்டரி முடிவுகளை பார்க்கும் பொழுதெல்லாம் கடவுளஏ என்னை ஏமாற்றி விட்டாயே எனத் திட்டுவானாம்..
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கடவுள் ஒரு நாள் தோன்றிக் கன்னத்தில் பளாரென்று அறைந்து...
முதல்ல ஒரு லாட்டரிச் சீட்டு வாங்கித் தொலை என்று கத்தினாராம்...
அதைப் போலத்தான்
நீங்கள் கேட்ட இந்தக் கேள்வியைக் கூட யாரும் கேட்கக் கூட எண்ணவில்லை அதனால்தான்.
இந்தியாவில் எழுத்தாளர் சங்கங்கள் இணைந்து ஒரு உறுதியான அமைப்பை உருவாக்கி அதற்கு உலக அங்கீகாரம் பெறவேண்டும்.
படைப்புகளைப் பரிசீலித்து மொழிபெயர்த்து பரிந்துரைக்க வேண்டும். அதற்கென தன்னலமில்லா திறமையுள்ள மொழிபெயர்ப்பாளர்கள் தேவை.
விக்கி வழிகாட்ட தயாராகத்தான் இருக்கிறது.
No comments:
Post a Comment