Showing posts with label சுவையான நினைவுகள். Show all posts

Wednesday, May 17, 2017
Thursday, November 24, 2016
சாமக் கோடங்கி!!!
1976 நவம்பர் முதல் - 1977 மார்ச் வரை ஆண்டு..
நான் நாலாவது படிச்சிகிட்டிருந்த காலம். அப்போ
ஒரு நாலஞ்சு மாசம் சேலத்துக்கு பக்கத்தில் இளம்பிள்ளைக்கு அருகில்
காடையாம்பட்டின்னு ஒரு குக்கிராமத்திற்கு குடிபோனாம்.
வீடுன்னா அது வீடு இல்லை. அது ஒரு பன்னிக்
குடிசைன்னு எங்கம்மா அடிக்கடி சொல்லும். 3 அடி உயர் மண்
சுவர். அதுக்கு மேல் மூங்கிலால டைமண்ட் டிசைன் மாதிரி மூங்கில் தடுப்பு. நாலு
மூலைக்கு நாலு தாங்கல் வச்சு தென்னையோலை வேஞ்ச குடிசை. அது முழுசும் கூட
எங்களுக்கு வாடகைக்கு இல்லை. குடிசைக்கி தென்மேற்கு மூலையில எப்பவுமே
மூடிக்கிடக்கற ஒரு அறை. அது போக எல் ஷேப்பில மிச்சமிருக்கறது தான் வீடு.
வாசல் கதவு மிக மிக வலுவானது. ஆமாம் சாக்குப்பை
தான்.
இதையெல்லாம் விட முக்கியமானது. வீட்டுக்கு
நேரெதிரே சுடுகாடு.காடையாம்பட்டி ரொம்ப சின்ன ஊர். முப்பது வீடு கூட கிடையாது,
100 மீட்டர் நீளம் கூட இல்லாத ஊர். ஊர்க்கோடியில் முச்சந்திப்
புளியமரத்தில தொங்கிக் கிடக்கற பேய்க்கதைகள் ஏராளம். அந்த இடத்தைப் பாடை மாத்தி
என்பார்கள். பிணம் வீட்டிலிருந்து புறப்பட்டு இந்த பாடைமாத்தி இடம் வரை
வீட்டைப்பார்த்த மாதிரி, வீடு இருக்கும் பக்கம் காலை நீட்டிக் கொண்டு
வருமாம். இந்த இடத்தில் வந்த உடன் காடு பாக்கிற மாதிரி மாத்துவார்கள்.. அதனால்
இந்த இடத்துக்கு பாடை மாத்தி என்று பெயர்.
எங்க வீட்டுக்கும் இந்த இடத்துக்கும் அண்ணா
சமாதிக்கும் வங்காள விரிகுடாவுக்கும் இருக்கும் தூரம்..
ஆரம்ப காலத்தில் எந்தக் கதையையும் எங்களுக்குச்
சொல்ல வில்லை.
அப்போதெல்லாம் நடுராத்திரில் எங்க அக்காமர்கள்
என்னையும் என் அண்ணனையும்
எழுப்பி சிறுநீர் கழிக்க அழைத்துச்
செல்வார்கள்.. ஒரு நாள் எழுப்பிக் கூட்டிகிட்டு போகும் போது கொஞ்சம் லேட்டாகி 1:00 மணி ஆயிருச்சி .. எல்லாம் முடிந்து வீட்டுக்குத் திரும்பும் போது...
கலீர் கலீர்னு சலங்கை ஒலி.. கூடவே டமடமன்னு
உடுக்கை ஒலி..அந்த நள்ளிரவில் நாய்கள் விழித்துக் குலைக்க ஆரம்பித்தன.. நிலா
வெளிச்சத்தில் ஆறடி உயரமும் ஆஜானுபாகுவா உருவம். பாக்கறதுக்கே பயமா தலையில் பெரிய
கொண்டை.. ஒத்தை நைட்டி மாதிரி ஒரு அங்கி. கயில மயிலிறகுக் கொத்து உடுக்கை
அடிச்சபடியோ அவன் எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்னு உடுக்கை அடிக்க
ஆரம்பிச்சான். வீட்ல எல்லாரும் முழிச்சாச்சு. அம்மா ஒரு சின்ன படியில் அரிசி
கொண்டுபோய் போட,
பஞ்சம் வருகுதம்மா பேய்ப்பஞ்சம் வருகுதம்மா
பசியில் வாடுதம்மா பிள்ளைகள் பசியில் வாடுதம்மா
தஞ்சம் நீயம்மா
அப்படி ஏதேதோ சொல்லிப் பாட்டு படிச்சிட்டு
மயிலிறகால எங்க எல்லோருக்கும் பாடம் போட்டுவிட்டு போயிட்டார்..
அடுத்த நாள் தான் ஊர்ஜனங்க சொன்னாங்க, அது சாமக் கோடங்கியாம். அமவாசையில சுடுகாட்டில பூசை செய்வாராம்.
எப்பயாவது சாமி உத்தரவு வந்தா இப்படி ஊருக்குள்ள வந்து உடுக்கை அடிச்சு
குறிசொல்லுவாராம்.
என்ன சொன்னாரு என்ன சொன்னாருன்னு ஒரே
விசாரிப்பு.. நங்க ஹீரோ ரேஞ்சுக்கு ஆயிட்டோம். பஞ்சம் வரப்போகுதாமில்ல..
(இப்பன்னா ஆமாம் இந்த வருஷம் மழையே இல்லை இதைச்
சொல்ல கோடங்கி வரணுமான்னு கேட்டிருப்போம்)
பஞ்சமும் நிஜமாய் வந்தது.. அரிசிச் சோறு
கனவானது, மக்காச் சோள ரவையும், மரவல்லிக்
கிழங்குமே உணவானது.கிணறுகள் வத்தி தண்ணீருக்கு கிலோ மீட்டர் கணக்காய் நடக்க வேண்டி
வந்தது..
அது இல்ல மேட்டர். இது கோடங்கியை நாங்க பார்த்த
முதல் முறை.. அப்போ உருவம் காட்டுமிராண்டித்தனமா இருந்தாலும் அவ்வளவு பயமில்லை..
ஏன்னா மயிலிறகு.. அது ஒரு மந்திரவாதி கிட்ட இருக்காதுன்னு ஒரு நம்பிக்கை. கோடங்கி
ஊருக்குள்ள அனாவசியமா நுழையமாட்டர்ங்கற தைரியம். சுடுகாட்டுக் காளி சொல்லாமே
எதுவுமே செய்யமாட்டார் என்ற நம்பிக்கை.. அந்த நம்பிக்கை எல்லாம் அடுத்த அமாவசை
வரைதான்..
அமாவாசை நாள் 11:00
மணிக்கு சுடுகாட்டுக் காளி பூஜை ஆரம்பித்தார் கோடங்கி...
முதல் முறையா ஒரு கோடங்கி பூஜை.. சுடுகாட்டுக்
காளிக்கு. அத எப்படி போடுவாங்கன்னு அப்ப எனக்குத் தெரியாது.. பின்னாடி கேட்டுத்
தெரிஞ்சுகிட்டது..
இதுக்காக கோடங்கி சுத்து வட்டார சுடுகாடெல்லாம்
அலைவாரம். அந்தவாரம் புதைக்கப்பட்ட பிணத்தின் சவக்குழி மண், பிணமெரித்த
சாம்பல், எதாவது எலும்புத்துண்டு, எலுமிச்சம்பழம்,
பூசனி, அரளிப்பூ இப்படி பலப்பல விஷயங்களைச் சேர்ப்பார்
கோடங்கி.. அமாவாசை இரவு சுடுகாட்டில ஒரு உருவம் போட்டு (உருவத்தில சவக்குழி மண்
கலந்திருக்கும்) அதுக்கு இதையெல்லாம் படைச்சு ஓங்கி உடுக்கை அடிச்சிப்பாடி பூஜை
பண்ணுவார்.. (எங்க குல தெய்வம் அங்காளியம்மனும் சுடுகாட்டுக் காளிதான்.. காட்டில்
உருவம் போட்டு உயிர்பலி குடுத்து வணங்கற பழக்கம் எங்களுக்கும் உண்டு.. அங்காளி
என்பவள் இறந்த சதிதேவியின் உடலில்லா உயிர். அவளே பேய்ச்சியாக இருந்து பிரம்ம
கபாலத்தின் கொட்டம் அடக்கி சிவபெருமானை காப்பாற்றியவளும் ஆவாள்)
நாங்கள்ளாம் வீட்டிலயே ஒடுங்கிட்டோம்..
உடுக்கைச் சத்தம் மட்டும் ஒரு மணிநேரத்துக்கு மேல கேட்டுகிட்டு இருந்தது.. எதேதோ
சத்தங்கள், உடுக்கைச் சத்தத்திற்கு தொண்டையைச் செருமி
ஊளையிடும் நாய்களின் சத்தம் வேற திகிலா இருந்துச்சி, என்ன
நடக்குதுன்னு பார்க்க ஆசைதான் ஆனால் கடைசியா கோடங்கி தன் இரத்ததைக் காணிக்கையா
குடுக்கறப்ப பேய்களெல்லாம் அதைக் குடிக்க எழுந்திருக்குமாம்.அந்த இரத்த பலிக்குப்
பின்னால பேய்கள் அடங்கி தாகம் தீர்ந்து அமைதியாயிடுமாம். அந்த நேரத்தில யாரும்
பார்த்திடக் கூடாதாம்..
பூஜை முடிந்திருக்கும் போல கலீர் கலீர்னு
சலங்கைச் சத்தம். கோடங்கி ஓங்கிக் குரல் கொடுத்து வீல் எனக் கத்தினார்.. ஏதோ உரத்த
குரலில் உறுமினார்.. சத்தம் சன்னமா இருந்தாலும் மனசு படபடன்னு அடிச்சுக்குது..
என்னமோ சரியில்லை..
அரைமணி நேரம் கழிச்சு சீரான உடுக்கைச் சத்தமும்
சலங்கைச் சத்தமும் வந்தது.. கோடங்கி திரும்ப வர்ரார் என்றதும் எங்க அம்மா
எங்களையெல்லாம் கூப்பிட்டுகிட்டு வெளிய வந்தாங்க
வியர்த்து வடிந்து ஆவேசமாய் இருந்தது கோடங்கி
முகம். அவர் கண்ணு நிலைச்சு கூர்ந்து எங்கயோ பார்த்துகிட்டு இருந்தது.. அரிசியை
அங்கியை நீட்டி வாங்கியவர்..
அகோர பிணம் விழுது ஊரில
அடங்காத ஆட்டம் ஆடப்போகுது
ஆம்பளைங்க பத்திரம் ஆம்பிளைங்க பத்திரம்னு
ஏதோ பாட்டுப் பாடிட்டு போயிட்டாரு...
எங்களுக்கோ வயிரெல்லாம் கலங்கிருச்ச்சி.,..
அந்த மாசம்தான் காமன்பண்டிகையும் வந்தது.. இது
கிராமங்களுக்கே உரிய திருவிழா. இதில மன்மதனை சிவன் எரிக்கறது தான் ஸ்பெஷல்.
அதுக்காக துணிப்பொம்மை செஞ்சு எரிப்பாங்க.. அப்புறம் காமன் ஜெயிச்சாரா, சிவன் ஜெயிச்சாராங்கர மாதிரி ஒரு கூத்து,.. இதை
லாவணின்னு கூடச் சொல்வாங்க.. இப்ப அல்லிராணியும் நானும் சண்டைப் போட்டுக்குவமே,
அட சொற்சிலம்பத்தில நானும் சாம்பவியும் போட்டுக்குவமே அது மாதிரி
எதிர்பாட்டு பாடறது.. ஒண்ணும் புரியலைன்னாலும் பாட்டு கூத்து .. அப்புறம் ரெகார்டு
டேன்ஸ் நடந்தது. அதையெல்லாம் பாக்க எங்களை விடலை
அப்படி ஊரே ஒரு எடத்தில குந்தி ஜாலியா இருக்கறப்பத்தான்
ஊரின் அடுத்தப்பக்கதில் இருந்த் குடிசை குபுக்குன்னு பத்திகிட்டு எரிஞ்சது...
ஆமாம்.. அந்த வீட்டில இருந்த பொண்ணு மண்ணெண்ணை
ஊத்தி தீ வச்சுகிச்சு..
கரிக்கட்டயா தோலெல்லாம் உரிஞ்சு வாழை எலையில
மூட்டைகட்டி எடுத்து வந்து எரிந்தும் எரியாம இருந்த ஒடம்பை முழுசா எரிச்சாங்க..
நாங்க நாலு நாளைக்கு பக்கத்து ஊரு சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிட்டோம்..
(பயம்தான்)
வீட்டுக்கு திரும்ப வந்த பின்னாலயும் பயங்கரமான
பயம்தான். அதுவேற நம்மகிட்டதான் கற்பனைக்குப் பஞ்சம் கிடையாதே! பையன் செத்தா பேய்.
பொண்ணு செத்தா பிசாசு, எரிஞ்சு செத்தா கொள்ளிவாய்ப் பிசாசு, பூதம், ராட்சஸி, அரக்கி,
யட்சினி இப்படி எக்கச்சக்க வார்த்தைகள் தெரிஞ்சு வச்சிருக்கமே!
பயங்கர கிலிதான்..
ஊர்ல அந்த மோகினி ஒரு ஆணை பலிவாங்கப் போறதா
கோடங்கி சொல்லி இருக்காராம்.. அதனால் பசங்கள்ள இருந்து குடு குடு கிழவன் வரை
எல்லாத்துக்கும் தாயத்து, வீட்டுக்கு வீடு அணையா விளக்கு, வேப்பிலை, கதவில நாமம், விபூதி
பூச்சு இப்படி எத்தனை எத்தனியோ பரிகாரங்கள்.. நாய் குளிரில் ஊளையிட்டாலும் சரி,
வேற எதுக்கோ ஊளையிட்டாலும் சரி, கொள்ளிவாய்ப்
பிசாசு அப்படிப் போகுது, கொள்ளி வாய்ப் பிசாசு இப்படிப் போகுதுன்னு
கிசுகிசுப்பு பேச்சுகள்.. இப்பல்லாம் நாங்க உச்சா போகக் கூட ராத்திரியில் வெளிய
வரமாட்டோம்..
சுடுகாட்டுக்கு எதிர் வீடு வேற, ராத்திரியில் எப்பவாவது சலங்கைச் சத்தம் கேட்கும். கோடங்கியா,
மோகினியா.. புரியாது.. எப்பவாவது உடுக்கை சத்தம் கேட்டா மனசு
நிம்மதியா இருக்கும்..
ஊரே கிலி பிடித்து அடுத்த அமாவாசை பூசைக்கு
காத்திருந்தது.. அப்பதான் கோடங்கி பூசை போட்டு பிசாசைக் கட்டுவாராம்..
அமாவாசை வந்தது பூசையும் நடந்தது ஆனால் இந்த
முறை கோடங்கி
தோற்றுப் போனார்..
இந்த அமாவசை பூஜை உக்ர பூஜையாம்.. கோழி
பலிகொடுத்து பலகாரங்கள், பழங்கள், கிழங்குகள்
ஏதேதோ வச்சு செய்யற பூசை,, இதில தான் கோடங்கி அந்தப் பிசாசுக்கு என்ன
வேணுமோ அதைக் கொடுத்து அடக்கிச் சாந்தப் படுத்துவார்.. அதுக்கு ஒரு சின்ன
துணிப்பொம்மையில பேயை அடக்கி பாடை மாத்தி முச்சந்தியில இருக்கற புளிய மரத்தில
அறைஞ்சிருவாரு.
இந்த முறை இரண்டு மணி நேரத்திற்குப் பூசை
நடந்தது.. கோடாங்கி குதிச்சு ஆடினார்.. உடுக்கை அடித்தார்.. மந்திரம் போட்டார்..
எலுமிச்சை நறுக்கி வீசி, பூசனி வெட்டி, கோழி
வெட்டி என்னென்னவோ செய்தார்..
ஆனால் ஆவி அடங்கலையாம்.. மனித உயிர் இல்லாமல்
போகமாட்டேன் எனச் சொல்லிடுச்சாம். கோடங்கி என்னென்னவோ செய்தும் பொம்மைக்குள் அடக்க
முடியலை...
இம்முறை கோடங்கி சொல்லிட்டுப் போயிட்டாரு..
அடுத்து ஒரு ஆண் உசிரு போகும். அதன் பின்னால்தான் ஆவி அடங்கும்... ஆம்பிள்ளைகள்
ஜாக்கிரதையா இருங்க..
அந்தப் பையனும் அந்தப் பொண்ணும்
காதலிச்சதாகவும் அதனால்தான் அவள் வந்து அவனைக் கூப்பிட்டுக்கொண்டு போய் விட்டாள்
என்றும் சொன்னார்கள்.
இரண்டு பேருக்கும் மத்தியில் காதல் இருந்ததா
தெரியாது.. ஆனால் கோடங்கி அடுத்த அமாவாசைப் பூஜையில் இருவரையும் பொம்மைகளில்
பிடித்து புளியமரத்தில் அறைந்தார்.. ஜோடியாக..
இன்னும் அந்தப் புளிய மரம் இருக்கிறது.. என்
மூத்த அண்ணன் வீட்டருகே! அதைப் பார்க்கும்பொழுது அந்த பிசாசுகள் நினைவுக்கு வருதோ
இல்லியோ கோடங்கியும், உடுக்கைச் சத்தமும், சலங்கைச்
சத்தமும் மனசில் எழும்.
யாரிடமும் எதையும் அந்தக் கோடங்கி
கேட்டதில்லை.. அரிசி வாங்கிச் சென்றாலும் எங்கே சமைத்து எப்படிச் சாப்பிட்டு,
ஒருவேளை மளிகைக் கடையில் கொடுத்து காசு வாங்கிக் கொள்வாரோ?
மயில் பீலிகள் கொண்டு நள்ளிரவில் பாடம் போடுவது
வேறு ஏதாவது ஊரில் இருக்கிறதா?
அதெல்லாம் விட
கோடங்கிகள் இன்னும் இருக்கிறார்களா? எதென்றாலும் ஊருக்காகச் செய்யும் கோடங்கிகளை உங்கள் கிராமங்களில்
பார்த்து இருக்கிறீர்களா?
Wednesday, December 23, 2009
நானும் தமிழும் பாகம் - 22
முந்தைய பாகங்கள் :
டீம் - என் வாழ்வின் உபயோகமான நாட்கள்
2000 ஆம் ஆண்டு தொடங்கினப்ப ஒரு நாள் என் காலேஜ் நண்பன் தட்சிணா மூர்த்தி ஃபோன் செஞ்சான். டேய் என்னுடைய மச்சான் கார்த்திகேயன் ஈஸ்வரமூர்த்தி, நானு இன்னும் சிலபேர் சேர்ந்து நம்ம நாட்டுக்கு எதாவது செய்யனும்னு நினைக்கிறோம். அதுபத்தி டிஸ்கஸ் பண்ணிகிட்டு இருக்கோம். நீ அவரை மீட் பண்ணு என அன்புக்கட்டளை போடவே, நானும் கார்த்திகேயன் ஈஸ்வரமூர்த்தியை கால்பண்ணினேன். மார்ச் மாசம் முதல்வாரம் மீட்டிங் போடலாம்னு இருக்கோம்,, வாங்க பேசலாம்னு சொன்னார்.
சொல்லப் போனா டீமை ஆரம்பிச்சது ஈரோடு, சேலம், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள். ஒரே பிண்ணனி இவர்கள் எல்லாம் ஏழைக் குடும்பத்தில இருந்து படிப்பு என்ற ஒரே ஏணியின் மூலம் மேல வந்தவங்க. எதாவது நம்ம நாட்டுக்குச் செய்யணும்னா அதைப் ஆரம்பப் பள்ளியில இருந்துதான் ஆரம்பிக்கணும்னு ஒரு ஒத்த கருத்து எல்லார்கிட்டயும் இருந்தது.
ஆனா பணமா குடுத்தா நம்ம மக்கள் அதை அமுக்கத்தான் பார்ப்பாங்க. அதே தனி மனிதனுக்கு உதவினா அதனால சமூகம் எப்படி பயன்படும்?
சில பல விவாதங்கள். அந்த விவாத முடிவில உதிச்சதுதான் டீம்.
இது டீமுக்காக நான் எழுதிய முதல் இதழ். இந்த இதழில் டீம் எப்படி உருவானது என விரிவா எழுதி இருக்கேன்,.
இன்னும் டீம் நல்ல முறையில் செயல்பட்டுகிட்டு இருக்கு. இதைப் பத்தி முழுசா தெரிஞ்சிக்க
இங்க போய் பாருங்க.
கார்த்திகேயன் ஈஸ்வரமூர்த்தி, ஒரு தனித்துவமான மனிதர். இவரைப் போன்ற மனிதரை இன்றும் நான் கண்டதில்லை. அனைவரிடமும் நயமாய் பழகும் பாங்கு, அர்ப்பணிப்பு உணர்வு. சிந்தனைத் தெளிவு, அரவணைத்துச் செல்லும் மனப்பாங்கு.
எனக்கு ஒரு ஆசை உண்டு.. அமெரிக்காவில் இருந்து வந்த பின்னர் டீமில் பங்கு பெற இயலவில்லையே என்ற வெறுமை உணர்வு. எனக்காக என் குடும்பத்திற்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறேனே என்கிற உணர்வு.. எப்படி ஆரம்பிப்பது, எப்போது ஆரம்பிப்பது என்று புரியவில்லை, ஆனால் ஆரம்பித்துதான் ஆக வேண்டும்.. கூடிய விரைவில்.
இந்த ஒரு பதிவின் மூலம் டீமை மன்ற மக்களுக்கு அறிமுகப் படுத்துவதில் பெருமைப் படுகிறேன்..
தய்யவு செய்து ஒருமுறையேனும் அந்த இணைய தளத்திற்ற்குச் சென்று முழுமையாய் வாசியுங்கள். டீம் செய்த பணிகள், அது எந்த அள்விற்கு வளர்ந்திருக்கிறது என்ற விவரங்கள், நாங்கள் செய்த நற்பணிகள்..
தமிழ் காத்திருக்கும் ஓரிரு நாட்கள்...
தொடரும்
.
Saturday, December 12, 2009
நானும் தமிழும் - பாகம் 21
சிஸ் இண்டியா, வலை நண்பர்கள் பகுதியில் இரு பெயரில் நுழைந்தேன்
1. என்னுடைய சுயமுகம்
2. பெண்முகம்
என்னுடைய சுயமுகத்துக்கு மவுசு இருக்கத்தான் செஞ்சது. செல்வி, பிரேமா, சுஜாதா, குணசுந்தரி போன்ற மலேசியத் தோழிகளும், ஆனந்தி, அருணா தேவி போன்ற அமெரிக்கத் தோழிகளும் கிடைத்தார்கள்.
பெண் முகத்துக்கு ராசியே இல்லை. ஒரே ஒரு பையன் சிவா, தினம் அவன் ஒரு கவிதை எழுதி அனுப்ப நான் அதுக்கு பதிலா கவிதை எழுத கொஞ்ச நாள் ஓடிச்சு, ஆனா பாருங்க நம்ம அருணாதேவிக்கும் சிவா ஃபிரண்டு.
அருணாதேவியோட வீடு எங்க வீட்ல இருந்து அஞ்சு நிமிஷம் தான். பார்த்து பேசி பழகி இருக்கோம். அவன் அருணா கிட்ட உங்க ஊர்ல இன்னொரு பொண்ணு இருக்கான்னு சொல்ல, என் கவிதையை அருணா எனக்கே காட்டினாங்க.
சிரிசிரின்னு சிரிச்சோம். அப்புறம் சிவாவுக்கு உண்மையைச் சொல்ல பையன் சொல்லாம கொள்ளாம எஸ்கேப் ஆயிட்டான்.
சுஜாதாவிற்கு கல்யாணம் ஆகும் வரை அவங்களோட நட்பு இருந்தது. குணசுந்தரியும் அப்படித்தான். ஆனால் செல்வி கல்யாணம் பண்ணிகிட்டு எங்க வீட்டுப் பக்கத்திலயே வந்தாங்க. ஒரு அண்ணனா இருந்து அவங்களுக்கு தாலிக்கொடி மாற்றும் விழாவெல்லாம் செய்யும் பாக்கியம் கிடைச்சது. ஒரு வருஷத்துக்குப் பின்னால அவங்க மறுபடி மலேசியா போயிட்டாங்க.
பிரேமா, ஆனந்தி நட்பு இன்னும் இருக்கு. என்னைப் பொருத்தவரை இணையத்தில் இணைந்த அத்தனை பேருமே ரொம்ப அன்பாய் இருந்தாங்க.
1999, ஜூன் 16, பொண்ணு பாக்கப் போனேன். அப்ப நடந்த உரையாடல்தான்
அப்பா : என்னடா, 7:00 மணிக்கு கிளம்பனும், இன்னுமா ரெடியாகலை?
செல்வன் : இருப்பா இப்பதான் குளிச்சிருக்கேன் இன்னும் கிளம்ப ஒருமணி நேரமாவது ஆகும்..
அப்பா : டேய் சீக்கிரம்டா
செல்வன் : எப்ப கிளம்பினாலும் ஏண்டா இப்படி லேட் பண்றீங்க, நாம என்ன பொண்ணு பார்க்கவா போறோம் அப்படீம்பிங்க.. இப்ப நிஜமாவே பொண்ணு பார்க்கப் போறோம் லேட் ஆகுமா ஆகாதா???
அப்பா:
பார்த்த முதல் பெண்ணே அண்ணிதான். அன்றே ஓ.கே சொல்லிவிட நவம்பர் 14 க்கு கல்யாணம் நிச்சயிக்கப்பட்டது.
உங்களை மாதிரிதான் தம்பிகளா, என் ஃபோனும் பிஸியாவே இருக்கும். ஆனா அதைவிட என்ன விஷேசம்னா அண்ணியும் நானும் கடிதங்கள் எழுதிக்குவோம்.. ஒரு 50 கடிதங்கள் இருக்கும். எல்லாம் சேர்த்து வைத்திருக்கோம். ஓவியன் மாதிரி போட்டோ ஷாப்ல வெட்டி ஒட்டி ஜிகினா வேலை பண்ணி என்னென்னமோ..கவிதைகள், பெரிய பெரிய கடிதங்கள் தான்.. பத்து A4 ஷீட் மினிமம். நமக்கே நமக்குன்னு கவிதைகள் எழூதும் பொழுது அதில் இருக்கும் சுகமே அலாதி. அதுவும் இந்தச் சந்தர்ப்பத்தில். இன்னிக்கும் அந்தக் கடிதங்கள் பத்திரமா இருக்கு. அதுதானே மிகப் பெரிய சொத்து..
என் கல்யாணத்திற்கு அழைப்பிதழ் நானே வடிவமைத்து பிரிண்ட் செய்தேன். அதை எடுத்துகிட்டு அழைக்கப் போனப்ப தான் அது நடந்தது.
என்னோட தமிழாசிரியர் பிள்ளார் செட்டி, ஓவிய ஆசிரியர் கூட நின்னுகிட்டு இருந்தார்.. கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்து விட்டு அழைப்பிதழைக் குடுத்தா,
சாம்பவி மாதிரி, என்னடா தாமரை செல்வன் னு போட்டிருக்க "ச்" எங்கடான்னு கேட்டாரு..
தேமலரின் உள்ளிருக்கும் தெள்ளமுதம் போல்பொழிவான்
தாமரைச் செல்வன் கவி
என்று எனக்கு வாழ்த்துக் கவி கொடுத்தவராச்சே! அவர் மானத்தைக் காப்பாத்த வேணாமா? சட்டுன்னு ஒரு பிட்டு எடுத்து விட்டேன்
ஐயா, தாமரை என்பது பெண்பால் பெயர். செல்வன் என்பது ஆண்பால் பெயர். ஒரு ஆணும் பெண்ணும் புணரும் பொழுது "இச்" என்ற சத்தம் எழுமானால் அது நாலு பேருக்கு கேக்கக் கூடாது.....
ஓவிய ஆசிரியர் வாயடைச்சு போயிட்டார்..
பிள்ளார் செட்டி கிச்சு கிச்சு மூட்டறியேன்னு சமாளிச்சார்.
கல்யாணம் நல்ல படியா முடிந்து அண்னியும் நானும் அமெரிக்கா வந்தாச்சு. இணைய தோழிகள் அண்ணிக்கு முதல்லயே நன்கு அறிமுகம் ஆகி இருந்ததால் ஜாலியா வாழ்க்கை போனது..
2000 வருடம் மார்ச் மாதம் ஒரு பழைய நண்பன் (தட்சிணா மூர்த்தி- கல்லூரி நண்பர்) கிட்ட இருந்து ஒரு ஃபோன் வந்தது. என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் தந்தது.
தொடரும்
.
நானும் தமிழும் - பாகம் 20
அதிரடி மறுபிரவேசம்!!
நியூஸ் குரூப்னா அப்ப தமிழ் ஃபாண்டெல்லாம் இல்லை. அதனால இங்கிலீஸ் லெட்டர்ஸ், தமிழ் வார்த்தைகள்ள். அங்க விவாதங்கள் எல்லாம் படு பயங்கர ஆவேசமா இருந்தது.
திருவள்ளுவர் ஒரு சமணர் அப்படின்னு ஒரு விவாதம். திருமந்திரத்தையும் திருக்குறளையும் ஒப்பிட்டு சைவம் உண்டு என வாதாடினேன்.
சமணமும் இந்தியாவில் பிறந்துதானே.. பண்பாட்டு ஒப்புமை இருக்கத்தானே செய்யும். திருவள்ளுவர் அது பொதுநூலாய் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தான் வெளிப்படையாக எந்த மதத்தையும் காட்டாமல் எழுதினார்.
மழித்தல் சமணம், நீட்டல் சைவம் எனவே மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்று சொல்வதின் மூலம் அவர் ஒரு பொது மனிதனாகத்தான் தன்னை அடையாளம் காட்டுகிறார்.
இப்படி எத்தனையோ வாதங்கள். ஒவ்வொரு வாதத்திற்கும் இது சமணத்தில் உண்டு என்று சொல்பவர்கள் இது சைவத்தில் இல்லை என நிரூபிக்க வேண்டும் என வாதாடினேன். மெல்ல மெல்ல பதில்கள் குறைந்தன
அடுத்த சூடான விவாதம் வேதத்தில் எல்லாம் உண்டு என்பது. வேதத்தில் அது உண்டு இது உண்டு என ஒருவர் ஒரு பதிவு போட்டிருக்க அவரைக் கேட்ட கேள்வி..
அய்யா பல்லாயிரம் வருடங்களாக வேதம் கற்று வருகிறோம். நீங்கள் சொல்லும் அத்தனை நுட்பங்களும் தற்போது வெளிநாட்டுக்காரர்களின் பெயரைத் தாங்கி நிற்கின்றன.
இப்பொழுது இதைச் சொன்னால் மக்கள் ஒத்துக் கொண்டாலூம் சரி மறுத்தாலும் சரி, பயனொன்றுமில்லை. போனது போகட்டும்.
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இன்னும் வேதத்தில் பல நுணுக்கமான தொழில் நுட்பங்கள் இருக்கக் கூடும். அதில் ஒன்றையாவது கண்டுபிடித்து வெளியிடுங்கள். அது நம் வேதத்தின் பெருமையை நிலை நாட்டும் என ஒரு போடு பொட அவர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடினார்.
அடுத்து பாமியான் புத்தர் சிலை இடிப்பு.. ஒருவர் உருவ வழிபாடு எங்கள் மதத்திற்கு ஒவ்வாததது. வழிபாட்டு உருவங்கள் எங்கிருந்தாலும் உடைப்போம் என்ற்று கொக்கரித்தார்..
ஐயா சற்று தலை உயர்த்திப் பாருங்கள் அதோ வானில் தெரிகிறதே சூரியன் அதை நாங்கள் வனங்குகிறோம்.. முடிந்தால் அழித்து விடுங்கள்.
சற்றுக் குனிந்து பாருங்கள், உங்கள் காலடியில் தெரிகிறதே பூமி, அதையும் நாங்கள் வணங்குகிறோம் உடைத்து விடுங்கள்.
சரி கண்ணை மூடிக் கொண்டு ஆழ்ந்து சுவாசியுங்கள். அடடா அந்தக் காற்றைக் கூட நாங்கள் வணங்குகிறோம்.. மூச்சு விடாதீர்கள். மூக்கிலும் வாயிலும் வெடி வைத்துக் கொள்ளுங்கள் என ஏக கிண்டலாக ஒரு பதிவிட்டேன்..
அடுத்த விவாதம் இராமன் மற்றும் கிருஷ்ணரின் காலங்களை கிரக நிலைகளைக் கொண்டு கணித்து வெளியிட்ட ஒரு பதிவு..
அதில் இருந்த பளீரிடும் முரண்பாடுகளை, ஜோதிட நுணுக்கங்களைக் கொண்டு வாதிட்டேன்.. ஆமாம் ஜோதிடம் எப்போது படித்தேனா?
அது கல்லுரியில் இரண்டாம் ஆண்டு படித்த காலம். அப்பா ஜோதிட ஆசான் என்று 4 தொகுதிகள் கொண்ட மிகப்பெரிய புத்தகம் வாங்கி படித்துக் கொண்டிருந்தார். லீவு நாட்களில் படித்தேன்.
இதெல்லாம் எல்.எஸ்.ஐ யில் இருந்த ஆறு மாதக்காலம்தான், அப்போது ஜியோசிடிஸ் தளத்தில் முரசு அஞ்சல் மூலம் ஒரு தளம் தொடங்கினேன். இன்னும் அது இருக்கிறது. http://www.geocities.com/stselvan/ முரசு அஞ்சல் ஃபாண்ட் இருந்தால் படிக்கலாம். எனது பழைய கவிதைகளையும் இன்னும் சில எண்ணங்களையும் இதில் பதித்தேன்.
அடுத்து நான் வைத்த அடி - நெட் ஃபிரண்ட்ஸ். இணைய நண்பர்கள்,
தொடரும்.

நானும் தமிழும் - பாகம் 19
பாட்டெழுதிப் பாட்டெழுதி!!
மெசன்னஸுக்குப் பின் என் தமிழின் தடம் மாறியது.. அப்ப இருந்த ஜூனியர்ஸுக்கு எழுதக் கத்துக் கொடுப்பதுதான் முதல் பணி. முருகானந்தம், ஜெயக்குமார், பாசு என்கிற பாலசுப்ரமணியம் இப்படி இளைஞர்கள்ள் என்னைச் சுத்தி சுத்தி வர அவங்களுக்கு எழுதக் கருப்பொருள் கொடுத்து சிந்திக்க வச்சு இப்படியும் எழுதலாமேங்கற சிந்தனைகளை வளர்க்க ஆரம்பிச்சேன்.
என்.எஸ்.கே முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலம் அவர்களோட தம்பி மகன். அவனுக்கு ஒரு ஆசை. சினிமா எடுக்கணும்.. (ஆஹா இப்ப வந்ததா கனெக்ஷன்..)
அவனுடைய சித்தப்பா பெரியப்பா மக்கள் ஆறு பேர் சேர்ந்து ஒரு கம்பெனி ஆரம்பிச்சாங்க. சிக்ஸ் ஃபோர்ஸஸ் (ஆறுபடை) என்று பெயர். அதில் வாழற வயசுன்னு ஒரு படத்துக்குப் பூஜையும் போட்டாங்க..
எல்லோரும் ஒரு நாள் காலேஜூக்கு வர என்.எஸ்.கே என்னை எல்லோருக்கும் அறிமுகம் செய்தான்..
எதெதோ கதை டிஸ்கஷன், அப்புறம் பாட்டு எழுதனும்.. நானும் கதை டிஸ்கஷனில் பங்கு கொள்ள, இப்ப வந்திருக்கற கல்லூரி மாதிரி இளமையான ஒரு கதை ரெடிபண்ணி முடிச்சோம். பாட்டு சிச்சுவேஷன் எல்லாம் புடிச்சு அஞ்சு பாட்டு எழுதிக் கொடுத்தேன். அடிப்படைக் கதையை வாங்கிகிட்டு, பாடல்களையும் வாங்கிகிட்டுப் போனவங்க ஆறுமாசம் கழிச்சு திரும்பி வந்தாங்க..
கதைக்கு ஃபைனான்ஸ் புடிச்சாச்சி, புது டைரக்டர், இசை வேதா அப்படின்னு ஒரு கேரள இசையமைப்பாளர். என் ஐந்து பாடல்களையும் ரெகார்ட் பண்ணின கேஸட் கொடுத்தாங்க... நம்ம பாட்டை நாம கேஸட்ல கேட்கறப்ப இருக்கற இன்பம் அலாதிதானே.
எட்டாவது செமஸ்டர் வந்திட அனைத்து கொட்டங்களும் அடங்கி ஒழுங்கா படிக்க ஆரம்பிச்சிட்டோம். அதுக்குப் பின்னால நான் எழுதிய ஒரே கவிதை நாங்க பிரிஞ்சு போவதைப் பத்திதான்..
தமிழ் என் நாக்கிலிருந்தும், கைகளில் இருந்தும் ஓய்வெடுக்கற காலம் வந்தது. 1989 லிருந்து 1997 வரை, எனக்கும் தமிழுக்கும் இருந்த தொடர்பு குமுதம், குங்குமம், மாலைமதி, பாக்கெட் நாவல்கள், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் இப்படி வார மாத இதழ்கள் தான்.
1997 லில அமெரிக்கா வந்தேன். எல்.எஸ்.ஐ லாஜிக்ஸ்ல காண்ட்ராக்டர்.. அப்பதான் நியூஸ்குரூப் மெம்பரானேன்..

நானும் தமிழும் - பாகம் 18
ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி!
இதென்றும் தமிழ் சேவை செய்ய முளைத்தது இல்லை. 1988 ஜனவரி மாசம் 14 ஆம் நாள் பொங்கலுக்கு ஆரம்பிக்கப்பட்டது இந்த ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி.. எம்.ஜி.ஆர் நடிச்ச நாடகக் கம்பெனி பெயரான ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி என்ற பேரில ஒரு கேங்க் சேர்ந்தோம். இதுதான் நான் ரொம்ப நாள் இருந்த குரூப்.
சஃபீ, ஜெயக்குமார், என்.எஸ்.கே, சிவகுமார், சுந்தரராஜன், நான், ராஜபிரபு, செல்வராஜ்.. இந்த எட்டுபேர்தான் இந்த கம்பெனி மெம்பர்கள். ஆரம்பமே அதிரடி..
காலேஜ் ஆஃபிஸ்ல எல்லா ஸ்டூடண்ட்ஸ் அட்ரஸூம் வாங்கினோம்.. நான் ஒரு பொங்கல் வாழ்த்துக் கவிதை எழுத போஸ்ட் கார்ட் வாங்கி பிரிண்ட் செய்து .. இவண் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனின்னு மெம்பர்ஸ் பேர் போட்டு எல்லார் அட்ரஸும் இராப்பகலா எழுதி போஸ்ட் செஞ்சோம்.
ஒரே நாளில் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி டாப் கியரில் எகிற ஆரம்பிச்சாச்சு..
எங்க கொள்கைகளா?
1. வெட்டி பந்தா பண்றவங்களை ஓய்க்கிறது
2. காதலர்களுக்கு உதவுவது
3. டைரக்டரிலிருந்து பியூன் வரை பாசம் காட்டறது
4. எல்லோரும் 8 வது செமஸ்டர்ல ஆல்பாஸ் பண்ணறது
5. கவலை இல்லாம வாழ்க்கையை எஞ்ஜாய் பண்ணறது
இப்படி இருக்கறதுக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்??
இருந்திச்சே

நானும் தமிழும் - பாகம் 17
நாட்டாமைத் தீர்ப்பு
நான் தீர்ப்பு சொல்ல எழுந்தேன்.. முதல்ல முடிவுகளைச் சொல்லிட்டேன்.. அப்புறம்தான் சொன்னேன்.. நண்பர் ஒரு கருத்து சொன்னார்.. நான் நானாக இருந்தால் நீ நீயாக இருந்தால் அது அதுவாக இருந்தால் இது இதுவாக இருந்தால் நாம் நாமாக இருக்கலாம் என்று..
இது தவறான கருத்து..
நான் நானாக இருந்து நீ நீயாக இருந்து இதோ இந்த நாற்காலி மரமாய் இருந்தாலென்ன மரம் நாற்காலியாய் இருந்தால் என்ன நாம் நாம்தானே!
ஆனால் அப்படி மட்டுமே சொல்லிவிட முடியுமா நானும் நீயும் மட்டுமே நானாகவும் நீயாகவும் இருந்தால் நாம் ஆகிய மூகாம்பிகைக் கல்லூரி மாணவர்களும், நீங்கள் ஆகிய பல கல்லூரி நண்பர்களும் நாங்களாகவும் நீங்களாகவும் இருந்தால் தானே நாம் நாமாக இருக்க முடியும்..
அவ்வளவுதானா இல்லையே! நாங்களில் நானடக்கம், நீங்களில் நீ அடக்கம். அப்படியானால் நாங்களும் நீங்களும் போதுமே நாம் நாமாக இருக்க...
இப்போது அவர்கள் அதாவது இவ்விழாவில் பங்கு கொள்ளாதவர்கள், இவர்கள் இவ்விழாவினைக் காண வந்திருக்கும் ஊர்மக்கள், அனைவரையும் எடுத்துக் கொள்வோம். அவர்கள், இவர்கள் என எவர்களையும் பற்றிக் கவலைப்படாமல் நாங்களும் நீங்களும் இருப்பதில் தானே நாம் நாமாக இருக்கிறோம்..
ஆக நாம் நாமாக இருக்க நாங்கள் நாங்களாயிருந்து நீங்கள் நீங்களாயிருந்தால் போதும் இப்போது இன்னொரு சாத்தியக் கூறும் உள்ளது.. நாங்கள் நீங்களாயிருந்து நீங்கள் நாங்களாயிருந்தால் நாம் நாமாக இருக்க முடியுமா? இது சற்று கடினமான கேள்விதான்.. ஏனென்றால்
வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்.. பிளேடை பிளேடால் தான் அறுக்க முடியும்.. ஆனாலும் ஒரு சந்தேகம். அறுக்கிற பிளேடு அறுபடுமா? அறுபடும் பிளேடு அறுக்குமா? எனவே அறுப்பது என் கடன் அறுபடுவது வினைப்பயன்..
இங்கே நடந்தது அறுவைப் போட்டி.. மக்களின் சிந்தனையே மழுங்கும் அளவிற்கு அறுத்த பச்சையப்பாஸ் மாணவரையே சிறந்த பிளேடு என்று அறிவிக்கிறேன் எனத் தீர்ப்பு சொல்ல..
பந்தலே அதிர்ந்தது..
போட்டிகள் முடிய நிறைவு விழாவும் இனிதே முடிந்தது. இப்பொழுது அதே ஜெய்சங்கர் முன்னிலையில் மேடையேறி கவிதை படைத்து அந்தக் கடைசிக் கலிங்கப் போரையும் (Final Frontire) வென்றேன்..
ஆனால் கல்லூரி சாகஸங்கள் இதோடு முடியவில்லை..

நானும் தமிழும் - பாகம் 16
மெசன்னஸ் 88
இவ்வளவு நாள் போட்டிகளில் கலந்துகிட்ட கொண்ட நாங்க, போட்டிகளை நடத்த ஆசைப்பட்டோம். மேனேஜ்மெண்ட் ஓ.கே சொல்லி ஒரு லட்ச ரூபாய் தர்ரதாச் சொல்ல விறுவிறுன்னு வேலை நடக்க ஆரம்பிச்சது..
சரவணன் தலைமையில் கூடி, கமிட்டிகள் அமைக்கப்பட்டது, எடிட்டோரியல், மற்றும் தமிழ் ஈவண்ட் ஆர்கனைசிங் நம்ம கையில. மக்கள் பம்பரமா சுழன்று திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டைன்னு எல்லா இடத்திலும் ஸ்பான்ஸர்ஸ், டொனேஷன்னு கலெக்ட் பண்ணினாங்க.. வசூல் மட்டுமே மூணு லட்சத்தைத் தாண்ட பிரம்மாண்டமாய் பந்தல்கள் மேடைகள் போட்டோம். மூன்று நாட்கள் விழா.. முதல் நாள் மாலை ஆரம்பம்.. வெல்கம் ஈவண்ட்ஸ், எங்கள் கல்லூரி மாணவர்களோட கலை நிகழ்ச்சிகள், இரவு உணவு.. அடுத்த நாள் கலையில் இருந்து மூணாம் நாள் மதியம் வரைப் போட்டிகள்.. மூணாம் நாள் மாலை பரிசளிப்பு மற்றும் நிறைவு விழா..
பம்பரமா சுத்தி வாங்கி வந்த விளம்பரங்களையும், கல்லூரி மக்களோட படைப்புகளையும் வச்சு மெஸன்னஸ் 88 இதழ் லே-அவுட் போடப்பட்டது. அப்ப புதுக்கோட்டையில கம்ப்யூட்டர் எடிட்டிங் பிரிண்டிங் இருந்ததால ஒவ்வொரு பக்கத்தையும் பார்த்து பார்த்து செதுக்கினோம்.. மேகசின்ல பேர் வரணும்னு ஆசைப்பட்டவங்களுக்கு ஒரு துணுக்கோ, ஹைக்கூவோ சின்னதா நாங்களே எழுதி பேர் போட்டோம்..
நிகழ்ச்சி அட்டவணைத் தயாரித்தோம். கவிதை, ஒரு நிமிடம் தமிழில், பிளேடு (ஹாஹாஹா நாந்தானே நடுவர்) பாட்டுக்குப் பாட்டு, அபவ்ட் டர்ன் இப்படி நச்சுன்னு நாலே நாலு நிகழ்ச்சி மட்டும் என்னுடைய அரேஞ்மெண்ட்..
கவிதைப் போட்டி வெறும் எழுத்துங்கறதால அமைதியாப் போயிடுச்சி.. முதல் பரிசு பச்சையப்பாஸ்ல எம்.ஏ தமிழ் லிட்டரேச்சர் படிக்கிற மாணவர்..
ஒரு நிமிடம் தமிழிலும் அவரே கலக்கினார்.. 4 ரவுண்ட் கழிச்சு பார்த்தப்ப அவர் மட்டுமே இருக்க அதிலும் முதல் பரிசு,,
பாட்டுக்குப் பாட்டு போட்டி.. படுசூடாப் போயிட்டு இருக்க அவருக்கு கிடைத்த எழுத்து ஞா...
என்ன செய்யறது ஞானப் பழத்தை பிழிந்து ரசம்... என ஆரம்பிச்சிட்டு தடுமாற தகுதி நீக்கம் ஆனார். அன்னிக்குத்தான் நான் மேடையில் முதன் முதலா பாடினேன், கூட்டத்தின் சவாலை ஏற்று (40 நாள் தொடர்ந்து திருவிளையாடல் செகண்ட் ஷோ பார்த்தவனாச்சே). சுவேதாவின் பாட்டுக்கு பாட்டுக்கு பாட்டில் கூட இதைப் பாடி இருக்கேன்,.
எபவ்ட் டர்ன் ஒரு காமெடியாப் போச்சு.. நிறையபேர் சொதப்பிட்டாங்க.. உருப்படிய பண்ணின மூணு பேர்தான். அழகப்பா கல்லூரி முதலிடம், அண்ணாமலை இரண்டு பச்சையப்பாஸ் மூணாவது இடம்.
என்னுடைய தலைமையில் நடந்த கடைசி போட்டி பிளேடுப் போட்டு.. கன்னா பின்னான்னு கடி.. வந்தவனுங்க எல்லாம் அறுக்கறதுன்னு முடிவு பண்ணி வந்தவனுங்க. உரலில தலையை விட்டுட்டு உலக்கைக்கு பயந்தா முடியுமா?
அந்த பச்சையப்பாஸ் மாணவர் பேச எழுந்தார்..
நான் நானா இருந்து நீ நீயா இருந்து அது அதுவா இருந்து இருந்தா இது இதுவா இருந்தா நாம நாமளா இருக்கலாம். அதுவே நான் நானா இல்லாம நீ நீயா இருந்து அது அதுவா இருந்து இது இதுவா இருந்தா நாம நாமளா இருக்க முடியாது. அதே சமயம் நான் நானா இருந்து நீ நீயா இல்லாம அது அதுவா இருந்து இது இதுவா இருந்தா நாம நாமளா இருக்கமுடியாது.. அதே மாதிரி நான் நானா இருந்து நீ நீயா இருந்து அது அதுவா இல்லாம இது இதுவா இல்லாட்டி நாம நாமளா இருக்க முடியாது.. அப்படித்தாங்க நான் நானாக...
அவர் அறுத்துத் தள்ள மக்கள் கூட்டம் தாங்க முடியாமல் அலறியது..
எனக்குள் ஒரு சாத்தான் டக்கென்று விழித்தான்..

நானும் தமிழும் - பாகம் 15
அடுத்த வெற்றி- சண்முகா இஞ்ஜினியரிங் காலேஜ். இதில் தமிழின் பங்களிப்பு அதிகம் இல்லையென்றாலும், மன்றத்தின் பங்களிப்பு இருந்தது. இங்கும் சுழல் கோப்பை எங்கள் கையில்..
இது முடிந்ததும் அக்கல்ஃபெஸ்ட். காரைக்குடி அழகப்பச் செட்டியார் கல்லூரி.. இங்கும் கடும் போட்டி. காட்டாற்ற்று வெள்ளமாய் இல்லாமல் கரை கட்டிய காவிரியாய் எங்கள் கலைக் குழு பயணித்தது.. இங்கு இரு போட்டிகளில் நான் கலந்து கொண்டேன். 1. அபவ்ட் டர்ன்.. அதாவது ஒரு தலைப்பு கொடுத்து விடுவார்கள். அதைச் சார்ந்து 5 நிமிடம் பேச வேண்டும். அதன் பிறகு மணி ஒலித்தவுடன் அதே கருத்துகளை எதிர்த்துப் பேச (ஏச) வேண்டும்.
எனக்குக் கிடைத்த தலைப்போ ""வகுப்பறையில் தூங்கக் கூடாது". செண்டிமெண்டலாக பேச ஆரம்பித்த நான் மணியடித்த பின் நான் கூறிய அத்தனைக் கருத்துக்களையும் உடைத்த போது, அதுவும் சுயநிதிக் கல்லூரிகளின் விரிவுரையாளர்களின் தரத்தை உரசிப் பார்த்தபொழுது எழுந்த கரகோஷமே என் வெற்றியை உறுதி செய்து விட்டது (ஆமாம் ஆதவா, அப்பவே அண்ணன் அப்படித்தான், மாற்றுபொருள் எடுப்பதில் மன்னன். ஒரே வசனம். இருவேறு அர்த்தங்கள்.. அசத்திபுட்டமில்ல)..
இரண்டாவது போட்டி தெதே தெத் அதாவது நேர்முகப் போட்டி.. இவர்கள் சந்தித்தால் போன்ற ஒரு போட்டி.. நானும் சரவணனும் கலந்து கொண்டோம். எங்களைச் சோதிக்கவே வந்த மாதிரி கிடைத்த தலைப்பு, வ.உ.சி. யும், ம.பொ.சி யும்.. மற்றவர்களுக்கோ ரவிசாஸ்திரியும் பிள்ளையார் கொவில் சாஸ்திரியும், டி.ஆரும், டி ஆர் மகாலிங்கமும் இப்படி சத்துள்ளதாக நகைச்சுவை வாய்ப்புள்ளதாக இருக்க, விடுதலைப் போராட்ட வீரர்களைக் கொண்ண்டு நகைச்சுவையாய் பேச எங்களுக்கு மனமின்றிப் போனது.
ம.பொ.சி நிரந்தர மேலவை உறுப்பினர், சிலப்பதிகாரம் கரைத்துக் குடித்தவர் என்பதுவும், ஊழல்களை எதிர்க்காமல் ஆளும் கட்சிக்கு ஆதரவு அளித்தவர் என்பதையுமே கொண்டு வ.உ.சி ம.பொ.சி க்கு அறிவுரைச் சொல்வதைப் போல அமைந்த அந்த உரையாடல் கைதட்டல் பெற்றாலும் மூன்றாம் பரிசையே பெற்றது. இருந்தாலும் அதுவே எங்களுக்கு மதுரை வக்ஃப் போர்டு காலேஜ் தான் இந்த முறைப் போட்டி..
இறுதிப்போட்டி வரை யார் வெல்லப்போகிறார்கள் எனத் தெரியாமல் இருந்தது. வக்ஃப் போர்டு கல்லுரியில் நடிகர்களிம் டூப்பாக, மிமிக்ரி கலைஞர்கள் இருந்தது அவர்களுக்கு வசதியாக இருக்க கடைசிப் போட்டியாக பேஷன் ஷோ!
தெதே தெத்தினால் நாங்கள் 2 புள்ளிகள் முண்ணனியில் இருக்க, பேஷன் ஷோவில் இரண்டாம் இடத்தில் வந்தாலே அவர்கள்ள வென்று விடுவார்கள் என்ற நிலை இருந்தது. எங்கள் டீமோ இதில்தான் வீக்.
எங்கள் மூளைகளை கசக்கி பேஷன் ஷோவிற்கு ஐடியாக்கள் பிடித்தோம். போட்டி ஆரம்பமானது. எங்களுக்குத் தெரியும் கீழக்கரை முகம்மது சதக் கல்லூரிதான் முதலிடம் பெறுமென்று..
இம்முறையும் தங்கைகள் தான் எங்கள் பிரம்மாஸ்திரம். மடிசார், குஜராத்தி ஸ்டைல், என புடவை அணியும் ஸ்டைல்களே எங்களில் அஸ்திரம். வக்ஃப் போர்ட் காலேஜோ, கூலாக அரைக்கை சட்டையுடன் டை கட்டிய எம்.ஜி.ஆரையும், பைப் புகைக்கும் ரஜினியையும் இப்படி பாப்புலர் கலைஞர்களைக் களத்தில் இறக்க, அவர்களுக்குக் கிடைத்த வரவேற்பு எங்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது. எங்களாலேயே கைதட்டாமல் இருக்க முடியவில்லை..
நடுவர் - பாலகுமாரன்..
பேச எழுந்தார்..
முதல் பரிசு முன்னால் எதிர்பார்த்து தற்போது எதிர்பார்க்காத முகம்மது சதக், இரண்டாம் பரிசு மூகாம்பிகை, மூன்றாவது பரிசு வக்ஃப் போர்டு கல்லூரி..
மிகப் பெரிய கூஊச்சல் குழப்பம். என்னதான் நாங்க ஜெயிச்சுட்டாலும், கொண்டாட முடியுமா?? பெரிய கலவரமே மூளுகிற நிலமை. பாலகுமரன் சொன்னார்.
கூட்டத்தின் அபிமானம் வக்ஃப் போர்டு கல்லூரிப் பக்கம்தான். அவர்கள் செய்தவை அனைவரையும் கவர்ந்தன. ஆனால் இந்த நாற்காலியில் அமர்ந்திருக்கும் நான் உணர்ச்சி பூர்வமான தீர்ப்பை அளிக்க விரும்பவில்லை..
இது பேஷன் ஷோ.. அப்படி இருக்க உடையில் புதுமை இருக்க வேண்டும். ஆனால் அது மட்டும் அந்தக் கல்லூரிப் போட்டியாளர்களிடம் மிஸ்ஸிங். இது ஒரு மாறுவேடப் போட்டியாக இருந்திருந்தால் முதல் பரிசு அவர்களுக்குத்தான். ஒரு ஓவியப் போட்டியில் சிறந்த கவிதைக்கு பரிசளிக்க முடியாது. அதனாலேயே அவர்களுக்கு மூன்றாமிடம் என விளக்கி அமைதிப்படுத்தினார்.
நான்கு சுழல் கேடயங்கள். அடுத்தது என்ன??
எங்கள் சொந்தக் கலை விழாதானே!!.. வேலைகளை ஆரம்பித்தோம்
மெசன்னஸ்...
தொடரும்
..

நானும் தமிழும் - பாகம் 14
டுத்து நடந்த முக்கிய போட்டி, YMCA, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடத்திய தஞ்சை, திருச்சி, புதுகை மாவட்டக் கல்லூரிகளுக்கிடையேயான போட்டி.
இந்தப் போட்டியில் நான், பழனியப்பன், தளப்தி, லஷ்மி, வளர்மதி, சிகாமணி ஆகியோர் கலந்து கொண்டோம். கவிதை, கட்டுரை, கதை, பாட்டு என பல பிரிவுகளில் போட்டி..
இந்த தடவை மன்றத்தில எல்லோரும் நல்ல ஃப்ரண்ட்ஸ். கொஞ்சம் திட்டம் போட்டுத்தான் செய்தோம்.. எப்படி எழுதுவதுன்னு சின்ன ப்ராக்டீஸ் கூட உண்டு.. பாட்டுப் போட்டிக்கு சிகாமணி, கவிதைக்கு ஐந்து பேர், அப்படி ஏரியா வாரியா பிரிச்சுகிட்டு வேலை செய்தோம்..
கவிதை(வானமே கூரை) முதலிரண்டு பரிசுகள் தாமரை மற்றும் தளபதி, கட்டுரை வளர்மதி முதலாவது தாமரை மூன்றாவது, கதை தளபதி முதலிடம் தாமரை இரண்டாமிடம், பாட்டு சிகாமணி முதலிடம் (பூஞ்சோலைக் காற்றே) என எக்கச்சக்க பட்டயங்களும் சுழற்கேடயமும் வாங்கினோம்..
இதுதான் எங்கள் கல்லூரியில் நாங்கள் வாங்கிய முதல் சுழற்கேடயம். தமிழ்மன்றம் தலைநிமிர்ந்தது. கலை நிகழ்ச்சிகளில் இனி யாரும் தமிழை ஓரங்கட்ட முடியாது என்ற நிலை உண்டாச்சு..
அடுத்து வந்தது லி-ஃபோனிக்ஸ். அதாங்க அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கலைவிழா. ஃபெஸ்டெம்பரிலும், பி.எஸ்.ஜி யிலும் போய் சில பரிசுகளை மட்டுமே வாங்கிவந்த நுண்கலை மன்றம் (ஃபைன் ஆர்ட்ஸ் அஸோசியேசன்) இந்த முறை தமிழ் மன்றத்தையும் அழைத்தது.
இந்த மாதிரிக் கலை விழாக்களில் தமிழுக்குன்னு இருக்கிற போட்டிகள் குறைச்சல்தான். இருந்தாலும் ஒவ்வொரு புள்ளியும் முக்கியம்கறதை மக்கள் புரிஞ்சுகிட்டாங்க. அதே சமயம் எங்களால மற்ற கலைகளுக்கும் பங்களிக்க முடியும் என்று நிரூபிக்கிற விதத்திலும் அது அமைந்தது..
லி-ஃபோனிக்ஸ்ல நான் கலந்துகிட்ட போட்டிகள், கிரியேட்டிவ் ரைட்டிங் அப்புறம் பாட்டுக்கு பாட்டு..
கிரியேட்டிவ் ரைட்டிங்கில் வசனம் மட்டுமே இருந்த கதை எழுதினேன்.. முதல் பரிசு.. பாட்டுக்குப் பாட்டில் மூன்றாம் பரிசு.. ஆக 14 புள்ளிகள்.
அதே சமயம்
ஃபேஷன் ஷோ ல மூணு போட்டியை கலந்திருந்தாங்க. 1. உடையலங்காரம் 2. ஆணழகன், 3. அழகிப் போட்டி.. எங்க கல்லூரி மக்களுக்கு ஃபேஷன் கறது கொஞ்சம் கஷ்டம் தான். கடைசி ஒரு மணி நேரம் வரை என்ன செய்யறதுன்னு தெரியாம இருந்தாங்க. இன்னும் பெயர் கொடுக்கவும் இல்லை.. வெற்றிக்குப் பக்கத்தில இருக்கோம். கீழக்கரை கல்லூரிக்கும் எங்களுக்கும் தான் கெட்ட போட்டி. போட்டியில் கலந்துக்கற்றவங்க லிஸ்டைப் பார்க்க
பெண்களோட பெயரே இல்லை. நம்ம குறுக்கு புத்தி சும்மா இருக்குமா?, மூணு பொண்ணுங்களுக்கு சேலை தயார் செய்தோம்.. கடைசி நிமிஷத்தில பேர் கொடுத்தோம்..
24 புள்ளிகள் இந்த ஒரு போட்டியில் மட்டும்.. இதெல்லாம் மிஸ் லி-ஃபோனிக்ஸாம் (அகிலா, நளினி, லதா).. இருக்கட்டுமே!..
வெரைட்டியில் ஊமை நாடகம்.. ஒற்றுமையை வலியுறுத்தி, திரும்பிய கைகளால் அடுத்தவருக்கு உணவூட்டும் அற்புத கான்ஸப்ட்.
அதே மாதிரி ஓவியப்போட்டிகலிலும் உதவினோம்.. கான்சப்டுக்கு ஒரு தலைப்பு கொடுக்கிறது.. ஒரு வரி பஞ்ச். கொஞ்சம் வித்தியாசம் தான்.. புள்ளிகள் குவிந்து கைக்கு சுழல் கோப்பை..
போட்டிப் பொறாமைகள் ஒழிந்து கல்லூரி மாணவர்கள் ஒன்றுபட்டதால் உண்டான வெற்றி இது. ஒரு வெற்றியின் குதூகலம் பல வேற்றுமைகளை கசப்புணர்ச்சிகளைக் களைந்து விடுகிறது. எங்க வெற்றி ஊர்வலங்கள் தொடர்கதையாக ஆரம்பித்தன..

நானும் தமிழும் - பாகம் 13
ஃபிளாஷ் பேக்!
6 ஆம் வகுப்பிலிருந்து நான் படிக்கும் புத்தகங்களின் எடை கூடிக் கொண்டே வந்தது.. தடித் தடிப் புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தேன்.. கல்கி தீபாவளி மலர், வாரப்பத்திரிக்கைகளில் வரும் தொடர்கள் என ஆரம்பித்து பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், விக்கிரமாதித்தன் கதைகள், மதன் காமராஜன் கதைகள், நடுவழியில் ஒரு ரயில், உதிரிப் பூக்கள், பிரியா, யவனராணி, சேரமான் காதலி, கடல்புறா, மஞ்சள் ஆறு, நாற்பதினாயிரம் ரூபாய், எஸ்.எஸ்.66, சிவ புராணம், விஷ்ணுபுராணம், கந்த புராணம், பாகவதம், தேவி பாகவதம், இராமாயணத்தில் பல நூல்கள், மகாபாரதத்தில் பல் நூல்கள், இராஜ திலகம், என வகை தொகை இல்லாமல் படித்துக் கொண்டிருந்தேன்..
இந்தக்கால கட்டங்களில் இரண்டு சுவையான சம்பவங்கள் உண்டூ..
பத்தாவது பொதுத்தேர்வு காலம்.. நாளை வரலாறு புவியியல் பரிட்சை. அப்பதான் ராஜதிலகம் (சாண்டில்யன்) படிச்சு முடிச்சிருந்தேன்.. பக்கத்து வீட்டுப் பையன் ராஜபொம்மண்ணன். அவனது புத்தகம் தான் அது..
புத்தகத்தை, கொடுக்கும்போது பெருமையாய் வரலாற்றுப் பாடத்தில் என்னை யாரையும் மிஞ்ச முடியாது தெரியுமா? என்ன கேள்வி வேணும்னா கேளு என்று மார்தட்டினான்..
என்னுள் இருந்து சாத்தான் தலை தூக்கிச்சு.. சரி பல்லவ வமிசத்தில் அராசாண்டவர்கள் எத்தனைபேர்? ன்னு கேட்டேன்..
கெக்கே பிக்கே என முழிச்சான். நான் விடையைச் சொல்லி சிம்ம விஷ்ணு பல்லவர்ல ஆரம்பிச்சு, எல்லோர் பேரையும் சொன்னேன்.. அப்புறம் பிற்காலச் சோழர்கள்,, பாண்டிய வமிசங்கள், நலங்கிள்ளி நெடுங்கிள்ளி அப்படின்னு பேசிப் பேசி அவன் ஈக்கோவையே கிள்ளிட்டேன்..
ஆமாம் அதேதான்.. அவன் வரலாறு புவியியல் பாடத்தில் பெயில்.
இரண்டாவது, நடுவழியில் ஒரு இரயில்.. இந்தப் புத்தகத்தை லைப்ரரியில் இருந்து எடுத்தது தாமோதிரன். நான் படிக்க வாங்கி இருந்தேன்.. படித்து முடித்து இரண்டு நாள் கழித்து புத்தகத்தைக் காண்வில்லை..
தாமோதிரனோ புத்தகம் இல்லாட்டி ஃபைன் காசு குடு என நெருக்க ஆரம்பித்தான்.
காசு இருந்தாத்தான் பிரச்சனை இல்லியே! என்ன பண்ணறதுன்னு புரியாம இருந்தேன்.. அப்பா கிட்ட கேட்கவும் பயம்..
ஒரு நாள் அவன் வீட்டுக்கு நான் போனப்ப அவங்க அம்மா ஒரு புத்தகம் படிச்சிகிட்டு இருந்தாங்க. பாத்தா நடுவழியில் ஒரு ரயில்..
அம்மா படிச்சுட்டு குடுக்கறேன் என்று சொல்லி இரவல் வாங்கி வந்தேன்.. அடுத்த முறை என்னை புத்தகம் குடு இல்லைன்னா காசு குடுன்னு கேட்டப்ப, புத்தகம் கெடைச்சிருச்சி இந்தான்னு எடுத்துக் கொடுத்தேன், அவன் திரு திருன்னு முழிச்சான்.. பெரிய சண்டையாகி ஃபிரண்ட் ஷிப் கட்டானது..
இதுக்கு மத்தியில் அண்ணாதுரை வீதியில் உள்ள பெரியவங்களுக்கு புராணங்கள் படிச்சிக் காட்டற வாய்ப்பு கிடைத்தது, அங்கா இருந்த கிருஷ்ணராஜ் ங்கற தாத்தா வீட்டில நிறையப் புத்தகங்கள் இருந்தத்து.. தினம் இரண்டு மணி-நேரம் நான் நாற்காலியில் உட்கார்ந்து சத்தமாய் படித்து சொல்லுவேன்.. பல பெரியவர்கள் சுற்றிலும் கயித்த்துக் கட்டிலில் உட்கார்ந்து கிட்டு அப்பப்ப விளக்கம் சொல்லுவாங்க.. அடிமனசில் ஆழப் பதிந்த கதை இப்ப புரிஞ்சிருக்குமே!
சரி மறுபடி கல்லூரிக்குப் போவோம்..
அடுத்த வெற்றி ஊர்வலத்துக்கு..

நானும் தமிழும் - பாகம் 12
முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கப் போட்டிகள் மூணு செண்டர்ல நடந்தது. அதில் கவிதை போட்டி ஆரம்பிச்சப்பவே கேட்டேன்.. அய்யா கவிதை எழுதணுமா இல்லைப் பாட்டூ எழுதணுமா என்று. எது வேணும்னாலும் எழுதுங்கா அப்படீன்னு சொல்லிட்டாங்க.. மூணு தலைப்புகள். என் இந்தியா, பழைய சோறும் பாதாம் கீரும் அப்புறம் இன்னொரூ மனசில் நிக்காத தலைப்பு.. நான் பழைய சோறும் பாதாம் கீரும் தலைப்பை எடுத்துகிட்டேன். ஏன்னா யாரும் அந்தத் தலைப்பை எடுக்கலை. நம்ம பாழாப் போன உலகமே பாட்டை எழுதினேன்.
அப்புறம் ஓவியப் போட்டி.. (ஓவியன், இதைக் கவனிங்க).. எது வேணும்னாலும் கருத்தா இருக்கலாம் ஓவியம் வரையுங்க என்று சொல்லிட்டாங்க.. நானும் ஒரு கோரமான விரிசல்கள் விழுந்த மண்டையோட்டுத் தலையை வரைந்து அதன் கீழ் இரத்தம் வழியும் வாயினை மூக்கு கையாய் மாறி பொத்தி இருக்க அதற்கு (சு)தந்திரம் என்று பெயரிட்டேன். இது வெறும் கோட்டோவியம்தான்.
அடுத்து கட்டுரை போட்டி, அதையடுத்து புத்தக அறிவுப்போட்டி..
எல்லாம் முடிந்ததும், முதலில் கவிதைப் போட்டி ரிசலட் சொன்னார்கள். பழனியப்பன் முதல் பரிசு, இரண்டாம் பரிசு வேறு கல்லூரிக்கு, தாமரைச் செல்வன் மூன்றாம் பரிசு..
மற்ற முடிவுகள் வரத்தாமதாமாகும் என்பாதால், பரிசு பெற்ற கவிதைகளை வாசிக்கச் சொன்னார்கள். பழனியப்பனும், அடுத்த மாணவனும் வாசிக்க, மூன்றாவதாய் நான் எழுந்து உணர்ச்சிகரமாய் பாடலை மெட்டுடன் பாடிக் காட்டினேன்.
மெட்டுடன் கூடிய போதுதான் வார்த்தைகளின் அர்த்தம் முகத்திலறைந்தார்போல இருந்ததை கவனித்த நடுவர்கள்.. வருத்தம் தெரிவித்தனர்.. இன்னொரு பட்டுக்கோட்டையார் எங்கள் எதிரில் நின்றிருப்பது தெரியாமல் எளிமையினை கண்டு இகழந்துவிட்டோம்.. இப்பொழுது தலைகுனிகிறோம் என்று "நாட்டாமை தீர்ப்பை மாற்ற நினைக்க, சொன்ன தீர்ப்பு சொன்னதாக இருக்கட்டும், இப்பொழுது உங்கள் கண்களுக்குப் புரியாத அர்த்தங்கள் (காதுகளுக்கு புரிந்த அர்த்தங்கள்) இன்னொரு நடுவருக்கு எப்படிப் புரியும், இதனால் உம்மேல் அவர்களும் சந்தேகம் கொள்ள வாய்ப்பளிக்காதீர்கள் என் மறுத்தேன். கட்டுரை, புத்தக அறிவு மற்றும் ஓவியம் மூன்றிலும் முதல் பரிசு. இவை மாவட்ட அளவு பரீசீலனைக்கு அனுப்பப் பட்டதில் கட்டுரை, புத்தக அறிவில் மாவட்ட முதலிடமும் ஓவியத்தில் இரண்டாம் பரிசும் பெற்றது. முதல்பரிசு வெண்புறாவாய் பாதி மாறிய இராணுவத் தொப்பி, தலைப்பு அமைதிப் படை.
புத்தக அறிவா வெறும் மாத வார பத்திரிக்கைகள் துண்டு பேப்பர்கள் படித்தவனுக்கா என்று யோசிக்காதீர்கள். நான் தீவிரப் படிப்பாளியாய் இருந்த காலம் 6வது முதல் +2 படித்த வரை.. கொஞ்சம் ஃபிளாஷ் பேக் போய் வரலாம் வாருங்கள்.

நானும் தமிழும் - பாகம் 11
இரண்டாம் புத்தகம் வெளிவந்ததும் நன்கு விற்பனயாச்சு. அதே சமயம் சக்திவேல் திருச்சி வானொலியில் இளையபாரதம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தான் என்.எஸ்.எஸ் மூலமாக. (இளைய பாரதம் இரவு 8:00 மணியிலிருந்து 8:30 மணி வரை).
இந்த முறை என்கவிதையை மட்டுமல்ல, புத்தகத்தில் வெளியாகி இருந்த ஒரு பெண்கவிஞரின் கவிதையயும் உபயோகப் படுத்தினான். கவிஞரின் பேரையும் சொல்லாமலே.. அது ஒளிபரப்பான அடுத்த நாள்தான் மத்தவங்களுக்குத் தெரியும்..
நமக்குத் தான் தங்கைகள் அப்படின்னா வே ஒரு சாஃப்ட் கார்னராச்சே! கல்லூரி வராண்டாவில் வைத்து கண்டபடித் திட்டி அவமானப் படுத்தினேன்.. புத்தகத்தில் வந்த கவிதை என்பதால் கையும் களவுமாய் மாட்டிகிட்டான்.. பழைய வண்டவாளங்களும் வெளியே வர வெட்டி பந்தா ஆப்பு வச்சது அவனது இமேஜூக்கு..
அந்த வருடம் அதுக்கு மேல அவ்வளவு சுதியில்லை.. பாழடைந்த மண்டபம் எங்க கவனத்தை திசை திருப்பி இருந்தது..
மூணாம் வருஷம்.. இதுதான் வெற்றி மேல வெற்றி வந்து குவிந்த வருஷம்..
வருஷம் தொடங்கின உடனே முடிவு பண்ணினோம்.. நம்முடைய தம்பி தங்கைகளை வளர்த்து மன்றத்தை அவங்க கையில ஒப்படைக்கண்ணும்னு..
வருட ஆரம்பத்தில போட்டிகள்ள் நடத்தினோம், கதை, கவிதை, கட்டுரை, பேச்சு இப்படி பலபோட்டிகள். அதில் கிடைத்த வாரிசுகள்
முருகானந்தம், பாலசுப்ரமணியம், லஷ்மி, சுமதி சாமுண்டீஸ்வரி இப்படிச் சிலர்.. இதில் முருகானந்ததைப் பத்திச் சொல்லணும்.
இந்த வருஷம் இவன் கல்லுரியில் சேர்ந்தவன்,, ஆனால் ஒருத்தர் திடீர்னு என்கிட்ட எதாவது ஒரு கேள்வி கேட்டா நான் என்ன பதில் சொல்வேனோ, ஏறத்தாழ அதே பதில்தான் அவன்கிட்ட இருந்து வரும். அவனுடைய அறை நண்பர்கள் என்கூட நல்லா பழகிட்டாங்க.. கோபி வேற ஸ்ட்ரைக் பிரச்சனையில் (யாரையும் கை நீட்டி அடிக்காதே) ஹாஸ்டலை விட்டுப் போயிட்டதால இவங்க ரூம்லதான் மூன்றாம் வருஷம் கழிஞ்சது.
இந்த முறை பத்திரிக்கைக்காக இளசை சுந்தரம் அவர்களை பேட்டி எடுத்தோம். வானொலி அண்ணா என அன்போடு அழைக்கப்படும் அவர் குழந்தைகள் நிகழ்ச்சிகளின் இயக்குனர். அவர் இளைய பாரதம் இயக்குனர் சக்ரவர்த்தியை அறிமுகம் செய்ய இளைய பாரதம் ஸ்லாட் கிடைச்சது..
நான், பழனியப்பன் இரண்டு பேரும் ஆலொசனை செஞ்சோம்.. முத்தமிழ் மன்றம் என்பதால மூணு தமிழும் இருக்கணும். 1 நாடகம், இரண்டு பாட்டு, மூணு கவிதை என முடிவானது..
பாட்டுக்கு சிகாமணி குழுவினரைத் தயார் பண்ணினோம். பாடலகளை நாங்களே எழுதினோம். நான் ஒரு பாட்டும் (சேரன் வில்லொன்று கண்டேன்) தளபதி ஒரு பாட்டும் (நீதானா அழைத்தது) எழுத சிகாமணி இசையமைத்தான்..
நாடகத்துக்கு நம்ம பாசக்கார மதுரைக் கோஷ்டியைத் தயார் செய்தேன், அதில் என்.எஸ்.கே என்று அறியப்பட்ட ராஜேந்திரன் ஒரு முதல் வருஷப் பொண்ணு பின்னால சுத்திகிட்டு இருந்தார். அவரையும் அந்தப் பொண்ணையும் மையமா வச்சு நாடகம் எழுதியாச்சு (கதாநாயகியா நடிச்சது நளினி என்ற தங்கை) மூணு கவிதை.. ஒண்ணு நான், ஒண்ணு சர்வாதிகாரி (முதல் வருட மாணவர்) ஒண்ணு பழனியப்பன்..
ஸ்கிரிப்டை சக்ரவர்த்தி அவர்களிடம் காட்டி ஓ.கே வாங்கினோம்.. மட மடவென ரிகர்ஷல் நடந்தது..
அது ஒரு வெள்ளிக்கிழமை மதியம். இரண்டு மணிக்கு ரெகார்டிங் ஆரம்பம்.. முதல்ல ஒரு கவிதை - பழனியப்பன் ஆரம்பித்தார். அரைமணி நேரத்தில் அது முடிய அடுத்து நீதானா அழைத்தது பாட்டு, அதுவும் முப்பது நிமிடம் எடுத்துகிச்சு. அப்புறம் நாடகம். இரண்டு மண்ணி நேரமாச்சு நாடகம் முடிய.. அப்புறம் சர்வாடிகாரியின் கவிதையும், சேரன் வில்லொன்று கண்டேன் பாட்டும் பதிவாகி முடிய மணி 7:00.. ரெகார்டிங் இதோட முடிச்சிக்கலாமா அப்படின்னு சக்ரவர்த்தி அவர்கள் கேட்க இல்லை இன்னும் ஒரே ஒரு கவிதை தானே முடிச்சிரலாம் என்றேன்..
சரி ஒரு அரைமணி நேரம்தானே என அவரும் ஒத்துழைத்தார்.
ஒரு கல்யாணத் தூது - இதுதான் அந்தக் கவிதை.. மைக் முன்னால் நின்று கண் மூடி சரளமாய்ச் சொல்ல ஆரம்பித்தேன்.. மூன்றரை நிமிடங்கள், தங்கு தடையின்ற்றி வெள்ளமாய் வார்த்தைகள் வழிந்தோட ஏதோ என் சொந்தக் கதையை நண்ண்பனுக்குச் சொல்லுவதாய் இயல்பாய் ..
முடித்த பொது பலமான கைதட்டுகள்.. சிங்கிள் ஷாட்.. ஷாட் ஓ.கே.. சக்ரவர்த்தி ஓடோடி வந்து என் கைகளைப் பிடித்துக் குலுக்கி கட்டிக்கொண்டார்.. இது காகிதத்தில எழுதினதா இல்லை மனசில எழுதினதா? உங்க அப்பா புரிஞ்சுக்குவாரில்லையா எனக் கேட்க, அவருக்கு இதெல்லாம் கற்பனை என்று விளங்க வைக்கவே எனக்கு வெகுநேரம் பிடித்தது.. ரெகார்டிங் சந்தோஷமாய் முடிய இரண்டு நாட்கள் கழித்து எடிட் செய்யப்பட்ட அந்த ஒலிப்பதிவை அவர் போட்டுக் காட்ட மிகச் சிறப்பாய் வந்திருந்தது அது..
ஆக எங்களது படைப்புகள் காற்றில் கலந்து தமிழகமெங்கும் ஒலித்தன. கல்லூரியில் திடீர் ஹீரோக்கள் ஆனோம்.. சிகாமணிக்கும் அவன் குழுவிற்கும் கல்லூரி ஆர்கெஸ்ட்ரா டீமில் இடம் கிடைக்க, நானும் அதில் பாடல் எழுத ஒட்டிக் கொண்டேன்.. நளினியும் நன்றாகப் பாடுவார். அவர் முதலிலேயே ஆர்கெஸ்ட்ரா குழுவில் இருந்தார்..
கல்லூரியில் அந்தப்பாட்டைக் கேட்ட அத்தனைத் தங்கைகளும், தம்பிகளும் கவிதை நாயகி ஒருத்தி இருப்பதாகவே முடிவு கட்டினதுதான் உச்சகட்டம். அந்த வதந்தி அடங்கி விட்டது காலம் போகப் போக..
அடுத்த படையெடுப்பு புதுக்கோட்டை முற்ற்போக்கு எழுத்தாளர்கள் நடத்திய மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, ஒவியம், புத்தக அறிவு, கதை போட்டிகள் தான்..
நடுவர்கள் ஒரு கவிதையை, பாடலை அதன் வரிகளின் அழுத்தம் புரியாமல் மதிப்பிடுவது எவ்வளவு கடினம் எனப் புரிய வைத்தது அது..
அதே சமயம் ஒரு கிசு கிசு.. யாருமே எதிர்பார்க்காட அந்தப் போட்டியில் எனக்கு மாவட்ட அளவிலான இரண்டாம் பரிசு கிடைத்தது..
இது உங்களுக்கும் ஷாக்காக இருக்கும்.!!!

நானும் தமிழும் - பாகம் 10
சங்கநாதம்
தாமரை நீ வரவேற்புரை வாசிக்கிறியா, அவர் குரல்ல சுரத்து இல்லை..
சார் நான் கவிதை
அதைச் சேர்மன் வாசிச்சுக் கொடுக்கிறாராம்.. சொன்னார்..
எனக்குக் கோபமாய் இருந்தது.. சரி சார் அதை அவர் படிக்கட்டும்.. நான் வேற கவிதை சொல்றேன்.. அஜெண்டாவில எனக்குப் பத்து நிமிஷம் கவிதைக்குக் குடுங்க அதுபோதும்..
டைரக்டர் யோசிச்சார், சரி நான் பாத்துக்கறேன்.. நல்ல கவிதையா ரெடிபண்ணு..
என் ஆவேசம் மண்டையில் ஏறி மனசு கனத்தது.. காலேஜ் மொட்டை மாடிக்குப் போனேன். எழுதினேன்.. கல்லூரியைப் பற்றி, கல்லூரி மாணவர்களைப் பற்றி, எங்கள் எதிர்காலக் கனவுகள் பற்றி, கூடவே இதுபோன்ற சில களவாணிகள் பற்றி.. வஞ்சப்புகழ்ச்சிதான் நம் கைவந்த கலையாயிற்றே! எழுதினேன்.
மாலை விழா ஆரம்பிக்க வரவேற்புரை முடிந்தவுடன் சேர்மன் எழுத்துகூட்டிப் படித்து என் கவிதையை ஆபரேஷன் செய்து நெடுஞ்செழியன் அவர்களுக்குப் பரிசளிக்க, மாணவர் கூட்டத்தில் பெரும் கைதட்டல்களைப் பெற்றிருக்க வேண்டிய அந்தக் கவிக்குழந்தை செத்துப் போயிருந்தது..
இரண்டு ஆட்கள் தள்ளி மேடையேறி மைக்கைப் பிடித்தேன்.. ஆரம்பித்தேன்.. வரிகள் வளர வளர மாணவர்கள் புரிந்து கொண்டார்கள்.. கைதட்டல்கள் வரிக்கு வரி முரசடிக்க சங்க நாதம் செய்தேன்.. மாணவர் துணைகொண்டு மடமையைக் கொளுத்துவேன் என முடித்த அந்தக் கவிதைக்குப் பிறகு மேடையில் இருந்த சிலரின் முகம் இருண்டது.. குத்தத்தானே செய்யும்..
நெடுஞ்செழியனும் புரிந்து கொண்டார் போலிருக்கிறது. தமிழுக்கு இக்கல்லூரியில் கிடைத்திருக்கும் சொத்துகள் கண்டு பூரிப்படைவதாய் சொன்னார். ஆங்கிலவழிக் கல்வி தமிழை அழிக்க முடியாது என்பதற்கு எங்கள் கல்லூரி ஒரு உதாரணம் என்றார்..
இந்த சங்கநாததிற்குப் பிறகு எனது அணுகுமுறை மாறியது.. என்னை சாதாரணமாய் நினைத்தவர்கள் என்னை மதிக்கத் தொடங்கினர்.. இன்னுமொரு புது நட்புக் குழுவும் கிடைத்தது. அ தில் சிகாமணி, தளபதி, அன்புச் செழியன், பாஸ்கர் போன்ற ஒதுக்கப்பட்ட இசை ஆர்வலர்கள்.
எங்கள் கல்லூரி ஆர்க்கெஸ்ட்ரா முழுவதும் பிராமண ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.. இதுபோன்ற சில பேர்களுக்கு இடமிருந்தும் சேர்ந்திசைக்க இசைய மறுத்தனர் முதல் கோஷ்டி.. என்னுடைய முழக்கம் இவர்களை என்னுடன் இணைத்தது..
நான்காம் செமஸ்டரில் இரண்டாவது புத்தக வேலை ஆரம்பித்தது.. இம்முறை 250 பிரதிகள் போட்டோம். தளபதி கதை எழுதித்தர இன்னொரு இயற்பியல் ஆசிரியர் (நாவலாசிரியர் விஜயநிலா, நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும், ராஜேஸ்குமார் போல பாக்கெட் நாவல் போன்ற மர்மக்கதைகளை எழுதுபவர்) தமது படைப்புகளைத் தந்தார். சில மாணவியரும் இம்முறை பங்கு கொண்டார்கள்.. இம்முறை அச்சுப்பிரதி..
இந்தப் புத்தகம் அடுத்த தகராறுக்கு வழிவகுத்தது..

நானும் தமிழும் - பாகம் 9
நடமாடும் பல்கலைக் கழகம்
நான் மக்களோட ஃபுட்பால் ஆடிகிட்டு இருந்தப்ப ஒரு பியூன் வந்து (பிரின்சிபல் கிடையாது எங்க காலேஜூக்கு, அப்ப டைரக்டர் தான்).. டைரக்டர் கூப்பிடறாருன்னு சொன்னார்.. சரின்னு போனா பெரிய பெரிய தலையெல்லாம் சேர் போட்டு உட்கார்ந்து பேசிகிட்டு இருந்தாங்க.. காலேஜ் டிரஸ்ட் சேர்மன், இவனாங்கற மாதிரி ஒரு சுளிப்புப் பார்வை பார்க்க, ஆள் உருவத்தைப் பார்த்து ஏமாந்திராதீங்க.. பையன் பலே கில்லாடின்னு சொல்லிட்டு டைரக்டர் எங்கிட்ட, தாமரை, நாளை நெடுஞ்செழியனுக்கு ஒரு வாழ்த்துக் கவிதை மாதிரி பெருசா எழுதி ஃபிரேம் போட்டுக் கொடுக்கனும்.. ஒரு கவிதை வேணும் எப்ப கிடைக்கும்னு கேட்க.. அரைமணி நேரத்தில் கொண்டு வர்ரேன் சார்னேன்..
நல்லா டைம் எடுத்துக்கோ, நாளை நீ மேடையில அதை வாசிச்சுக் குடுக்கணும் அப்படின்னார். ஹாஸ்டலுக்கு ஓடி என் நோட்டை எடுத்துகிட்டு மொட்டை மாடிக்கு ஓடினேன்...
முத்தமிழ் தந்த எம்தமிழ் நாட்டு
பத்தரை மாற்றுத் தங்கமே
சித்திரை நிலவே செந்தமிழ் நாட்டில்
முத்திரை பதித்த நித்திலமே
வரிகள் குதித்து விழுந்தன.. தமிழில் சிறப்பு ""ழ" ன்னு சொல்லுவாங்க.. நான் ""த"" ன்னு சொல்லுவேன்,
முத்தைத்தரும் பக்தித் திருநகை
அத்திக்கிரை சக்திச் சரவண
வித்துக்கொரு முத்துக் குருபர
எனவோதும்..
அருணகிரியார் நாவில் குதித்து விளையாடிய அந்த "த" தான் எதுகையில் சிறந்தது.. இரண்டு பாக்கள் எழுதிக் கொண்டுபோய் கொடுத்தேன் அரைமணி நேரத்தில்..
சத்தத்தில், இரத்தத்தில், யுத்தத்தில், மொத்தத்தில், தத்திக் குதித்து விளையாடும் தகரம் இல்லையா..
கவிதையை வாங்கிப் படித்த சேர்மன், நாவலருக்கு நடமாடும் பல்கலைகழகம் என்று ஒரு பட்டம் உண்டு.. அதை எப்படியாவது இதில் சேர்க்கண்ணுமே என்று சொல்ல, "ட" கர எதுகையில் மத்தியில் ஒரு பா எழுதி, அண்ணா, நடமாடும் பல்கலைக்கழகம் எல்லாம் ஒட்ட வைத்துக் கொடுத்தேன்..
எனக்கு இருப்புக் கொள்ளலை.. என்ன ஓசை..எனது கணீர் குரலுக்கு மேடையில் இந்த தகர டகர எதுகை எவ்வளவுக் கைதட்டல் கிடைக்கும்னு நினைச்சுப் பார்க்கும் பொழுது தூக்கம் வரலை.. பயங்கரச் சந்தோஷமா இருந்தது...
அடுத்த நாள் காலை 10 மணிக்கு டைரக்டர் கூப்பிட்டார். அவர் முகத்தில சங்கடம் குடியேறி இருந்தது,,

Subscribe to:
Posts (Atom)