Saturday, December 12, 2009

நானும் தமிழும் - பாகம் 6

காதலும் கவிதையும்!

காதல்னா மனசில மட்டுமில்ல மன்றத்தில கூட ஒரு புத்துணர்ச்சி வந்திருது பாருங்க.. அதுதான் காதலோட பெருமை.. எங்க பாய்ஸ் ஹாஸ்டலுக்கு இரண்டு வார்டன்கள்.. ஒருத்தர் இங்கிலீஸ் லெக்சரரை காதலிக்க இன்னொரு வார்டன் லேடீஸ் ஹாஸ்டல் வார்டனைக் காதலிக்க...

சனிக்கிழமை ஃபிரீ நைட்.. அன்னிக்கு எங்க மட்டும் போகலாம்.. எப்ப மட்டும் வரலாம்.. பசங்க எல்லாம் செகண்ட் ஷோ பார்த்துட்டு வந்தா பயங்கர மழை.. அந்த மழையில தேர்ட் ஷோ..

ஹி ஹி ஆமாங்க அவங்க ரெண்டு பேரும் ஒரே குடையில நனைஞ்சுகிட்டு போறதை மக்கள் பார்த்துட்டாங்க.. குடைக்குள் மழை.. காதல் மழை..

மறுநாள்ல இருந்து வார்டன்கள் (பிஸிக்ஸ் -னு வச்சுக்கவோம், கேர்ள்ஸ் ஹாஸ்டல் வார்டன் - மேத்ஸ், இன்னொரு வார்டன் - டிராயிங், இங்க்லீஸ்) எங்க கையில.. பீச்சில் முறுக்கு, சுண்டல் விற்கும் பையனை எப்படி காதலர்கள் பகைச்சிக்க முடியாதோ () அப்படி எங்களை ஒண்ணும் சொல்ல முடியாம போச்சு..

புது நண்பர்கள் சகவாசத்தால் நான் இரண்டாம் மாடிக்கு அறை மாறினேன்.. (நான் என் அறையிலேயே வாழ்ந்தது கடைசி வருடம் மட்டும் தான்).

உமாசங்கர் (ஆப்பு) கவிதைகளோட தீவிர ரசிகன். சக்திவேல்(பந்தா) பார்க்க அசப்பில சினிமா நடிகர் பழைய கார்த்திக் மாதிரியே இருப்பான். பயங்கரமான ஆதிக்க மனப்பான்மை இருக்கிறவன்.. அவன் என்.எஸ்.எஸ் (நேஷனல் சோஷியல் சர்வீஸஸ்) சேர்மன் ஆனான். வாசு(தகதகா) அற்புதமாக பாடுவான். பி.கே. "கரண்ட்" குமரேசன் ஆக நாலு பேர் ரூம்மேட்ஸ். நான் போய் ஒட்டிகிட்டேன்..

என்னுடைய கவிதைகளுக்காக எல்லோரும் அவங்க நோட்டுகளையெல்லாம் எனக்குத் தருவாங்க.. நோட்டு ஃபுல்லாயிட்டா வாங்கிட்டுப் போயிடுவாங்க.. என்னுடைய நோட்டுகளும் என்னிடத்தில் நிற்பதில்லை..

ஒரு நாள் மேத்ஸ் கூப்பிட்டாங்க.. தாமரை உன் கவிதைகள் நோட்டை கிளாஸ்லயே விட்டுட்டுப் போயிட்டியேன்னு குடுத்தாங்க.. (அப்ப கூட அவங்களுக்கு நாம பாடம் நடத்தும் போது இவன் கவிதை எழுதறான்னு கோபம் வராதா என்ன?)

எனக்குத் தெரியும் அது இரண்டு மாசத்துக்கு முன்னால எழுதிய கவிதைகள்னு.. அது வாங்கியது பிஸிக்ஸ்.. நம்ம கவிதை இப்படி வேற பாலம் கட்டுதான்னு நினைச்சேன்..

இதே மாதிரி என் கவிதை பந்தா சக்திவேலால் பயன்படுத்தப் பட்டதும் லேட்டாதான் தெரிஞ்சது எனக்கு.. எப்படியோ நல்லா இருந்தாச் சரின்னு விட்டுட்டேன்.

ஹாஸ்டல்ல இரண்டு கோஷ்டி ரொம்ப பலமா இருந்தது. ஒண்ணு மெட்ராஸ் கோஷ்டி இன்னொன்னு மதுரை கோஷ்டி.. நான் எல்லோருக்கும் பொது.. எல்லோரடவும் பேசுவேன்..

முதல் வருஷம் முடிஞ்சது.. எல்லோரும் காசு கலெக்ட் பண்ணி, பாட்டில் பாட்டிலா வாங்கி பக்கெட்ல கலந்து காக்டெய்ல் அடிச்சாங்க.. அப்பல்லாம் நான் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவன்..

வீட்டுக்குக் கிளம்பும் பொழுது ஆப்பு அந்தத் தப்பைச் செஞ்சான்.. என்ன தெரியுமா? துக்கா, போனா கண்டிப்பா லட்டர் போடணும்னு சொல்லி அட்ரஸ் குடுத்துட்டுப் போனான்.

அப்புறம்...

தொடரும்
.

No comments:

Post a Comment