Saturday, December 12, 2009

நானும் தமிழும் - பாகம் 14

டுத்து நடந்த முக்கிய போட்டி, YMCA, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடத்திய தஞ்சை, திருச்சி, புதுகை மாவட்டக் கல்லூரிகளுக்கிடையேயான போட்டி.

இந்தப் போட்டியில் நான், பழனியப்பன், தளப்தி, லஷ்மி, வளர்மதி, சிகாமணி ஆகியோர் கலந்து கொண்டோம். கவிதை, கட்டுரை, கதை, பாட்டு என பல பிரிவுகளில் போட்டி..

இந்த தடவை மன்றத்தில எல்லோரும் நல்ல ஃப்ரண்ட்ஸ். கொஞ்சம் திட்டம் போட்டுத்தான் செய்தோம்.. எப்படி எழுதுவதுன்னு சின்ன ப்ராக்டீஸ் கூட உண்டு.. பாட்டுப் போட்டிக்கு சிகாமணி, கவிதைக்கு ஐந்து பேர், அப்படி ஏரியா வாரியா பிரிச்சுகிட்டு வேலை செய்தோம்..

கவிதை(வானமே கூரை) முதலிரண்டு பரிசுகள் தாமரை மற்றும் தளபதி, கட்டுரை வளர்மதி முதலாவது தாமரை மூன்றாவது, கதை தளபதி முதலிடம் தாமரை இரண்டாமிடம், பாட்டு சிகாமணி முதலிடம் (பூஞ்சோலைக் காற்றே) என எக்கச்சக்க பட்டயங்களும் சுழற்கேடயமும் வாங்கினோம்..

இதுதான் எங்கள் கல்லூரியில் நாங்கள் வாங்கிய முதல் சுழற்கேடயம். தமிழ்மன்றம் தலைநிமிர்ந்தது. கலை நிகழ்ச்சிகளில் இனி யாரும் தமிழை ஓரங்கட்ட முடியாது என்ற நிலை உண்டாச்சு..

அடுத்து வந்தது லி-ஃபோனிக்ஸ். அதாங்க அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கலைவிழா. ஃபெஸ்டெம்பரிலும், பி.எஸ்.ஜி யிலும் போய் சில பரிசுகளை மட்டுமே வாங்கிவந்த நுண்கலை மன்றம் (ஃபைன் ஆர்ட்ஸ் அஸோசியேசன்) இந்த முறை தமிழ் மன்றத்தையும் அழைத்தது.

இந்த மாதிரிக் கலை விழாக்களில் தமிழுக்குன்னு இருக்கிற போட்டிகள் குறைச்சல்தான். இருந்தாலும் ஒவ்வொரு புள்ளியும் முக்கியம்கறதை மக்கள் புரிஞ்சுகிட்டாங்க. அதே சமயம் எங்களால மற்ற கலைகளுக்கும் பங்களிக்க முடியும் என்று நிரூபிக்கிற விதத்திலும் அது அமைந்தது..

லி-ஃபோனிக்ஸ்ல நான் கலந்துகிட்ட போட்டிகள், கிரியேட்டிவ் ரைட்டிங் அப்புறம் பாட்டுக்கு பாட்டு..

கிரியேட்டிவ் ரைட்டிங்கில் வசனம் மட்டுமே இருந்த கதை எழுதினேன்.. முதல் பரிசு.. பாட்டுக்குப் பாட்டில் மூன்றாம் பரிசு.. ஆக 14 புள்ளிகள்.
அதே சமயம்

ஃபேஷன் ஷோ ல மூணு போட்டியை கலந்திருந்தாங்க. 1. உடையலங்காரம் 2. ஆணழகன், 3. அழகிப் போட்டி.. எங்க கல்லூரி மக்களுக்கு ஃபேஷன் கறது கொஞ்சம் கஷ்டம் தான். கடைசி ஒரு மணி நேரம் வரை என்ன செய்யறதுன்னு தெரியாம இருந்தாங்க. இன்னும் பெயர் கொடுக்கவும் இல்லை.. வெற்றிக்குப் பக்கத்தில இருக்கோம். கீழக்கரை கல்லூரிக்கும் எங்களுக்கும் தான் கெட்ட போட்டி. போட்டியில் கலந்துக்கற்றவங்க லிஸ்டைப் பார்க்க

பெண்களோட பெயரே இல்லை. நம்ம குறுக்கு புத்தி சும்மா இருக்குமா?, மூணு பொண்ணுங்களுக்கு சேலை தயார் செய்தோம்.. கடைசி நிமிஷத்தில பேர் கொடுத்தோம்..

24 புள்ளிகள் இந்த ஒரு போட்டியில் மட்டும்.. இதெல்லாம் மிஸ் லி-ஃபோனிக்ஸாம் (அகிலா, நளினி, லதா).. இருக்கட்டுமே!..

வெரைட்டியில் ஊமை நாடகம்.. ஒற்றுமையை வலியுறுத்தி, திரும்பிய கைகளால் அடுத்தவருக்கு உணவூட்டும் அற்புத கான்ஸப்ட்.

அதே மாதிரி ஓவியப்போட்டிகலிலும் உதவினோம்.. கான்சப்டுக்கு ஒரு தலைப்பு கொடுக்கிறது.. ஒரு வரி பஞ்ச். கொஞ்சம் வித்தியாசம் தான்.. புள்ளிகள் குவிந்து கைக்கு சுழல் கோப்பை..

போட்டிப் பொறாமைகள் ஒழிந்து கல்லூரி மாணவர்கள் ஒன்றுபட்டதால் உண்டான வெற்றி இது. ஒரு வெற்றியின் குதூகலம் பல வேற்றுமைகளை கசப்புணர்ச்சிகளைக் களைந்து விடுகிறது. எங்க வெற்றி ஊர்வலங்கள் தொடர்கதையாக ஆரம்பித்தன..

தொடரும்
.

No comments:

Post a Comment