Saturday, December 12, 2009

நானும் தமிழும் - பாகம் 13

ஃபிளாஷ் பேக்!

6 ஆம் வகுப்பிலிருந்து நான் படிக்கும் புத்தகங்களின் எடை கூடிக் கொண்டே வந்தது.. தடித் தடிப் புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தேன்.. கல்கி தீபாவளி மலர், வாரப்பத்திரிக்கைகளில் வரும் தொடர்கள் என ஆரம்பித்து பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், விக்கிரமாதித்தன் கதைகள், மதன் காமராஜன் கதைகள், நடுவழியில் ஒரு ரயில், உதிரிப் பூக்கள், பிரியா, யவனராணி, சேரமான் காதலி, கடல்புறா, மஞ்சள் ஆறு, நாற்பதினாயிரம் ரூபாய், எஸ்.எஸ்.66, சிவ புராணம், விஷ்ணுபுராணம், கந்த புராணம், பாகவதம், தேவி பாகவதம், இராமாயணத்தில் பல நூல்கள், மகாபாரதத்தில் பல் நூல்கள், இராஜ திலகம், என வகை தொகை இல்லாமல் படித்துக் கொண்டிருந்தேன்..

இந்தக்கால கட்டங்களில் இரண்டு சுவையான சம்பவங்கள் உண்டூ..

பத்தாவது பொதுத்தேர்வு காலம்.. நாளை வரலாறு புவியியல் பரிட்சை. அப்பதான் ராஜதிலகம் (சாண்டில்யன்) படிச்சு முடிச்சிருந்தேன்.. பக்கத்து வீட்டுப் பையன் ராஜபொம்மண்ணன். அவனது புத்தகம் தான் அது..

புத்தகத்தை, கொடுக்கும்போது பெருமையாய் வரலாற்றுப் பாடத்தில் என்னை யாரையும் மிஞ்ச முடியாது தெரியுமா? என்ன கேள்வி வேணும்னா கேளு என்று மார்தட்டினான்..

என்னுள் இருந்து சாத்தான் தலை தூக்கிச்சு.. சரி பல்லவ வமிசத்தில் அராசாண்டவர்கள் எத்தனைபேர்? ன்னு கேட்டேன்..

கெக்கே பிக்கே என முழிச்சான். நான் விடையைச் சொல்லி சிம்ம விஷ்ணு பல்லவர்ல ஆரம்பிச்சு, எல்லோர் பேரையும் சொன்னேன்.. அப்புறம் பிற்காலச் சோழர்கள்,, பாண்டிய வமிசங்கள், நலங்கிள்ளி நெடுங்கிள்ளி அப்படின்னு பேசிப் பேசி அவன் ஈக்கோவையே கிள்ளிட்டேன்..

ஆமாம் அதேதான்.. அவன் வரலாறு புவியியல் பாடத்தில் பெயில்.


இரண்டாவது, நடுவழியில் ஒரு இரயில்.. இந்தப் புத்தகத்தை லைப்ரரியில் இருந்து எடுத்தது தாமோதிரன். நான் படிக்க வாங்கி இருந்தேன்.. படித்து முடித்து இரண்டு நாள் கழித்து புத்தகத்தைக் காண்வில்லை..

தாமோதிரனோ புத்தகம் இல்லாட்டி ஃபைன் காசு குடு என நெருக்க ஆரம்பித்தான்.

காசு இருந்தாத்தான் பிரச்சனை இல்லியே! என்ன பண்ணறதுன்னு புரியாம இருந்தேன்.. அப்பா கிட்ட கேட்கவும் பயம்..

ஒரு நாள் அவன் வீட்டுக்கு நான் போனப்ப அவங்க அம்மா ஒரு புத்தகம் படிச்சிகிட்டு இருந்தாங்க. பாத்தா நடுவழியில் ஒரு ரயில்..

அம்மா படிச்சுட்டு குடுக்கறேன் என்று சொல்லி இரவல் வாங்கி வந்தேன்.. அடுத்த முறை என்னை புத்தகம் குடு இல்லைன்னா காசு குடுன்னு கேட்டப்ப, புத்தகம் கெடைச்சிருச்சி இந்தான்னு எடுத்துக் கொடுத்தேன், அவன் திரு திருன்னு முழிச்சான்.. பெரிய சண்டையாகி ஃபிரண்ட் ஷிப் கட்டானது..

இதுக்கு மத்தியில் அண்ணாதுரை வீதியில் உள்ள பெரியவங்களுக்கு புராணங்கள் படிச்சிக் காட்டற வாய்ப்பு கிடைத்தது, அங்கா இருந்த கிருஷ்ணராஜ் ங்கற தாத்தா வீட்டில நிறையப் புத்தகங்கள் இருந்தத்து.. தினம் இரண்டு மணி-நேரம் நான் நாற்காலியில் உட்கார்ந்து சத்தமாய் படித்து சொல்லுவேன்.. பல பெரியவர்கள் சுற்றிலும் கயித்த்துக் கட்டிலில் உட்கார்ந்து கிட்டு அப்பப்ப விளக்கம் சொல்லுவாங்க.. அடிமனசில் ஆழப் பதிந்த கதை இப்ப புரிஞ்சிருக்குமே!

சரி மறுபடி கல்லூரிக்குப் போவோம்..

அடுத்த வெற்றி ஊர்வலத்துக்கு..

தொடரும்.
.

No comments:

Post a Comment