Wednesday, August 4, 2010

தாமரை பதில்கள் - 149

கேள்வி எண் 149:


கேட்டவர் : கலைவேந்தன்


மெல்லத் தமிழினிச் சாகுமா...?

பிழைக்க வைக்க என்ன செய்யலாம்...?


இயற்கை மரணம் ஆரம்பிக்கும் பொழுது உடல் வளர்ச்சி நின்று போயிருக்கும். அதுதான் அடையாளம். 

அதே போலதான் மொழிக்கும். புதிய இலக்கியங்கள் வெளிவருவது நின்று போகும் பொழுது அம்மொழி இறக்க ஆரம்பிக்கிறது..அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமான அறிவுகள் அம்மொழியில் குறைய ஆரம்பிக்கிறது. அதனால் இன்னொரு மொழியைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைமை அம்மொழி பேசுவோர் அனைவருக்கும் உண்டாகிறது.

பாரதி மெல்லத் தமிழினிச் சாகும் என்று சொன்னதும் இதைக் கொண்டுதான், வாழ்க்கை முறை மாறிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கைக்கு அவசியமான முக்கிய கலைகள் அறிவியல்கள் தமிழ் மொழியில் குறைந்து கொண்டே போக ஆரம்பித்தது. அதனால் அன்னிய மொழி அத்தியாவசியம் என்ற நிலை ஆரம்பித்தது,.. இதைக் கண்டே மொழியின் சாவு தொடங்கி விட்டது என பாரதி சொன்னான்..

அதற்கு வழியும் சொன்னான். சென்றிடுவீர் எட்டு திக்கும்.. கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்றான்.

தமிழின் வளர்ச்சி இன்று எங்கே இருக்கிறது என்று உங்களுக்கே தெரியும். 

மெல்லத் தமிழினிச் சாகும் என்பதும் மெல்லத் தமிழினி வாழும் என்பதும் இப்போது நம்ம கையில்தான் இருக்கு.

நாம நிறைய எழுதினால், அதுவும் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதைப் பற்றித் தமிழினில் நாம் எழுதி நம் சந்ததிக்கு கொடுத்தால் தமிழ் வளரும்..

அதாவது இப்போ ஸ்வேதாவும் அனிருத்தும் தமிழ் கற்றுக் கொடுக்கச் சொல்லி என்னை வற்புறுத்த ஆரம்பித்தாயிற்று.. காரணம் நான் தமிழில் என்னவோ எழுதிக் கொண்டே இருக்கிறேன். நிறைய தமிழைப் பற்றிச் சொல்கிறேன்.

இல்லையென்றால் ...... 


No comments:

Post a Comment