கேள்வி எண் : 156
கேட்டவர்: ஆரென்
நாம் வியாபார நிறுவனங்களில் பிராண்ட் பில்டிங், பிராண்ட் வேல்யூ இவைகள் மிகவும் முக்கியம். அதுவும் கோக்கோ கோலாவின் பிராண்ட் வேல்யூ ஒரு பில்லியன் டாலர் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இப்படி இவர்கள் இருக்கும்பொழுது உலகத்தில் இருக்கும் அனைவரும் அறிந்திருக்கும்/தெரிந்திருக்கும் நகரத்தின் பெயர்களான பம்பாய், மதராஸ், பெங்களூர் மற்றும் கல்கத்தா ஆகியவற்றின் பெயர்களை ஏன் மும்பய், சென்னை, பெங்களூரூ, கொல்கத்தா என்று மாற்றி அதனுடைய பிராண்ட் வேல்யூவை குறைக்கிறார்கள்.
இதனால் மக்களுக்கோ அல்லது அரசியல்வாதிகளுக்கோ என்ன லாபம்?
இது பழைய பெயர் ஆங்கிலேயர்கள் வந்து மாற்றிவிட்டார்கள் என்று குறை சொல்பவர்கள் இந்த ஆங்கிலேயர்கள்தான் இந்த நகரங்களின் பெயர்களை உலகம் முழுவதும் எடுத்துச்சென்று அனைவரும் தெரிந்துகொள்ள உதவினார்கள் என்று ஏன் நினைப்பதில்லை.
ஆரென், நீங்கள் மிகச் சிறந்த வியாபார நுணுக்கங்கள் புரிந்த அறிவாளி. ஆனால் அப்பாவி.
நம்ம அரசியல்வாதிகள் மெட்ராஸையோ, பெங்களூரையோ விற்கவில்லை. வாங்க முயற்சிக்கிறார்கள்.
வாங்கும் போது பிராண்ட் வேல்யூவை அமுக்கித் தானே வாசிக்கணும்.
இன்னும் ஒரு விஷயம்...
ஹைடெக் சிட்டி, எலெக்ட்ரானிக்ஸ் சிட்டி, டெக் பார்க், டைடல் பார்க் இதெல்லாம் இவர்கள் உருவாக்கிய நகரங்கள்...
ஏன்னா ஏற்கனவே இதையெல்லாம் இவர்கள் வளைத்து போட்டாகி விட்டது.
உங்களுக்குத்தான் இது புரியலை... அவங்க தெளிவாய்த்தான் இருக்காங்க.
No comments:
Post a Comment