கேள்வி எண் 77:
=======================================================
கேள்வி எண் 78:
கேள்வி எண் 81:
.
கேட்டவர் : அன்புரசிகன்
முடிவிலி என்பது நம்மால் கூறமுடியாத இலக்கமா? அல்லது நம்மால் கூறமுடியாத மிகப்பாரிய இலக்கமா?
நம்மால் எளிதில் கூறமுடியாத மிகப்பாரிய இலக்கத்தை எளிதில் கூற உதவுவது முடிவிலி.
என்னிடம் அன்பே இல்லை. அதில் மிகப்பெரிய அளவு அன்பை உன்னிடம் வைத்துள்ளேன்
அதனால் நான் உன் மேல் வைத்துள்ள அன்பின் அளவு (?) முடிவிலி..
பொய் மாதிரி தெரியுதா இல்லைக் குழப்புதா?
கணக்கு மாணவியிடம் இப்படிச் சொல்லிப்பாருங்களேன்.
=======================================================
கேள்வி எண் 78:
கேட்டவர் : Narathar
ஒப்பிடுக, கருணாநிதியவர்களின் மத்திய அரசு மீதான பாசமும் ஈழ மக்கள் மீதான பாசமும்.
இரண்டும் சமம்தான் என்றுச் சொல்லலாம். ஆனால் ஈழத்தில் கலைஞர் அவர்களுக்கு அதிகாரப்பூர்வ தூதுவர் இல்லை. மற்றபடி அவரது அணுகுமுறையில் அதிக வித்தியாசம் இல்லை.
ஒரு சந்தேகம். ஈழ மக்கள் என்றால் தமிழர் மட்டும்தானா? மற்றவர்களுக்கு ஈழத்தில் இடமில்லையா என்ன?
தன்னுயிர்க் கின்னா தானறிவான் என்கொலோ
மண்ணுயிர்க் கின்னா செயல்.
=======================================================
கேள்வி எண் 79:
கேட்டவர் : சுகந்தப்பிரீதன்
உலகத்தில் உள்ள மதங்களில் பெண்களால் தோற்றுவிக்கப்பட்டு பரப்பப்பட்டதாக ஒன்றைக்கூட அறிய முடியவில்லை.அப்படியானால் இயற்கையாக பெண்கள் மதச்சார்பற்றவர்களா? இல்லை மதமாச்சரியம் என்பது பால்சார்ந்த ஒன்றா?
தேடல் என்பது ஆணினத் தொழிலாகவும், காத்தல் என்பது பெண்ணினத் தொழிலாகவும் போனதின் காரணமே புது மதங்கள் பெண்களின் பெயர்தாங்கவில்லை. முழுமுதற்கடவுளாகக் கருதப்படுபவர்கள் கூட 90% ஆணினம்தான்.
பெண்கள் மதப்பணிகள் பல செய்திருக்கிறார்கள். காரைக்கால் அம்மையார், அன்னைத் தெரசா, திலகவதி அம்மையார் (நாவுக்கரசரின் தமக்கை) இப்படிப் பலப் பெண்கள் மதப் பணிகள் செய்திருக்கின்ன்றனர். சில பெண்கள் மதச் சார்புள்ள நிறுவனங்களை தலைமை தாங்கியும் நடத்தி வருகின்றனர்.(அமிர்தானந்தமாயி.. போலச் சிலர்). சொல்லப் போனால் மதச் சார்பான கட்டுப்பாடுகள் பெண்களுக்குத் தான் மிக அதிகம்.
பெண்கள் புதிய மதங்களைத் தோற்றுவிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் தோற்றுவிக்க முயலவே இல்லை எனச் சொல்ல இயலாது. முயன்றிருக்கலாம். ஆனால் பின்பற்றுவோர் இல்லாமல் இருந்திருக்கலாம்.
புதிதாக மதங்கள் தோன்றி நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஓடிவிட்டன, பெண்ணினமும் மெல்ல உயர்ந்து வருகின்றது. இனி புதிய மதங்கள் தோன்றுமா என்பதே கேள்விக்குறி. அப்படித் தோன்றினால் பெண்களின் பங்கு அதில் பெரிதும் இருக்கும்.
ஏன் புதிய மதங்கள் தோன்றவில்லை? இது தான் இன்றைய தினத்திற்கான ஆராய்ட்சிக்குரிய கேள்வி.
=======================================================
கேள்வி எண் 80:
கேட்டவர் : மதுரை வீரன்
சரியான கோணத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை இன்னும் உலகின் பார்வைக்கு வரவில்லை என்றால் அதற்கு முக்கிய காரணம் என்ன?
இலங்கையில் மட்டுமல்ல, இன்னும் பல தேசங்களில் சில குறிப்பிட்ட இனத்தார் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்பட்டுக் கொண்டுதான் வருகின்றனர். அமெரிக்கக் கறுப்பின மக்களுக்கு இன்னும் வெண்ணிற மக்களைக் காட்டிலும் குறைவான மருத்துவச் சேவையே கிடைப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன,
தேயிலைத் தோட்டத்துத் தொழிலாளிகளாக அடிமைகளாக வந்தவர்கள் தமிழர்கள் என்ற ஆதிக்க உணர்வுதான் அடிப்படைக் காரணம் இல்லையா?
அச்சமுதாயம் உழைப்பால் உயர்ந்தபொழுது உண்டான போட்டிகளும் பொறாமைகளும்தானே அதை தீயிட்டு வளர்த்தது?
இதே சூழ்நிலைதான் தென்னாப்பிரிக்காவில். காந்தி கையில் எடுத்த ஆயுதம் சட்டமறுப்பு இயக்கம். இந்தச் சட்டங்கள் இந்தக் கொள்கைகள் உடன்பாடில்லாதவை என்பதை உலகறியச் செய்து அடிபணிய மறுத்த இயக்கம். அது வென்றது. காரணம் அங்கே போராட்டம் மனிதர்களை எதிர்த்தல்ல கொள்கைகளை எதிர்த்து.
ஆரம்ப கால போராட்டங்கள் சிறியச் சிறியக் கலவரங்களாய் இருந்து வன்முறை முத்திரை குத்தப்பட்டது இங்கே. மனிதர்கள் எதிரிகளாகிப் போனார்கள் இங்கே!
=======================================================
கேள்வி எண் 81:
கேட்டவர் : அன்புரசிகன்
நாம் வழமையாக பாவிக்கும் இலக்கங்கள் இந்துஅராபிய (1 2 3..) இலக்கங்கள் என்கிறார்களே... (ஆண்டு 5ல் படித்தது) அரேபிய இலக்கங்கள் அவ்வாறு இல்லையே... அவை வித்தியாசமாகவல்லவா உள்ளது. பிறகு ஏன் இந்து அராபிய இலக்கங்கள் என கூறுகிறார்கள்...?
தசம எண்களை அரேபிய எண்முறைகள் என்கிறோம். ஆனால் என்கிறார்கள் என்பதே சரியான வார்த்தைப் பிரயோகம். இந்த தசம முறை எண்கள் இந்தியாவில் தோன்றி அரேபியாவில் பரவியவை. அரேபியாவில் இருந்து இது ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றபொழுது அரேபிய எண்கள் என்று பெயர் பெற்று விட்டன, 0,1,2,3,4,5,6,7,8,9 ஆகியவை ஈரோப்பியர்கள் கொடுத்த அடையாளங்கள் ஆகும். இந்த எழுத்துருக்கள் லத்தீன் மொழியில்தான் முதலில் உபயோகிக்கப்பட்டன
.
No comments:
Post a Comment