Thursday, January 7, 2010

தாமரை பதில்கள் -- 30

கேள்வி எண் : 30
கேட்டவர் : ராஜா


தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் முதலிய மொழிகளில் வார நாட்களின் பெயர்கள் கோள்களை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இந்த ஒற்றுமை எவ்வாறு சாத்தியமாயிற்று..?


இந்த ஒற்றுமை இன்னும் பலமொழிகளில் இருக்கிறது. அடிப்படை வியாக்கியானம் இதோ..

நாட்கள் மாதங்கள் என்பவை எப்படி அடையாளம் காணப்பட்டன? இருள், ஒளி என்ற இரண்டைக் கொண்டுதான். இவை எப்படி ஏற்பட்டன? வானில் உள்ள சூரியன், சந்திரன் ஆகியவை தான் முக்கியக் காரணம். இதோடு ஐந்து கண்ணுக்கு தெரிந்த கோள்களுக்கும் இவற்றிற்கும் தொடர்பு இருப்பதாக அறிஞர்கள் கருதினார்கள். 


இதில் விளக்கங்கள் உண்டு. ஆனால் உங்களுக்கு உள்ள மிகப் பெரிய சந்தேகம்.. எப்படி அதே வரிசை?

In astrological theory, not only the days of the week, but the hours of the day are dominated by the seven luminaries. If the first hour of a day is dominated by Saturn (), then the second hour is dominated by Jupiter (), the third by Mars (), and so on, so that the sequence of planets repeats every seven hours. Therefore, the twenty-fifth hour, which is the first hour of the following day, is dominated by the Sun; the forty-ninth hour, which is the first hour of the next day, by the Moon. Thus, if a day is labelled by the planet which dominates its first hour, then Saturn's day is followed by the Sun's day, which is followed by the Moon's day, and so forth, as shown below.


இதையும் இதற்குக் கீழே உள்ள பட்டியலையும் பாருங்கள். அதே சமயம் தமிழ் பஞ்சாங்கம் கிடைத்தால் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கிரஹ ஹோரைகள் பட்டியலைப் பாருங்கள். இரண்டும் ஒன்றாக இருக்கும். கிரஹ ஹோரைகள் இதே வரிசையில் இதே கால அளவு அதாவது மணிக்கொருமுறை மாறுகிறது.



ஹோரைகள் கிரகங்களின் ஆதிபத்ய காலங்களாக கருதப்படுகின்றன..


சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி மற்றும் சனி ஆகிய கிரகங்களுக்கே ஹோரைகள் உண்டு.

திங்கள் கிழமை − சந்திர ஹோரையில் ஆரம்பிக்க சனி, குரு, செவ்வாய், சூரியன், சுக்கிரன், புதன் பிறகு மறுபடியும் சந்திரன் சனி என்று வரும்..


அந்தந்த நாட்கள் அந்தந்த கிரக ஹோரையுடன் தொடங்கும்.

சுக்கிரன், புதன், சந்திரன் குரு ஹோரைகள் சுப ஹோரைகளாக கருதப்படுகின்றன். முகூர்த்தங்கள் குறிக்கப்படும்போது, கௌரி பஞ்சாங்க சுபவேளைகளும், சுப ஹோரைகளும் சேர்த்தே கணக்கிடப் படுகின்றன. 

சூரியன்
சுக்கிரன்,
புதன்
சந்திரன்
சனி
குரு
செவ்வாய்


இந்த வரிசையை நினைவில் கொள்ளுங்கள்.


வரிசையை நினைவில் கொள்ள எளிதான வழி..

ஞாயிறு
ஞாயிறு − 2 = வெள்ளி
வெள்ளி − 2 = புதன்
புதன் − 2 = திங்கள்
திங்கள் − 2 = சனி
சனி − 2 = வியாழன்
வியாழன் − 2 = செவ்வாய்
செவ்வாய் − 2 = ஞாயிறு


கிழமை என்னவோ அந்தக் கிரக ஹோரை என்பது சூரிய உதய நேரம்.
அதிலிருந்து ஒவ்வொரு மணிநேரமும் அடுத்த கிரக ஹோரை.

எனவே புதன் என்றால் 

சூரிய உதயம்(6 மணி) புதஹோரை

அடுத்து சந்திரஹோரை
அடுத்து சனி
அடுத்து குரு
,,,,


எளிதான* கணக்குதான் இல்லையா? 



பார்க்கப்படும் பொருள் வானமும் நட்சத்திரங்களும் கோள்களும் என்பதாலேயே. 

பல மொழியாய் இருந்தாலும், பல காலகட்டங்கள் என்றாலும் வரிசை மாறாமல் இருக்கக் காரணம் வானவியல் என்பதும் ஜோதிடம் என்பதும் கணித அடிப்படையில் அமைந்ததால்தான்.

அதனாலதான் கூட்டிக் கழிச்சுப் பார்த்தா கணக்கு சரியா வருது. 

No comments:

Post a Comment