கேள்வி எண் : 31
=======================================================
கேட்டவர் : ஓவியன்
நாயகன் கமலையும், நாயகன் ஜே.கே.ரித்தீஷையும் ஒரு ஒப்பீடு செய்யுங்களேன்.....??
புதிய நாயகன் கண்ணில் பட்டால் பார்த்த பின்னால் பதில் இதே இடத்தில் வரும்.
=======================================================
கேள்வி எண் : 32
=======================================================
கேட்டவர் : நாகரா
"தாம் அரை" என்றுணர்ந்து மனிதத் தாமரை சூரியக் கடவுளை உள் வாங்கிப் பூரணமாய் மலர்வதற்குப் பெருந்தடை யாதோ?
"மேகம் (May come)" என்னும் ஸ்திரத் தன்மையில்லா எண்ணங்கள்.
=======================================================
கேள்வி எண் : 33
கேட்டவர் : நாகரா
தா! மரை என்று சூரியக் கடவுள் ஆயிரமாயிரங் கதிர்த் திருப்புளிகளோடு(screw drivers) மரை கழற்ற எப்போதும் அருகிருந்தும், மனிதத் தாமரை மரை கழற்ற மனமின்றி மலராமல் முடங்கப் பெருங்காரணம் யாதோ?!
எண்ண இதழ்கள் மாயப்பிடிப்பில் இறுகிக் கிடக்கும் மொட்டைக் கழற்ற சூரியக் கதிர்கள் சுழல்வதில்லை. சிந்தனைத் தேனூறும் பருவம் பெற்று அடுக்கு இதழ்கள் பிடிப்பவிழ்த்து மலரும் தாமரை.
காலம் வரும் வரை பொருத்திருத்தல் கதிரவன் கடன். எல்லாக் கதிர்களும் எல்லா மொட்டுக்களையும் அவிழ்ப்பதில்லை. பக்குவம் பெற்ற மொட்டுக்கள் மட்டுமே தாமே அவிழ்கின்றன. ஏதோ ஒரு கிரணத்தில் கிறக்கம் கொண்டு.
ஒவ்வொரு கதிரும் ஒரு சின்ன மாற்றத்தை மட்டுமே ஏற்படுத்தும் மரை கழலுதல் மறை உணருதல் மறைத்தலும் அருளலும் அன்றி வேறில்லை.
=======================================================
கேள்வி எண் : 34
கேட்டவர் : crisho
அன்பு தாமரை அண்ணாவுக்கு,
மனதை ஒருநிலை படுத்த எப்படி முயற்ச்சித்தாலும் முடிவதில்லை ஏன்?
இஷ்டத்துக்கு ஆசைகள் வந்துட்டே இருக்கு... கூடுதலானவை விணை ஏற்படுத்தக் கூடியதானவையாகவே உள்ளன!!
மனம் ஒரு குரங்கு என்பதாலா??
ஆசைதான் காரணம்.
மனதை ஒரு நிலைபடுத்த வேண்டும் என்ற ஆசையை விட்டு விடுங்கள்.
தியானத்தின் போது மனதை கட்ட முயற்சிக்காதீர்கள்.. என்ன நினைக்க ஆசைப்படுகிறதோ நினைக்கட்டும்.
மனம் காலியாகிவிடும்.
நான் படுத்த உடனே உறங்கும் ரகசியமும் இதுவேதான்
=======================================================
கேள்வி எண் : 35
கேட்டவர் : நேசம்
கடவுள் உங்களுக்கு ஒரு வரம் கொடுத்தால் அது என்னவாக இருக்கும்
தான்தான் கடவுள் என்று தன்னை வெளிக்காட்டியதே மிகப் பெரிய வரம் தானே எனக்கு!!!
நான் பெற்றதை பிறரும் பெற வழியும் தெரிந்திருக்கும். அதனால் சும்மா பேசாமல் நிக்க வேண்டியதுதான்... என்ன மனசில் ஒரு திருப்தியும் அமைதியும் மட்டும் இருக்கும். மற்றபடி எதையும் மாற்றச் சொல்ல மாட்டேன்.
.
No comments:
Post a Comment