Tuesday, January 12, 2010

ரூம் போட்டு யோசிக்கலாம்!!!



ஸ்ட்ரெயிட்டா மேட்டராண்ட வர்றேன். மேட்டர் இன்னானா அந்தக் காலத்தில அதாவது புராணங்கள் மற்றும் மன்னராட்சி காலங்களில் தொலைக்காட்சி விளம்பரங்கள் இருந்திருந்தால் அப்போது அதை அன்றாட வாழ்வில் எப்படிப் பயன் படுத்தியிருப்பார்கள்?


இராமனும் சீதையும் காட்டுக்குப் போக தாயாராகிக் கொண்டிருக்கிறார்கள்..

இலட்சுமணன் ஆவேசமாக வருகிறான்..

இலட்சுமணன் : அண்ணா, இது என்னக் கோலம்? ஏன் மரவுரி?

இராமன் : நான் காடாள வேண்டும். பரதன் நாடாள வேண்டும்..

இலட்சுமணன் : யார் சொன்னார்கள்?

இராமன் : அம்மா சொல்லாம வேற யார் சொல்லுவாங்க?

(மெடிமிக்ஸ் விளம்பரம்)


--------------------------------------------------------------------------------------------------

சகுந்தலை : நான் உங்கள் மனைவி.. கானகத்தில் காதலித்து கந்தர்வ மணம் செய்து கொண்டோமே!!!


துஷ்யந்தன் : ஆதாரம் இருக்கா?


மீன் வயிற்றிலிருந்து மோதிரம் கிடைத்ததும், அதைப் பார்க்கும்

துஷ்யந்தன்

என்ன ஒரு ஆதாரம்..


--------------------------------------------------------------------------------------------------


சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானியை மணந்த யயாதி சுக்ராச்சாரியார் சாபத்தால் இளமை இழந்து குரூபியாகிறான்..(இவன் பரத வம்சத்தைச் சேர்ந்தவன், அஸ்தினாபுரத்தை ஆண்டவன்)

ஒவ்வொரு மகனாகச் சென்று அவனின் இளமையைத் தனக்குக் கொடுத்து விட்டு நாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறான்.

முதல் நான்கு மகன்கள் ஏற்றுக் கொள்ள மறுக்க,

ஐந்தாவதும் கடைசியுமான மகன் அவன் வேண்டுகோளை ஏற்றுக் கொள்கிறான்..

யயாதிக்கு இளமை மீள சந்தோஷமாகப் பாடுகிறான்.,..

"ஆனந்தம் ப்ரூவுடன் ஆரம்பம்"

ஏன்னா,

இளமையைக் கொடுத்தவன் பேர் புரு...


ஹி ஹி ஹி..


3 comments:

  1. அனைத்தும் அருமை

    ReplyDelete
  2. இரண்டாவது எந்த விளம்பரம் சார்??

    ReplyDelete