கேள்வி எண் : 162


கேட்டவர் : சுகந்தப்ரீதன்


பெரியார் அணைக்கட்டு பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு அமுல்படுத்துவதற்க்கு கேரள அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அதைப்பற்றி கண்டுக்கொள்ளாத மத்திய அரசு, தற்போது தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி கேரள அரசிற்க்கு புதிய அணைக்கட்டுவது குறித்து ஆய்வுகள் நடத்த அனுமதியளித்திருப்பது எந்தவகையில் நியாயம்..?பெரியாறு அணை (பெரியார் அணை அல்ல) கேரளா எல்லையில் உள்ளது. மாநிலங்கள் உச்ச்நீதி மன்ற தீர்ப்பை மதிக்காததை என்றுமே மத்திய அரசு கண்டுகொண்டதில்லை. இதை பலமுறை கண்டிருக்கிறோம். 

ஒகேனக்கல் குடிநீர் திட்ட விஷயத்தில் கூட மத்திய அரசு தலையிடாது. தமிழக அரசு தாராளமாக செய்யலாம். 

உங்க மாநிலத்துக்குள் என்ன வேணும்னா செய்யுங்க, உங்க மாநிலம் அடுத்த மாநில திட்டத்தால பாதிக்கப்பட்டா கேஸ் போடுங்க.. ஜெயிங்க. ஆனால் அந்த தீர்ப்பு அமுலாக்கப்படணும் என்று எதிர்பார்க்காதீங்க என்பது மத்திய அரசின் உண்மை நிலை.

இதை எல்லா மாநில விஷயத்திலும் அவங்க கடை பிடிக்கிறாங்க. 

உதாரணமா மணல் அனுப்ப மாட்டோம், அரிசி அனுப்ப மாட்டோம்னு, லாரி ஓட்ட மாட்டோம் என எதை தமிழ்நாடு சொன்னாலும் மத்திய அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்காது,.

பாரபட்சமில்லாமல் பாரமுகமா இருக்காங்க.

அது நியாயம்தானுங்களே.


(நீங்க நியாயப்படுத்தச் சொன்னதால் நியாயப் படுத்துகிறேன் )