கேள்வி எண் : 167
கேட்டவர் : கீதம்
ஆஸ்திரேலியாவின் தென் பகுதிகளில் போனவாரத்திலிருந்து
மிகப்பெரிய அளவில் புழுதிப்புயல் (dust storm)உருவாகி
பார்க்குமிடங்களெல்லாம் செக்கச்செவேலென்று பனிமூட்டம் போல்
காட்சிதருகின்றன. அடிக்கடி இது போன்ற புழுதிப்புயல் வீசி மையப்பகுதியிலுள்ள
பாலைநில மண்ணைக் (top soil) கொண்டுவந்து ஊரெங்கும் தூவிச்செல்வது உண்டு
என்றும் இந்தமுறை மிக அதிகம் என்றும் கூறுகிறார்கள். கிட்டத்தட்ட 14
மில்லியன் டன் மண்ணாம். இந்த அளவு மண் என்று எப்படி அளவிடுகிறார்கள்? இந்த
புழுதிப்புயல் ஏன் உண்டாகிறது?
காற்றழுத்த வித்தியாசங்கள்தான் சாதாரணப் புயலுக்கும் சரி, புழுதிப்புயலுக்கும் காரணம்..
கோடையில் காற்று மிகவும் சூடாகி மேலே செல்லும். இதனால் அந்தப் பகுதியில்.
காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் உண்டாகும். இதைச் சரி செய்ய குளிர்ச்சியான
பகுதியில் இருக்கும் காற்றானது இந்த தாழ்வு மண்டலத்தை நோக்கி வேகமாக
வீசும்..
கடலின் மீது இப்படிக் காற்று வீசும் போது அது புயலாக மாறுகிறது. மழையைக் கொண்டு வருகிறது..
ஆனால் ஈரப்ப்சை இல்லாத பாலைவனங்களில் பயணிக்கும் இப்புயல், அல்லது தனது
ஈரப்பசை மழையாகப் பெய்துவிட்டுப் பயணிக்கும் காற்று கற்களையும், மணற்
கட்டிகளையும் அரித்து மெல்லியத் தூசுகளாக்குகிறது. இந்த தூசுக்கள் காற்றின்
வேகத்தினால் அதிர்வதால் எதிர்மின்னூட்டம் பெற்று அரிப்பை இருமடங்காக்கிக்
காற்றில் பரவுகின்றன்.
இதனால்தான் புழுதிப்புயல் உண்டாகிறது. அதன் அளவை எப்படி அளக்கிறார்கள் என்பது நல்ல கேள்வி..
காற்றில் உள்ள புழுதியின் அடர்த்தி, காற்றின் வேகம், பரப்பளவு மற்றும்
காற்று வீசிய கால அளவு .. இவற்றை எல்லாம் அடிப்படையாக கொண்டு எவ்வளவு எடை
மணல் துகள்கள் என்பதைக் கணக்கிடுகிறார்கள்.
இவற்றை அளப்பதற்காக அளவை மையங்களை அங்கங்கு நிறுவி இருக்கிறார்கள்.
மழை அளவை நம் அளப்பது போல இதுவும் சராசரி அளவுதான்...
No comments:
Post a Comment