யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் என்று சொல்பவர் யார் என்று
தேடுகிறேன். தன்னை வினை என்று அறிமுகப் படுத்திக்கொள்கிறார் அவர்.
வினையேன் அழுதால் உனைப் பெறலாமே..
பொய்யான பூஜைகள்
பொய்யான உபதேசங்கள்
பொய்யான பக்தி
இப்படிப் பொய்யாய்ச் செய்யும் வினைகள் எத்தனையோ இருக்கின்றன. இப்பொய்களும்
கூட இறைவனைச் சிலசமயம் அடைந்து விடுகின்றது. எப்பொழுது தெரியுமா? மனம்
வருந்தி அழும்பொழுது...
அதாவது இத்தனைக் காலம் பொய்யாய் எத்தனையோ வினைகளைப் புரிந்திருக்கலாம்.
ஆனால் அவற்றிற்காக வருந்தி அழுதால் அவை மெய்யான வினைகள் செய்த பலனைக்
கொடுத்து அவன் அருளையும் அன்பையும் பெற்றுத்தரும்.
மன்னிப்பது கடவுள் குணம். எந்த ஒரு வினாடியிலும் திருந்துவதற்கு கடவுள் வாய்ப்பளித்துக் கொண்டே இருக்கிறார்.
பொய்களுக்கும் அருளும் மெய்ப்பொருள் தாயும் ஆனவனாக இன்றி யாராக இருக்க முடியும்
No comments:
Post a Comment