கேள்வி எண் : 170
கேட்டவர் : அமரன்
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மதம்சார்ந்த சில
சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் பிரான்சு போன்ற சில நாடுகளில் எல்லா
மதத்தினருக்கும் ஒரே சட்டம்தான். எந்தவிதமான நெகிழ்வுக்கும் இடமில்லை.
இவற்றுள் சனநாயகத்துக்கு எற்புடையது அல்லது சரியானது எது?
சட்டங்களில் இருவகை உண்டு,
1. குடியியல் சட்டங்கள் (சிவில்)
2. குற்றவியல் சட்டங்கள் (கிரிமினல்)
குற்றவியல் சட்டங்கள் அனைவருக்கும் ஒரே அளவுகோலைக் கொண்டதாக அமைய வேண்டும். அதுதான் அனைத்து நாடுகளிலும் இருக்கிறது.
குடியியல் சட்டங்கள் என்பது மட்டும் இந்தியா போன்ற நாடுகளில் மாறுபாடு உடையதாக இருக்கிறது..
எல்லோருக்கும் ஒரே குடியியல் சட்டம் என்பது மதசார்பற்ற அரசு. அவரவர் மதப்படி அவரவர் குடியியல் சட்டம் என்பது சமத்துவ அரசு. இரண்டும்
ஜனநாயகமே. மக்கள் விருப்பப் படியே இவ்வழிகள் தேர்ந்தெடுக்கப் படுகின்றன.
மதசார்பற்ற அரசாக இருத்தல் எளிது, மக்களுக்கு தெளிவும், சமத்துவமும்
கிடைக்கும். அதே சமயம் மக்களுக்கு நாடா? மதமா? என ஒரு கேள்வி எழும். அதை
சரியான வகையில் அணுகுவது முக்கியம். அதாவது சட்டம் அமைப்பவர்கள், மதங்களை
ஆராய்ந்து உணர்வுப் பூர்வமாக யாரையும் புண்படுத்தாத சட்டங்கள் அமைத்தல்
முக்கியம்.
அனைத்து மதங்களுக்கும் மதிப்பு அளித்து அவற்றின் வாழ்வியல் கோட்பாடுகளை
குடியியல் சட்டத்தில் அமைத்து வழிநடத்துவதற்கு மிகவும் மேம்பட்ட சமுதாயச்
சூழல் தேவை. ஒருவர் நம்பிக்கையை இன்னொருவர் மீது திணித்தல் இல்லாமல்,
பிறரின் நம்பிக்கைகளை மதிக்கும் சமுதாயம் தேவை.
பெரும்பான்மை சமூகத்தினருக்கு சிறுபான்மை மக்கள் சற்று அளவுக்கு அதிகமாகவே
உரிமைகள் பெறுவதாக இதில் தோன்றும். இதனால் மக்களுக்குள் போட்டிப்
பொறாமைகள் உண்டாகி விடுகிறது. இங்கு சட்டம் அமைப்பது எளிது. ஆனால் சமுதாயக்
குழுக்களுக்கு உண்டாகும் மன உளைச்சல்களை கட்டுப்படுத்தல் கடினம்.
ஒரே நாடகவே இருந்த நாட்டிற்கு பொதுச்சட்டம் நல்லது.
பல நாடுகளாக இருந்து ஒன்றாகிய இந்தியா போன்ற நாட்டிற்கு இரண்டாவது வகை நல்லது...
மற்றபடி ஜனநாயகத்திற்கு எது ஏற்புடையது என அறியவேண்டுமானால் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அதை அமல்படுத்த வேண்டும்.
ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் பொதுமக்கள் தங்கள் சுயகருத்தை பிரதிபலிக்க
அறியாமல் எடுப்பார் கைப்பிள்ளைகளாக இருக்கிறார்கள். எனவே வல்லான் வகுத்ததே
வாய்க்கால்.
No comments:
Post a Comment