முக்குணத்தைச் சீவனெனும் மூடத்தை விட்டருளால்
அக்கணமே எம்மை அறிந்துகொள்வ தெந்நாளோ ?
தாயுமானவர்
சாத்வ, ரஜா, தாமஸ என்னும் குணங்களும்
உயிர் உடல் உலகம் பசி துன்பம் இன்பம் வலி போதை எல்லாமே மாயை என்பதும் அறிவுக்குத் தெரிகிறது.
ஆனால் அந்த அறிவு அதை ஏற்பதாயில்லை.. ஆயிரமாயிரம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறது..
அது எப்படி? இது என்ன? எது உண்மை? எது பொய்?
தீராத தேடலில் ஆன்மாக்களை சீவன்களில் நுழைத்துத் தள்ளிவிடுகிறது.
ஒவ்வொரு யுகங்களிலும் தேடலின் திசை மாறிக் கொண்டே இருக்கிறது.
தேடலின் திசை தொலைந்து போகும்பொழுதெல்லாம் ஊழியென்று எழுதியதை அழித்து மீண்டும் எழுதத் தொடங்குகிறான் இறைவன்.
எத்தனையோ யுகங்கள்,எத்தனையோ கல்பங்கள், எத்தனையோ பிரம்மங்கள் கழிந்துபோயின..
இன்னும் பொருட்கள் குணங்கள் என்று தேடல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்த மூடத்தனங்கள் எல்லாம் ஒழிந்து, மாயை மறந்து சீவன் ஒழிந்து எல்லாம்
சிவன் ஆவது அருளால் மாத்திரமே சாத்தியம் என்று தோன்றுகிறது. அது நடக்க ஒரு
கணம்தான் ஆகும். கணநேரத்தில் எல்லாம் புரிந்து விடும். ஆனால் அப்படி ஆகும்
நாள் எப்பொழுது வருமோ?
No comments:
Post a Comment