தேசிய நலனில் அக்கறை கொண்டவராக தன்னைக் காட்டிக்கொள்ள
முயலும் ராகுல்காந்தி, "தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தை" எதிர்ப்பது
குறித்து...?!
சில கோணங்களில் இராகுல்காந்தி செய்தது சரி...
1. ஒரு மாநிலம் கூட தன்னுள் இருக்கும் நதிகளை இணைத்து தண்ணீரைச் சேமிக்கத்
திட்டம் போடவில்லை. இதுவரை நடந்திருக்கிற ஒரு நதி இணைப்பு திட்டம்னா
பெரியாறு அணை மூலம் முல்லை ஆற்றுக்கு தண்ணீரைத் திருப்பி, வைகையில்
இணைக்கிறதுதான். இதுவும் ஆங்கிலேயர் காலத்தில் செய்தது. மத்தபடி ஏரிகளை
பக்கத்தில் உள்ள ஆற்றுடன் இணைத்து கூட கால்வாய் கட்ட மாட்டங்கறாங்க.
கரிகால் சோழன் காலத்தில் அவர் செய்தது கூட இப்போது இல்லை. கிருஷ்ணா
குடிநீர் திட்டம் எந்த அளவு உபயோகமா இருக்கு? அப்படி இருக்க மத்திய
அரசுதான் இதைச் செய்யணும்னு கூச்சல் போடலாமா?
இந்திரா காந்தி கால்வாயை பஞ்சாபிலிருந்து (சட்லெஜ்-பியாஸ் நதிகளில்
சங்கமத்திற்கு சற்று தொலைவில் இருந்து ) இராஜஸ்தானின் ஜெய்சல்மீர் நகரம்
வரை கட்டியது நேரு அரசு. இது 650 கிலோ மீட்டர். பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர்
நிலங்கள் இதனால் பாசனம் பெறுகின்றன. அதுக்குப் பின்னால்?
2. மாநிலங்களின் தண்ணீர் தாவா பிரச்சனை இப்ப இருக்கற ஆறுகளாலேயே எக்கச்
சக்கமா இருக்கு. இதில ஆறுகளை இணைச்சா உத்திராஞ்சல் மாநிலத்துக்கெதிரா,
பீகாருக்கு எதிரா, மத்திய பிரதேசத்துக்கு எதிரா இப்படி எத்தனை வழக்குதான்
போட்டு வாதாடுவது?
3. ஆதரவா பேசினவங்க எதுவுமே செய்யலை, ஒருத்தர் எதிர்ப்பதிலாவது மத்தவங்க ஒண்ணுகூடி இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கட்டுமே.
4. அவர் சொல்வது சுற்றுப்புற சூழ்நிலையை இது பயங்கரமாக பாதிக்கும் என்பது.
இது சரியா தவறா எனப் பார்க்க வேண்டிய ஒன்று, நீ சொன்னது தப்புன்னு
எதிர்கட்சிகள் நிரூபிக்கனுமே தவிர எப்படி இதைச் சொல்லலாம்னு கேட்கக்
கூடாது. இதை எதிர்த்து எதிர்கட்சிகள் ஆட்சியைப் பிடித்தால் இதை நிறைவேற்ற
அடியெடுத்தே ஆகவேண்டும். ராகுல் காந்தி இதைச் சொன்னதன் மூலம் நதிநீர்
இணைப்பு என்பதை மக்களின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கிறார் என்றே சொல்ல
வேண்டும். அவரை எதிர்ப்பவர்கள் இதை நிறைவேற்றட்டுமே. இரண்டு நதிகளை
மட்டுமாவது இணைக்கட்டுமே.
5. வெறும் தேர்தல் அறிக்கையா இருக்கும் ஒரு திட்டத்தை ஆதரிப்பதை விட எதிர்ப்பதுதான் அதை நிறைவேற்ற எளிய வழி.
No comments:
Post a Comment