இக்கவிதையில் நான் ஒளிய வைத்திருக்கும் கருத்தை விளக்கி விடுகிறேன்.
ஆச்சர்யக்குறி என்பது கர்வம் என்ற உணர்வைக் குறிக்கும். கர்வம் கொண்டவன் தலை உயர்த்தி நிற்கிறான்.
கேள்விக்குறியோ தேடலைக் குறிக்கும். தேடல் உள்ளவன் குனிந்து தேடுகிறான்.
முடிவு என்னும் முற்றுப் புள்ளி, ஆச்சர்யக் குறிக்கு கீழேயும்,
கேள்விக்குறிக்கு கீழேயும் இருக்கத்தான் செய்கிறது. அனைவரின் முடிவும்
அவரவர் காலடிக்குக் கீழேயே இருக்கிறது..
தேடலில் இருக்கும், குனிய யோசிக்காத மனிதனுக்கு அந்த முடிவு தெரிகிறது.
ஆனால் கர்வத்தில் தலை உயர்த்தி நிற்கும் மனிதனுக்கு தன் முடிவு தன்
கால்களுக்கு அடியிலே இருப்பது தெரிவதில்லை.
முற்றுப் புள்ளி என்பதை மரணம், இறைவன் என்று எப்படி உருவகப்படுத்தினாலும் இந்தக் கவிதை பொருந்தும்.
இன்னொரு பார்வையில் சொல்லப் போனால்
உணர்வுகள் தேடினால் அதனிலேயே கிட்டும் தேடப்படும் பொருள்
No comments:
Post a Comment