காட்சிக் கெளியான்காண் கண்டாலுங் காணான்காண்
மாட்சிமனம் வைத்தார்க்கு மாணிக்கத் துள்ளொளிகாண்
பட்டினத்தார்
காட்சிக்கெளியவன்.
பார்க்க வேண்டும் என்று நினைத்தால் இறைவனை எதிலும் காணலாம். இறைவன் என்றால் எத்தனையோ கற்பனை வடிவங்கள் மனதில் இருக்கலாம். அப்படி இருப்பான் இப்படி இருப்பான் என்று. ஆனால் அப்படியெல்லாம் அவன் தன்னை பிரித்து வைத்துக் கொள்வதில்லை. நாம் சாதாரணமாக காணும் வடிவங்களிலேயே அவன் இருக்கிறான்.
கண்டாலும் காணான்
அப்படி இறைவன் எல்லாவற்றிலும் இருந்தாலும் இன்னும் இறைவனைத் தேடிக் கொண்டே இருக்கிறோம். பார்ப்பதில்லை. ஒன்றிரண்டு வடிவங்களில் இறைவனை நாம் கண்டாலும் இன்னும் எத்தனையோ இடங்களில் உள்ள இறைவன் காட்சிக்கு எட்டாதவனாகவே இருக்கிறான்.
மாட்சி மனம் வைத்தார்க்கு..
இந்த அவனின் பெருமையை மனதில் உணர்ந்தவர்களுக்கு...
மாணிக்கத்துள்ளொளி
மாணிக்கத்தின் உள்ளே ஒளி கிடையாது. வெளியில் இருந்து புகும் ஒளியே
மாணிக்கத்தால் முழு அக எதிரொளியாக மாணிக்கத்தின் உள் ஒளியாகத் தெரிகிறது.
அப்படி இறைவனின் மாட்சியை மனதில் பெற்று முழு அகப் பிரதிபலிப்புக்கு
உண்டாக்க மனம் இறைத்தன்மையில் ஒளிரும்.
காண், காண், காண் என மும்முறை சொல்வதில் ஒரு பொருள் உண்டு.
பார், உணர், புரிந்துகொள்....
No comments:
Post a Comment