அல்லும் பகலும் அறிவாகி நின்றவர்க்கே
சொல்லும் பொருளும் சுமைகாண் பராபரமே
தாயுமானவர்
அல்லும் பகலும் அறிவாகி நிற்பவன் அந்தத் தாயுமானவனன்றி வேறு யாராக இருக்க முடியும்.
அறிதல், அனுபவம் எல்லாமே இறைவனன்றோ. அப்படியெனில் நம்முள் அறிவாகி
நிற்பவனும் இறைவனே.. எதையறிந்தாலும் அதன் மூலம் நாம் அறிவது இறைவனை அன்றி
வேறொன்றில்லையே..
ஒன்றை பல கோணங்களில் காண்கிறீர்களே எப்படி என்று அவ்வப்பொழுது
நண்பர்கள் கேட்பதுண்டு. இன்று இப்பராபரக் கண்ணியைக் கண்ட பொழுது நான்
கண்டது அதுதான்.
ஒன்றைத்தான் நாம் எப்பொழுதுமே பல கோணங்களில் கண்டு
கொண்டிருக்கிறோம். எல்லாம் இறைவன் என்னும் பொழுது, நாம் எங்கு எதை எப்போது
எப்படிக் காணினும் அந்த அறிதல் என்ற அறிவாகி இருப்பவன் இறைவனே..
அப்படிப் பட்ட அறிவினை எந்தச் சொல்லால் பாடுவது, எந்தப் பொருளை அதற்கு
அர்ப்பணிப்பது? சொல்லும் பொருளுமே இப்பொழுது சுமையாகிப் போகின்றன. அறிவினை
அமைதியாய் தியானித்து அனுபவித்தலே இஷ்டமாகிப் போகிறது,
அப்படி ஆழ்ந்து அனுபவித்தலை தியானம் என்கிறோம்..
தெய்வம் நமக்குள் அறிவாக, உணர்வாக இருத்தலினால் வார்த்தைகள் பொருட்கள்
ஆகியவை இறைவனை அறிதலில் சுமையாகி விடுகின்றன. (அந்தச் சுமையை நான் கொஞ்சம்
அதிகமாகவே சுமக்கிறேன் போல.. )
தியானம் பழகிப் பார்க்கணும் போல..
பழகுகிறேன்.!!!
No comments:
Post a Comment