Tuesday, June 1, 2010

தாமரை பதில்கள் : 97

கேள்வி எண் 97:
கேட்டவர் : சிவா.ஜி


ஏன் எந்த தீவிரவாதிகளும் அரசியல்வாதிகளைக் கொல்வதில்லை? அதேபோல எந்த நிழல் உலக தாதாக்களும் அரசியல்வாதிகளை பணம் கேட்டு மிரட்டுவதில்லை?



1. எதுக்கு அவங்க குடும்பத்துக்கே நாட்டை பட்டா போட்டு கொடுக்கவா?
2. கொடுக்கறவனை எப்படிங்க அரசியல்வாதின்னு சொல்லமுடியும்? 


உங்க தீவிரவாதி வரையறை என்ன சிவா.ஜி.. அரசியல்வாதிகளில் பலர் போராளிகளால் கொல்லப்பட்டிருக்கின்றனர். காந்தியே கோட்ஸேவினால் ஏன் கொல்லப்பட்டார்? ராஜீவ்காந்தி, ஜெயவர்த்தனே நினைவில்லையா? சத்வந்த்சிங், பியாந்த் சிங் இவர்கள் யார்?

ஒரு மத்திய அமைச்சரின் மகள்(முஃப்தி முகம்மத் சையத் என நினைக்கிறேன்) தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு மிரட்டப்பட்டது ஞாபகம் இல்லையா?

நிழலுலக தாதாக்களுக்கு பணத்தை விட மிக முக்கியமான சலுகைகள் தேவை, அதனால் பணத்துக்காக மிரட்டுவதில்லை. சொல்லப்போனால் அனாவசியமாக நிழலுலகினோர் பணம் கேட்டு மிரட்டுவதில்லை. அது அவர்களின் முக்கியத் தொழிலல்ல. அவர்கள் தொழிலதிபர்கள், பணக்காரர்களை மிரட்டுவது மக்கள் மனதில் பயத்தை ஆழமாக விதைக்கத்தான். ஏனென்றால் என்னதான் பணத்தை வாரி இறைத்தாலும் பணக்காரர்கள் ஒன்று சேர்ந்தால் தங்களின் தொழிலுக்கு ஆபத்து உண்டு என்பது அவர்களுக்குத் தெரியும்.

லோகல் தாதாக்கள் வேண்டுமானால் கடத்தலைச் செய்யலாம்


http://www.thaindian.com/newsportal/uncategorized/madhya-pradesh-home-ministers-kin-kidnapped-robbed_10024752.html

No comments:

Post a Comment