Saturday, June 5, 2010

இதுவரைத் தெரியாத உலகம்




இந்தோனோசியாவின் பப்புவா நியூ கினியா பகுதியில் போசவி எரிமலையின் வாய்... 4 கிலோ மீட்டர் நீளமும் 1 கிலோ மீட்டர் ஆழமும் உள்ள மழைக்காடுகள் நிறைந்த பிரதேசம்





இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்த எரிமலை பொங்கி இருக்கிறது. இப்பொழுது இது ஒரு அணைந்த மலை..

இங்கு அழகான நீர் வீழ்ச்சியும் உண்டு மெகானி குகைகளில் இருந்து நீர் பாய்ந்து வருவதைக் படத்தில் காணலாம்.




இதன் வாய்ப்பகுதியில் விஞ்ஞானிகளின் அணி பல அதிசய உயிரினங்களை இப்பொழுது கணடறிந்திருக்கிறது.
16 வகையான புதிய தவளை வகைகள், மூன்று வகையான புதிய மீன் வகைகள் (மஞ்சு அக்கா, இதுக்கும் பிரியாணி பக்குவம் சீக்கிரமே கண்டு பிடிச்சிடுவோம், கவலைப் படாதீங்க), வௌவால், கிளி, புறா, புழுக்கள் இப்படி இதுவரை அறிந்திராத 40 வகை உயிரினங்களை விஞ்ஞானிகள் இங்கே கண்டு பிடித்திருக்கிறார்கள் அவற்றில் சில கீழே படங்களாக



பழப் புறா


காளை முக குள்ளக் கிளி


கம்பளிப் புழு 


போஸாவி உரோம எலி - உலகிலேயே மிகப் பெரிய எலி


பச்சோந்திச் சிலந்தி


பொன் வண்டோட தங்கச்சி வண்டு..


குழாய் மூக்கு வௌவால்


அரிய தவளை வகை - லிடோரியா சௌரோனி


கஸ்கஸ் விலங்கினம் - பாலூட்டி


ராஜ பறவை (கிங பேர்ட்)


ராஜ பறவை (King Bird) யின் வால் பகுதி.. எதுக்கு பயன்படுதுன்னு மன்றம் அறியுமே!


வரிகளுடன் கூடிய போஸியம் எனப்படும் விலங்கு. புனுகுப் பூனைக்கு ஆப்போசிட்டுங்கோ!


கேட்டர் பில்லர் எனப்படும் பட்டுப்புழுக்களின் புதுவகை




No comments:

Post a Comment