Tuesday, June 29, 2010

தாமரை பதில்கள் - 147

கேள்வி எண் 147:



கேட்டவர் : பரஞ்சோதி


காளிதாசரின் மகாவம்சம், குமாரகாவியம், மேகதூதம் கதைகள் படிச்சிருக்கீங்களா? தெரிஞ்சதை சொல்ல முடியுமா?


காளிதாசர் எழுதியது ரகுவம்சம். மகாவம்சம் அல்ல. மகாவம்சம் என்பது இலங்கையின் வரலாறாக புத்த மதத்தவரால் கூறப்படுவது, இது சிங்களரின் சரித்திரம் எனச் சொல்லலாம்.


ரகுவம்சம் என்பது இராமனுடைய முன்னோர்களில் ஆரம்பித்து அந்த வமிசத்தைப் பற்றிச் சொல்வதாகும். இஷ்வாகு, திலீபன், ரகுஇப்படி நீங்கள் கேள்விப்படாத பல இராமனின் முன்னோர்களை இதன் மூலம் அறியலாம். இதை சிறு சிறு கதைகளாகப் படித்திருக்கிறேன்..


மேக தூதம் சாபத்தின் காரணமாக பிரிந்த யக்ஷ/வித்யாதரன் ஒருவன், தன் மனைவிக்கு மேகத்தை தூதனுப்பும் அருமையான காவியம். நான் படிக்க வில்லை.


குமாரசம்பவம் என்பது நமது கந்த புராணம். காளிதாசனின் காவியம் நான் படிக்கவில்லை.. கச்சியப்ப முனிவரின் கந்தபுராணத்தின் உரையைக் கேட்டிருக்கிறேன்.


சாகுந்தலம் - துஷ்யந்தன் - சகுந்தலைக் காதல் காவியம்.

விக்ரம - ஊர்வசியம் - குப்தர் கால வரலாறு

மாளவிகாக்னிமித்ரம் - என்னவென்று தெரியலை..

இவ்வளவுதான் தெரியும்..

.

No comments:

Post a Comment