Saturday, June 5, 2010

தாமரை பதில்கள் : 112

கேள்வி எண் 112:



கேட்டவர் : ஆதவா


இன்னும் எத்தனை நாளைக்கு பெட்ரோலியம் கிடைக்கும்??? திடீரென்று தீர்ந்துவிட்டால்??



அப்படியெல்லாம் நேற்றிருந்தது இன்னிக்கில்லை என்கிற மாதிரி சட்டுன்னு மாயமா மறையாது பெட்ரோலியம். பெட்ரோலியம் பற்றி 4000 வருஷத்திற்கு முன்பே மனுஷனுக்குத் தெரியும். 2000 வருஷமா பெட்ரோலியம் உபயோகப்பட்டு வருது, 1800 களில் இருந்து பெட்ரோலிய உபயோகம் அதிகரித்து 

இன்னும் 50 வருடங்களுக்கு தாராளமா வரும். அப்புறம் ரேஷன்ல வரும். அப்புறம் ஃபேஷனாகிப் போகும்.

இதையெல்லாம் பார்த்தா மனுஷன் பயப்படுவான்? அதுக்கு தான் மக்காச் சோளம், கரும்பு, சோயா, கடுகு, நிலக்கடலை, பனைஎண்ணெய் இப்படி பலவிதமான எண்ணெய்களிலிருந்து பயோடீசல் தயாரிக்கும் முயற்சி நடக்குது. மின்சார உபயோகம் அதிகப் படுத்தப் பட்டு, மின்சாரத்தயாரிப்புக்கு காற்று, கடல் அலை, வெயில், இப்படிப் பல விதமான எப்போதும் கிடைக்கும் மூலப்பொருட்களை உபயோகிக்கும் முயற்சி செய்யப்படுது.

கவலைப் படாதீங்க, கடல் மேல் பூஞ்சை விளைவித்து அதில் இருந்தும் பயோடீசல் எடுக்கலாம். மனிதனின் அறிவு அளப்பரியது, நம்பிக்கை வைங்க..

ஆனால் அதுக்காக எக்கச்சக்கமா செலவு செய்யாதீங்க. சிக்கனமா இருங்க.

No comments:

Post a Comment