Wednesday, June 23, 2010

conspiracy theories 1 -- நிலவில் மனிதன் கால் வைத்தது பொய்? - 5


(1 newton = 0.224808943 pounds force)

இதை வச்சுப் பார்த்தா
நிலவிறக்கக் கூட்டின் திரும்ப வரும் எடை

10,024 pounds + 300 = 10324 pounds

இதை வச்சுப் பார்த்தா இதைத் தூக்க 46071 நியூட்டன் த்ரெஸ்ட் தேவைப்படும்.ஆனா நிலாவில இருப்பது பூமியின் 1/6 புவி ஈர்ப்பு விசைதான் என்பதால் இதற்கு 7000 நியூட்டன் த்ரெஸ்ட் போதும். நாம் ஏறும் வேகத்திற்காக இதில் இரண்டு மடங்கு த்ரெஸ்ட் தேவைப்படும். எனவே 14000 நியூட்டன் த்ரெஸ்ட் இருந்தால் தான் நாம நிலாவில் இருந்து அதைச் சுற்றி வரும் கட்டுப்பாடு கூட்டுக்கு வர முடியும். இவங்க டிசைன் 15700 நியூட்டன்.. 

ஆனால் எவ்வளவு எரிபொருள் என்பதில்தான் விஷயம் இருக்கு, மொத்தமா பார்க்கப் போனா திட்டமிட்டதை விட 5 நிமிஷத்திற்கான அதிக எரிபொருள் மட்டுமே இருக்கு... அதாவது நிலவிறக்கக் கூடு இறங்க இரண்டு நிமிஷம் தாமதமானாலோ அல்லது ஏறுவதில் 2 நிமிஷம் தாமதமானாலோ அங்கேயே சமாதிதான்..

நிலவில் இறங்குவது எப்படின்னு பாருங்க..

1. முதலில் நிலவுச் சுற்றுப்பாதையில் பார்க்கிங் சுற்றுப்பாதைக்கு கட்டுப்பாடு கூடு, நிலவிறக்கக் கூடு இணைந்த தொகுதி வந்து சேரும். 



2. கட்டுப்பாடுக் கூட்டில் இருந்து நிலவிறக்கக் கூட்டுக்கு குடிபெயரும் மக்கள், அதை கட்டுப் பாட்டுக் கூட்டில இருந்து பிரிக்க வேண்டும்.

3. இப்படிப் பிரிந்த நிலவிறக்கக் கூடு நிலவிலிருந்து 50000 அடி உயரம் வரை வேகமாக இறங்கும் (நம்ம போயிங் 747-400 பறக்கற உயரம்). இப்பதான் இஞ்சினை ஸ்டார்ட் செய்யணும்.

4. எஞ்ஜினில் உள்ள ஆட்டோமேடிக் கண்ட்ரோல் மூலம் 10000 அடி உயரம் வரை மெதுவா பிரேக் போட்டு இறங்கும். 

5. இங்கிருந்து நேர் செங்குத்தாக 700 அடி வரை நிலவிறக்கக் கூடு இறங்கும். 

6. சுமார் 2000 அடி உயரத்திற்கு வரும்பொழுதுதான் மனுஷனுக்கு கட்டுப்பாடு கைக்கு வரும். கல்லு முள்ளு பாறை குழி எல்லாம் பார்த்து சரியான இடத்தில் இறக்கணும்.

இப்ப இந்த 700 அடி உயரத்தை 2 நிமிஷத்தில் கடந்து இறங்கணும்.. அப்படி இரண்டு நிமிஷத்தில இறங்க முடியலைன்னா, அப்படியே திரும்பிட வேண்டியதுதான்..

ஆக திட்டமெல்லாம் பக்காவாத்தான் இருக்கு.. 

அப்போலோ 11 இறங்கிய போது 25 வினாடிகளுக்கான எர்பொருளே மிஞ்சி இருந்ததா தகவல்கள் சொல்லுது..

இதை வச்சுப் பார்க்கும் போது இத்தனைத் தகவல்களும் மிக நுட்பமாக கணக்கு போடப்பட்டு வச்சிருக்கறது புரியும். நாசாவின் அத்தனை புள்ளி விவரங்களும் பார்த்தீங்கன்னா, மிகச்சரியா கணக்கு போடப்பட்டு வச்சிருக்குமே தவிர டாலரன்ஸ் என்னும் கொஞ்சம் அதிகம் இருக்கணும் என்ற விதமே இருக்காது..

இரஷ்யா ஏன் மனிதனை ஒரு அளவுக்கு மேல் அனுப்பலை? அமெரிக்கா ஏன் அந்த நிலா பயணத்திற்குப் பின் மனிதனை அனுப்பலை என்பதுதான் நிலாவில் இறங்கியது பொய் என்பதற்கான அடிப்படைச் சந்தேகத்தை வரவழைக்கும் ஒன்றாகும்..

அதுக்கு பூமியையும் அதைச் சுற்றி இருக்கிற பல அடுக்கு வளி மண்டலத்தையும், அதற்கு பின்னான அண்டவெளியையும் பற்றி கொஞ்சம் தெரிஞ்சிக்கணும். 



பூமிக்கு பல அடுக்கு பாதுகாப்பு இருக்கு, அதை இரண்டு வகையா பிரிக்கலாம்.


1. மின்காந்தப் புல பாதுகாப்பு..


இதுதான் முக்கியமான ஒண்ணு. இது எப்படி ஏற்படுதுன்னு பார்ப்போம்.

பூமியின் காந்தப்புலத்தின் காந்த இரு துருவங்கள், அதன் இரு புவியியல் துருவங்களுக்கு அருகில் தற்போது அமைந்திருப்பதாக தோராயமாக கருதப்படுகிறது. இயக்கவியல் கொள்கையின் படி, காந்தப்புலமானது, பூமியின் உருகிய நிலையில் உள்ள வெளிக்கருவில், வெப்பம் கடத்தும் பொருள்களின் கடத்துத் திறனை உருவாக்கி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இடத்தில், உருவாக்கப்படுகிறது. இதுவே, பூமியின் காந்தப்புலத்தை உருவாக்குகிறது. வெளிக்கருவில், வெப்ப கடத்துத் திறன் ஒழுங்கற்ற நிலையில் இருக்கும். மேலும், அது அவ்வப்போது மாறிக்கொண்டேயிருக்கும். இந்த, காந்தப்புல மாற்றம் ஒவ்வொரு மில்லியன் வருடத்திற்கு சில முறை ஒழுங்கற்ற இடைவெளியில் மாறிக்கொண்டேயிருக்கும். இறுதியாக இந்த மாற்றம் 700,000 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது.

இந்த புலமானது காந்த அடுக்கை (magnetosphere) ஏற்படுத்தி, சூரியக் கதிர் காற்றுக்கு அருகில் உள்ள துகள்களை விலக்குகிறது. சூரிய கதிரின் பௌ ஷாக் (bow shock) நுனி புவியின் ஆரத்தை போன்று 13 முறை கொண்டது. காந்தப்புலதிற்கும் சூரிய காற்றுக்கும் நிகழும் மோதலினால் வான் ஆலன் கதிர்வீச்சு வளையம் உண்டாகிறது. அது பொது மையமாகக்கொண்ட, டாரஸ் (torus) வடிவமுள்ள மின்னூட்டதுகள்கள் கொண்ட பகுதியாகும். பிளாஸ்மா புவியின் வளிமண்டலத்தில் காந்த துருவங்களில் நுழையும்போது கனல் (அரோரா) ஆக மாறுகிறது.



வான் ஆலன் கதிர் வீச்சு வளையம் --- நல்லா நோட் பண்ணி வச்சுக்குங்க... அப்பால பார்ப்போம்.



சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சை எப்படி இந்தக் காந்தப்புலம் திசை திருப்பி விடுதுன்னு பாருங்க..







சூரிய புயலின் போது அளவிற்கு அதிகமாக கதிரியக்கம் இருக்கும் பொழுது, இந்தக் கதிர்கள், காந்தப் புலத்தையும் தாண்டி செயற்கை கோள்கள், பூமியில் இருக்கும் மின் சாதனங்கள் போன்றவற்றை பாதிப்பதாக நாம நிறைய தடவை படிச்சிருக்கோம். அப்படி இருக்க, தடுப்பே இல்லாத விண்வெளியில் இவை எப்பவுமே அதிகமாத்தானே இருக்கும். அப்படி இருக்க இந்தக் கதிரியக்கங்களால் எப்படி மின்சாரத்தால் இயங்கும் சாதனங்கள் பாதிக்கப் படாமல் இயங்கும் என்பது முதல் சந்தேகம்.

இந்த வேன் ஆலன் பெல்ட் இருக்கே.. அதைக் கண்டு பிடிச்சதும் அமெரிக்கா தான்,


பூமியின் மின்காந்தப் புலத்தினால் விலக்கப்படும் சூரியக் கதிர்கள் பிளாஸ்மா மாதிரி பூமியின் மறுபக்கம் விலகிப் போகுது இல்லையா? அப்போ அந்தப் பாதைகளில் கதிரியக்கம் மிக அடர்த்தியா இருக்கும்... அதாவது விண்வெளியை விட இந்த வான் ஆலன் ரேடியேஷன் பெல்ட் இருக்கே இதைத் தாண்டறதுதான் மிகப் பெரிய கஷ்டமான சமாச்சாரம், ஏன்னா இங்க கதிரியக்கம் குவிக்கப் பட்டு ஆறு மாதிரி ஓடிகிட்டு இருக்கு,,, 





இதில உள் பெல்டு வெளி பெல்டு என இரண்டு இருக்கு.




இவை மின்சார, மின்னணு சாதனங்களை தகர்த்து விடும். இதைக் கண்டு பிடித்தது எக்ஸ்ப்ளோரர் (அமெரிக்கா 1959 - ல்) விண்கலத்தின் மூலம் வான் ஆலன் என்பவர்.

இந்தப் பெல்ட் அருகில் வரும்பொழுது ஹப்புள் டெலஸ்கோப் கூட எல்லா இயக்கங்களையும் மூடி விட்டு கம்முன்னு ஆயிடும்.. 

இதைத் தாண்டி அப்போலோ பயணங்களைத் தவிர வேறு மனிதப் பயணம் நடந்தது இல்லை.. 

என்னதான் இரஷ்யா நிலாவுக்கு போறதை மூட்டை கட்டி வச்சாலும், இதைத் தாண்டிப் போகிற மாதிரி ஒரு திட்டமும் போடலை. இரஷ்யா என்ன செஞ்சது? மனுஷனை அனுப்பலை. மெஷினை அனுப்பி சந்திரனில் இருந்து கல்லையும் மண்ணையும் எடுத்து வந்து ஆராய்ந்தது.. லூனா 16. 17, 20, 21 இப்படி பல இராக்கெட்டுகள் மூலம் சந்திரனோட மண்ணை அள்ளி வந்தது.

இன்றைய தேதி வரை இந்த வான் ஆலன் பெல்ட் பக்கத்தில போனா சில தெருக்களில் மேளதாளம் வாசிக்காம அமைதியா பிள்ளையார் ஊர்வலம் போகிற மாதிரி செயற்கைக் கோள்கள் எல்லாத்தையும் பொத்தி வச்சுகிட்டு கடந்து போகுது..

இந்த பெல்டுக்கு வெளிய அந்தப் பக்கம் சில செயற்கைக் கோள்களை நிறுத்தலாமே அப்படின்னு சிலருக்குத் தோணும்.. ஆனா யாராலும் வேலை செய்யும் செயற்கைக் கோள்களை எதாவது ஒரு கிரகத்தின் காந்தப் புலம் இல்லாத இடத்தில் செயல்படுத்த முடியலை என்பதே உண்மை.. செவ்வாய், சனி, குரு இப்படி கிரகங்களின் காந்தப் புலன்களை அடைந்த பிறகே செயற்கைக் கோள்களை செயல் பட வைப்பாங்க.. அதை வரை ஒவ்வொண்ணும் கூட்டுக்குள்ள பதுங்கிக் கிடக்கும்.

இந்த ரேடியேஷன் பெல்ட்டை போகும் பொழுது கடந்ததை விட, திரும்ப வரும் பொழுது கடப்பது ரொம்பவே கஷ்டம்..ஏன்னா படம் பார்த்திருப்பீங்க.. திரும்ப வரும் போது கண்ட்ரோல் மாட்யூலோட இருக்கும் இராக்கெட்டில் ஷீல்டிங் ரொம்பவே குறைந்து போய் இருக்கும்..

சந்திரனில் இப்படிப் பட்ட காந்தப் புல பாதுகாப்பு இல்லையே! அப்படி இருக்க எப்படி மின்னணு சாதனங்கள் வேலை செய்தது என்பதும் சந்தேகப் படுபவர்களின் கேள்வி. கேமிராவுக்கு எல்லாம் அலுமினிய ஷீல்டு போட்டுதான் இருந்தாங்க என்று சொல்லலாம்.. 

நமது இண்டர் நேஷனல் ஸ்பேஸ் ஸ்டெஷன்ல விண்வெளி நடை பயில்வதற்கும், நிலாவில விண்வெளி நடை பயில்வதற்கும் இதனால மிகப் பெரிய வித்தியாசம் இருக்கு. இங்க கதிரியக்கம் குறைச்சல்தான்.. 

இரஷ்யா விண்வெளிப் பயணிகளின் பாதுகாப்பை இரண்டாம் பட்சமாக கருதும் நாடு.. ஆனால் அமெரிக்க அதை முதன்மையாக கருதும் நாடு.. சந்திரனை இயந்திரக் கை மூலம் 1959 லயே தொட்டது இரஷ்யா. ஆனால் அங்கே மனிதனை அனுப்ப அது விரும்பவில்லை. அதனால் அதிகப் பயனில்லை என்று இரஷ்யாவிற்கு முதல்லயே தெரிஞ்சிருக்கலாம். இரஷ்யா விண்வெளி ஆராய்ச்சிக்கு மிர் விண்தளத்தையும், அங்கெ சென்று வர விண்கப்பலையும் கட்டுவதில் கவனத்தை திருப்பிடுச்சி.. அமெரிக்கப் போட்டிக்காக நிலாவில் இருந்து மண் எடுத்து வந்ததைத் தவிர விண் ஆய்வுக் கூடத்தில் தான் இரஷ்யா கவனத்தை காட்டியது. 

அமெரிக்காவின் ஸ்கைலேப் குப்புற விழுந்தது,, மிர் உயரப் பறந்தது... 

இரஷ்யா விண்வெளியில் நீண்ட நாட்கள் வாழத் தேவையான நுட்பத்தை உண்டாக்கியது, அதை இப்போ அமெரிக்கா கடன் வாங்குது...


அல்மேஸின் சல்யூட்2, சல்யூட்3, சல்யூட்5, மிர், இப்படி இதற்கு முந்தைய அத்தனை வெற்றிகரமான விண்வெளித் தளங்கள் எல்லாம் இரஷ்யாவுனுடையவை. அமெரிக்காவின் ஸ்கைலேப் தோல்வியைச் சந்தித்தது...

இன்னும் கூட அமெரிக்கா தனித்து ஒரு விண்வெளி நிலையத்தைக் கட்ட முடியாமல் தவிக்கிறது..

நிலைமை இப்படி இருக்க விண்வெளித் துறையில் இன்னும் மனிதனை நீண்ட நாட்கள் தன் தொழில்நுட்பத்தின் மூலம் தங்க வைக்க இயலாத அமெரிக்காவா நிலாவிற்கு மனிதனை அனுப்பியது?

கேள்வி ஞாயமாத்தான் இருக்கு.. இல்லையா? 



தொடரும்

.

No comments:

Post a Comment