Tuesday, June 22, 2010

conspiracy theories 1 -- நிலவில் மனிதன் கால் வைத்தது பொய்? - 3


1958ல இருந்து 1960 வரை பயனியர் ராக்கெட்டுகள் பல தோல்விகளைச் சந்திச்சது. இடையில் இரஷ்யா ஸ்புட்னிக் 2 ல லைக்கா என்னும் நாயை அனுப்பிக் கொன்னது. நாய் பாவம் 5 அல்லது 6 மணி நேரத்துக்குள்ளயே செத்துப் போச்சாம்..

1961 ல் பெல்கா மற்றும் ஸ்ட்ரெல்கா நாய்கள் வெற்றிகரமா விண்வெளிப் பயணம் செய்தன..

அமெரிக்காவிற்கு இதிலும் டிலே.. அமெரிக்கா தன் நாட்டின் நாய்களைக் கூட  இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்த விரும்பல.. அதுக்குன்னு சிம்பன்சிக் குரங்குகளை  ஆப்ரிக்காவிலிருந்து  பிடிச்சு வந்து அனுப்பிச்சு..


முதல் மனிதனை வின்வெளிக்கு அனுப்புவதிலும் இரஷ்யா முந்திகிச்சு.. யூரி காகரின் 1961 ஏப்ரலில் வாஸ்தாக் 1 மூலமாக முதன் முதலில் விண்வெளியில் பறந்தார். 23 நாள் கழிச்சு விண்வெளிக்குப் போகமுயன்ற அமெரிக்கர் ஆலன் ஷெப்பர்ட் சுற்றுப் பாதையை அடைய முடியாமலே கீழே வந்திட்டார்.. 1962 ல தான் ஜான் கிளன் அப்பிடிங்கற அமெரிக்கர் முதன் முதலா விண்வெளியில் வட்டமிட்டார், ஆனால் அதுக்கு முன்னாலயே ஆகஸ்ட் 1961 ல கெர்மன் டிடோவ் என்கிற இரஷ்யர் இரண்டாவது இரஷ்ய விண்வெளி வீரரா மேலே போயிட்டு வந்தார்.

அதே மாதிரி இரஷ்யா இரண்டு கலங்களில் (வாஸ்தக் - 3 மற்றும் வாஸ்தாக் 4) ஒரே நேரத்தில் அடுத்தடுத்து ஏவி இரண்டும் 6.5 கிலோ மீட்டர் தூரங்களில் விண்வெளியில் டூயட் பாட அனுப்பி வச்சாங்க. அதாவது ஒரு செயற்கைக் கோளில் இருந்து இன்னொன்னுக்கு ரேடியொ தொடர்புடன் இருக்கற மாதிரி. இது ஒரு மாதிரியான வெற்றின்னாலும் ரொம்ப நேரம் இரண்டும் சமமா பறக்கலை.. 

1963 ல வெலாண்டினா டெரெஸ்கோவா விண்வெளிக்குப் போன முதல் பெண்மணி. இது நடந்தது 1963 ல.

வெற்றிக்கு மேல் வெற்றியா இரஷ்யா முன்னேறினப்ப அமெரிக்க அரசுக்கு மிகப் பெரிய பிரஷர். எதையாவது செஞ்சுதான் நம்ம இமேஜை காப்பத்திக்கணும்னு ஆயிடுச்சி.. இப்போ இந்த அணுகுண்டு வெடிச்சா, பாகிஸ்தான் சீனாகிட்ட இருந்து கடன் வாங்கியாவது ஒரு அணுகுண்டு வெடிக்கிற மாதிரி, இந்தியா அக்னி பரீட்சை பண்ணினா, நார்த் கொரியாவோட ஏவுகணையை பெயிண்டடிச்சாவது புதுப் பேர் வச்சு சோதனை செய்யற மாதிரி எதாவது பெரிசா காட்டி இரஷ்யாவை விட  நாமதான் டாப்புன்னு காட்ட வேண்டிய நிர்பந்தம் அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு உண்டாயிருச்சி,, இதனால ஜான் எஃப் கென்னடி தன்னோட துணை அதிபர் லிண்டன் ஜான்ஸனுக்கு அமெரிக்காவின் திறனை நிலைநாட்டும் படியான ஒரு திட்டத்தைக் கேட்டார்.. அப்போ உண்டானதுதான் நிலவு தொட்டு விடும் தூரம்தான் என்று நிரூபிப்பது.. 

அன்னிய கிரகத்தில் கால்பதிப்பதுதான் அமெரிக்காவின் பேரைக் காப்பாத்தும் அப்படின்னு அரசியல்வாதிகள் முடிவு பண்ணிட்டாங்க. ஆனால் அதைச் செய்ய முடியுமா என்ற சந்தேகமும் இருந்தது... 

காரணம் இருந்தது... பூமியின் மின் காந்தப் புலத்தினால் விண்வெளியில் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை ரேடியேஷன் குறைச்சலாதான் இருக்கும். விண்வெளியில் நடப்பதற்கும், இந்த ரேடியேஷன் பெல்ட்டைத் தாண்டிப் போறதுக்கும் அதி பயங்கர வித்தியாசம் இருக்கு. 

அதுவுமில்லாம, நாம பூமியில் இருந்து நிலாவிற்குப் போக எவ்வளவு எரிபொருள் தேவைப் படுமோ அதில் குறைந்த பட்சம் 50 ல் ஒரு பங்காவது எரி பொருள் அங்கிருந்து திரும்ப வரவேணும். நிலாவோட ஈர்ப்பு விசையினால் கடல் ஓதங்கள் ஏற்படுது என்பதை நினைவில் வச்சுக்கணும். அதனால் அங்கிருந்து திரும்பி வரவும் இராக்கெட் துணை தேவை...

on Earth, the Earth's gravity: 11.2 km/s
on the Moon, the Moon's gravity: 2.4 km/s

1962 வரை மனுசனையே விண்வெளிக்கு அனுப்பாத அமெரிக்கா அப்போலோ பயணங்களை ஆரம்பித்தது.. 

1962 லிருந்து 1967 வரை பல்வேறு இராக்கெட்டுகள் பறக்க விடப்பட்டன. அதையெல்லாம் பின்னால பார்ப்போம். இப்போதைக்கு அப்போலோவை மட்டும் பார்ப்போம்.

1967 -ல் அப்போலோ 1 முதல்ல பிப்ரவரி மாதம் தேதி பறக்க விடப்படுவதா இருந்தது., ஆனால் ஜனவரி 27 ஆம் தேதி சிமுலேட்டட் டிரெய்னிங் செய்த போது தீப்பற்றி வெடித்தது.. இதற்கு அடிப்படைக் காரணம் என்னன்னு பின்னாடி விசாரிச்சவங்க சொன்னது ஒரு மோசமான வயர் உபயோகித்ததில் ஸ்பார்க் ஆகி, தீப்பிடிச்சி வெடிச்சதுன்னு.. (முதல்லயே சொன்னேனில்ல.. அமெரிக்கா அப்படித்தான்)

மொத்தமா 7 படிகளா இந்தத் திட்டத்தைப் பிரிச்சாங்க

1. ஆளில்லா கட்டுப்பாடு அறை விண்ணிற்கு அனுப்பி திரும்பப் பெறுதல்
2. நிலா வரை ஆளில்லா கடுப்பாட்டு அறையை அனுப்பி திரும்பப் பெறுதல்
3. மனிதனுடன் கட்டுப் பாடு ஆறையை விண்ணில் செலுத்தித் திரும்பப் பெறுதல்
4. நிலவில் இறங்கும் வாகனத்தையும் கட்டுப்பாட்டு அறையயும் விண்வெளிக்கு அனுப்பிப் பெறுதல்
5. கட்டுப்பாடு அறை, நிலா வாகனம் இரந்தியும் 7400 கி.மீ சுற்றுப்பாதைக்கு அனுப்பி திரும்பப் பெறுதல்
6. நிலாவை வட்டமடித்து திரும்ப வருதல்
7. நிலவில் இறங்குதல்.

இப்படி ஏழு நிலைகளாக பிரிக்கப்பட்டு 1961ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி எட்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது என்பதில்தான் மிகப் பெரிய சந்தேகமே எழுகிறது.

அதே சமயம் 1959லிலேயே நிலவை பின்புறம் படமெடுத்த சோவியத் ரஷ்யா ஏன் மனிதனை அனுப்ப முயற்சிக்கலை என்பது யோசிக்க வேண்டிய விஷயம். ரஷ்யாவின் ஆராய்ட்சி எல்லாம் விண்வெளி நிலையம் அமைப்பது, அதற்கு பொருள் எடுத்துச் செல்வது என்றே இருந்தது.. மனிதனை பூமியின் சேஃப்டி பெல்டுக்கு வெளிய அவர்கள் அனுப்பவே இல்லை.

அமெரிக்கா மட்டும்தான் நிலவில் மனிதக் காலடி பட வேண்டும் எனத் துடித்தது. என்னதான் மனிதனையே அனுப்பினாலும் சந்திராயன் சேகரித்த அளவிற்கு தகவல்களைச் சேகரிக்க முடியலை இல்லையா?

அதனால் நிலாவின் மேல் முதலடி அமெரிக்கனே வைத்தான் என்பது அமெரிக்காவிற்கு ஒரு பிரெஸ்டீஜ் விஷயம்தானே தவிர மற்றபடி அதிக பலன் ஒண்ணும் இல்லை.

இரஷ்யாவை விட நாம் ஒரு படி மேல் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த அமெரிக்க விஞ்ஞானிகள் நிலா உலா பயணத்தில் எவ்வளவு ஆரம்ப கால இடர்களை சந்தித்தார்கள் என்பதை அப்போலோ 1 பூமியிலயே, அதுவும் சிமுலேடட் டெஸ்ட் செய்யும் போதே வெடிச்சது என்பதில் இருந்து தெரிஞ்சிக்கலாம்.

இன்னும் வரும்.



No comments:

Post a Comment