Sunday, June 6, 2010

தாமரை பதில்கள் : 116

கேள்வி எண் 116:


கேட்டவர் : செழியன்


வணக்கம் அண்ணா.


ஒரு பொருள் ஒரு குறிப்பிட்ட அளவான(x) இடைவெளியை என்ன வேகத்தில் கடந்தால் ,அப்பொருளை நம் கண்ணால் பார்க்க முடியாது போகும். உதாரணமாக சைக்கில் சில்லு வேகமாக சுற்றும் போது அதில் உள்ள கம்பியை பார்க்க முடியாது.



ஓ மனைவியின் கண்ணில் படாமல் போகணும்னா எவ்வளவு வேகத்தில் போகணும் அப்படின்னு கேட்கிறீங்களா?

பார்வையின் வேகம் வினாடிக்கு எட்டு ஃபிரேம்கள் என அறிவியலால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக 0.125 வினாடிக்குள் பார்வை தூரத்தை கடந்தால் எதோ கடந்த மாதிரி தெரியும்.

அதுவே 0.0625 வினாடி வேகத்தில் கடந்தால் சின்ன சலனம் தெரியற மாதிரி ஒரு பிரம்மை இருக்கும்.

0.004 வினாடிக்குள் கடந்தால் தெரியவே தெரியாது. இதனால் தான் PAL முறையில் வினாடிக்கு 24 ஃபிரேம்கள் என வரையறை செய்து இருக்கிறார்கள். NTSC ல் ஒரு வினாடிக்கு 30 ஃபிரேம்கள் என வரையறை செய்து இருக்கிறார்கள்.

மனம் கவருபவர்கள் இருக்கும் பகுதியில் நம்ம பார்வை ஸ்கேனிங் ரேட் அதிகமாகும். அதுவே மனைவி எதிரில் வருவது தெரியாது. ஏன்னா ஸ்கேனிங் ரேட் மனைவியை எதிர்பார்க்கும் பொழுது குறைவு.

ஃபிரேம் அப்படின்னு சொல்வதற்கு காரணம் இருக்கு. ஒரு பொருள் எவ்வளவு தூரத்தில் இருக்கு என்பது இன்னுமொரு காரணி. ஏனென்றால் தொலைவைப் பொறுத்து வேகம் அதிகரிக்கும்.

உதாரணமா நிலவு, மிக வேகமாக பூமியைச் சுத்துது, ஆனால் தொலைவில் இருக்கு. அதனால கண்ணுக்குத் தெரியும். எரி நட்சத்திரமும் அப்படித்தான், வால் நட்சத்திரம், சூரியன் எல்லாமே அப்படித்தான்,

இப்போ சைக்கிள் ஃபோக்ஸ் கம்பி காணாமல் போகும் விஷயத்திற்கு வருவோம்.

இதில் இரண்டு கண்களால் பார்க்கும் பொழுது ஒரு விளைவு, ஒற்றைக் கண்ணால் பார்க்கும் பொழுது ஒரு விளைவு என இரண்டு உண்டு. இரண்டு கண்களால் பார்க்கும் பொழுது கம்பிக்கு பின்னுள்ள காட்சி நமக்கு கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது, எனவே கொஞ்சம் குறைந்த வேகத்திலேயே மறைந்து விடும். ஒற்றைக்கண்ணால் பார்க்கும் பொழுது பின்னால் மறைக்கப்பட்ட காட்சி அளவு சற்று அதிகம் என்பதால் இன்னும் கொஞ்சம் அதிகம் தேவைப்படும். 

அது போல அந்தக் கம்பிகளின் தடிமன் அதிகமாக இருந்தால் வேகம் இன்னும் அதிகம் தேவைப்படும். (ஆனால் மனைவியின் தடிமன் அதிகமானால் அவர்கள் கண்ணில் தட்டுப்படுவது குறையலாம்.. )

ஆக,

1, தூரம்
2. தடிமன்
3. வேகம்
4. கவனம் (ஃபோகஸ்)

ஆகிய பல காரணிகள் காரணம்.

அதனால் வேகத்தை நிர்ணயிப்பது கடினம்.

ஃபோகஸ் என்பதினால்தான் மனைவியின் கண்களில் நாம் மாட்டிக் கொள்வதும், மனைவி வருவது நமக்குத் தெரியாமலேயே போவதும்.

No comments:

Post a Comment