Friday, June 25, 2010

தாமரை பதில்கள் - 146

கேள்வி எண்: 146


கேட்டவர் : மகாபிரபு



அப்ப உளுந்த போண்டாவில் ஏன் ஓட்டை போடுவதில்லை?


1. கீழே உளுந்த போண்டா மண்ணாகி இருக்கலாம். அதனால அதை எடுத்து ஏன் வேஸ்டா ஓட்டை போடணும் என்றுதான்.

2. போண்டாவுக்கும் வடைக்கும் வித்தியாசம் தெரியணுமில்ல.. அதுக்குத்தான்.

3. அறிவுரை சொல்லும்போது தட்டிக் கொடுக்கணும் என்கிற அடிப்படையை உணர்த்தத்தான் தட்டிப் போடற வடையில மட்டும் அறிவுரை சொல்லி இருக்காங்க.. யார் தலையையாவது உருட்டிட்டு அறிவுரை என்று சொல்லக்கூடாது. அதனால உருட்டுற போண்டாவில அறிவுரை இல்லை.

4. அரைத்திட வடிவில் இருக்கும் கோள வடிவத்தின் உச்சியில் இருந்து கீழே வரை ஓட்டை போட்டால் கோளவடிவம் தட்டையாகி விடும், காரணம் பரப்பு இழுவிசை.. அப்புறம் போண்டாவுக்கும் வடைக்கும் வித்தியாசம் இருக்காது

5. அப்புறம் போண்டாவுக்குள்ள மசாலா வைக்கிறாங்களே அது ஏன் என்ற கேள்வி மனசில் எழுந்தா இரப்பர் போட்டு அழிச்சிடுங்க.. இவ்வளவு மசால போண்டாவில் இருக்குன்னு காட்டத்தான்,,,

இந்த பதில் போதுமா?

No comments:

Post a Comment