Monday, June 7, 2010

தாமரை பதில்கள் : 124

கேள்வி எண் 124:



கேட்டவர் :அறிஞர்


கேள்வி : T20 கிரிக்கெட் போட்டிகளுக்காக பதிய மட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது நீளம் குறைவாக உள்ளது. இது பாதகமில்லையா. மட்டையின் சிறப்பு அம்சங்கள் பற்றித் தெரிவியுங்கள்.


டி-20 போட்டிகளுக்காக பலவிதமான் நூதனமான வகைகளில் மட்டைகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன, இருபுறமும் தட்டையான மட்டைகள், நீண்ட கைப்பிடியும் குறைந்த அளவு மட்டைப்பகுதியும் கொண்ட மட்டைகள் அதில் அடக்கம்.

இயற்பியலைத் துணைக்கழைப்போமே. இவ்வகை மட்டைகளில் கைப்பிடி நீளமாக இருப்பதால் வீச்சு என்பது எளிதானது. எனவே அளவு குறைவாக வீசப்படும் பந்துகள், மற்றும் முழுநீளப்பந்துகள், போன்றவற்றை எதிர்கொள்ளும் பொழுது மட்டையின் வீச்சு நன்கு இருப்பதோடு எடை முழுதும் மட்டையின் கீழ் பகுதியில் இருப்பதால் பலன் சிக்ஸர்.

கைப்பிடி அருகில் பந்தை தடுத்து ஆடும் ஆட்டம் இருபதுக்கிருபதில் எதிர்பார்க்கப்படுவதில்லை,

புல்ஷாட், ஹூக்ஷாட், ஸ்கொயர் கட் போன்றவற்றை கூட எளிதில் ஆடலாம். 

இவையெல்லாம் நன்மைகள். தீமைகள் இல்லாமல் இல்லை..

ஷார்ப் பௌன்ஸர்கள், இடுப்பளவிற்கு அடிக்கத் தேவையான தூரமில்லாமல் உடலை நோக்கி வரும் பந்துகள் போன்றவற்றை அடித்து ஆடுவது சிரமம் மட்டுமல்ல.. ஆட்டமிழக்கும் வாய்ப்பும் அதிகம். விக்கெட் காப்பாளர் ஸ்லிப் போன்றோரிடம் காட்ச் கொடுக்கும் அபாயம் அதிகம் உண்டு.

இதில் அதிகம் பயனடைவது நல்ல தரமான வேகபந்து வீச்சாளர்கள்தான். இவர்களுக்கு பௌன்ஸ் அதிகம் கிடைத்தால் மட்டையாளர் மட்டையாக வேண்டியதுதான். 

இருபதுக்கு இருபது போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்களின் கையில் இருக்கும் ஆயுதங்கள்

வேகமாற்றம், ஸ்விங், மற்றும்வேரியபிள் பவுன்ஸ்..

மட்டையின் நீளம் குறைவாக இருப்பதால் டைமிங் சரியாக இல்லாவிட்டால் இது மட்டையாளருக்கு படு பாதகமாகி விடும், 

இது பந்து எழும்பாத மைதானங்களுக்கு உதவலாம்.
 

No comments:

Post a Comment