கேள்வி எண் 136:
கேட்டவர் : பரஞ்சோதி
மலை உச்சியின் மீது நிற்கும் போதும் சரி, பெரிய அடுக்கு மாடிகளின் மேல் நிற்கும் போதும் சரி, கீழே குதிக்கலாமா என்ற எண்ணம் தோன்றுகிறதே அது ஏன்? (இனிமேல் என் பக்கத்தில் யாரும் வந்து நிக்கமாட்டாங்க என்பது உண்மை)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15807
இது உங்களுக்கு மட்டுமான உணர்வு இல்லை பரம்ஸ்..
உயரத்தைக் கண்டால் பயம் என்பதற்கு அக்ரோஃபோபியா என்று பெயர். இது பயம் என்று சொல்ல முடியாதென்றாலும் அடிப்படையில் பயம்தான். ஆனால் பயத்தை நமது நம்பிக்கை வெல்கிறது.. அதனால் நாம் நம்மை உறுதிப்படுத்திக் கொள்கிறோம். அதாவது பயத்தை வெல்வதே வீரம். குதிக்க ஆசைப்படுகிறோம்.
பயம் / ஆபத்து இவற்றை உணரும் பொழுது நமக்கு அட்ரினல் தூண்டப்படுகிறது.. இந்த அட்ரினல் தூண்டப்படும்பொழுது இரத்த நாளங்கள் விரிகின்றது.. இதயத்தின் துடிப்பு அதிகமாகிறது. இதனால் நமது கால்கள் பரபரப்பாய் குதிப்பதற்கு தயாராவதை உணர்வோம். கால்கள் விறுவிறுக்கும். மயிர்க்கால்கள் குத்தி நிற்கலாம்.
பலமுறை உயரம் ஏறுவதற்கு நாம் எடுத்த முயற்சியில் சற்று களைத்திருப்ப்போம். அப்போது இந்த உணர்வு சற்று அதிகமாக இருக்கும்.
பூமியின் ஈர்ப்பு விசை நமது உடல் புவியீர்ப்பு மையத்தை நோக்கி நம்மை பேலன்ஸ் செய்வது ஆகியவை இதன் ஊக்கிகள் ஆகும்.
மேலிருந்து கீழே பார்க்கும் போது இவைதான் நமக்கு சற்று நிலைகுலைய வைக்கிறது. காரணம் நம்மை நிலைப்படுத்தும் காதில் உள்ள திரவம். நம் தலை குனிவதால் திரவம் நாம் கிடைமட்டத்தில் இல்லை என மூளைக்குச் சமிக்சை கொடுக்கிறது
ஆகவே குதிப்பதற்கோ அல்லது விழுந்தால் சமாளிப்பதற்கோ உடல் தயாராகி விடுகிறது. 100 க்கு 90 சதவிகிதம் பேருக்கு மேல் இது உண்டு..
கழைக் கூத்தாடிகள் குனிந்து பார்க்க மாட்டார்கள்.. தலையை கிடைமட்டமாக வைத்திருப்பார்கள்... கவனித்து இருக்கிறீர்களா?
மற்றபடி இந்த பயம் நம் மனப்பான்மையைப் பொறுத்து த்ரில் ஆகவோ அல்லது ஃபோபியா ஆகவோ பல பரிமாணங்களில் வெளிப்படுகிறது.
நிலைப்படுத்திக் கொள்ள நம் உடல் செய்யும் முயற்சி, அட்ரினல் சுரப்பு இவையே உங்கள் நிலைக்குக் காரணம்.
அம்புட்டுதான்.
No comments:
Post a Comment