Saturday, June 12, 2010

ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்!!!



ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கொரு காலம் வரும்...



ஆளாளுக்கு காலம் அதான் டைம் தனியாவா வருது.. டைம் அதுபாட்டுக்கு வருது. பாஸ் ஆகி போய்ட்டே இருக்கு.


ஒரு ஃபிரெண்டு சொன்னா ஆ-நெய்க்கு ஒரு காலம் வந்தா அதாவது பசுவின் நெய்க்கு ஒரு காலம் - சிறுவயசில் அதிகம் நெய் சாப்பிட்டா - பூ-நெய் அதாவது தேனுக்கு (மருந்தை தேன்ல குழைச்சு தானே சாப்பிடறோம்) ஒரு காலம் வரும்.


அதாவது நெய் பலகாரம் அதிகம் சாப்பிட்டா, உடம்பு கெட்டு, தேன்ல மருந்தை குழைச்சு சாப்பிட வேண்டியதாக வரும்னு டயட் கண்ட்ரோல் பத்தி சொல்லி இருக்காளாம் பெரியவா?


இருக்கட்டும்..


இதுவந்த கதையை கிறுக்குத்தனமா யோசிச்சுப் பார்ப்போமா?


கொடைநாடு ஜமீன்தாரர் உன்னிக்குட்டன் ஒரு யானையையும் பூனையையும் செல்லமா வளர்த்தார்.


ஒரு பத்திரிக்கைக்காரர் ஜமீந்தாரரை பேட்டி எடுத்தப்ப, யானையை ஒரு ஃபோட்டோ எடுத்து பத்திரிக்கையில் ஒரு காலத்தில் (column) பிரசுரம் பண்ணிட்டார்.


ஜமீந்தாரர் பத்திரிக்கைப் படிக்கிறப்ப ஜமீந்தாரர் ஃபோட்டோவைப் பார்த்த பூனை சோகமாயிட்டது. அது பத்திரிக்கையைப் பார்க்கறது, ஜமீந்தாரரைப் பார்க்கிறது. யானையை கடுப்போட முறைக்கிறது எல்லாத்தையும் ஜமீந்தாரர் பார்த்துட்டார்.


பூனையோட மனசு புரிஞ்சிருச்சி. ஒரு திட்டம் போட்டார். பத்திரிக்கை அலுவலகத்திற்கு ஒரு ஃபோன் போட்டார். கொஞ்ச நேரத்தில் ஒரு பையன் வந்து பூனையோட ஃபோட்டோவையும் ஜமீந்தாரர் ஃபோட்டோவையும் வாங்கிகிட்டுப் போனான்.


அடுத்த நாள் பத்திரிக்கையில் பூனையோட ஃபோட்டோ, ஜமீந்தாரர் ஃபோட்டோ எல்லாம் வந்திருந்தது. பூனைக்கு அதைப்பார்த்ததும் அளவில்லா சந்தோஷம். அதுக்குப் புரியலை. அது ஜமீந்தாரர் பூனையைக் காணவில்லை அப்படிங்கற விளம்பரமுன்னு.


அன்னிக்கு உன்னிக்குட்டன் சட்டம் போட்டார். பத்திரிக்கையில் ஆனைக்கொரு காலம் (Column) வந்தா பூனைக்கொரு காலம் (Column) வரும்னு.


அது தான் பழமொழியா மாறிப்போச்சு.. 

No comments:

Post a Comment