Thursday, June 10, 2010

தாமரை பதில்கள் : 130

கேள்வி எண் 130: 


கேட்டவர் : இன்பா


பூமியின் வடதுருவத்தில் (north pole) நிற்கும் போது தலைகீழாக நிற்பதுப் போல் உணர முடிவதில்லையே ஏன்? 

(சில்லியா நினைக்காதீங்க, நீண்ட நாளாக நான் தலை பீய்த்துக் கொள்ளும் கேள்வி இது)


இன்பா, வரலாறு புவியியல் உங்களுக்கு கொஞ்சம் தகராறு (இந்தத் தகராறு தகறாரா இல்லைத் தகராறா எது சரி? மண்டையைப் பிச்சுக்குங்க பதில் கடைசியில் சொல்றேன்) சரிதானே. ஏன்னா இதில் உங்களுக்கு ரொம்ப பிரியமிருந்தா தென் துருவத்தில் என்று கேட்டிருப்பீங்க, அந்தக் காலத்தில் இருந்தே வடக்கு என்றால் மேலே, தெற்கு என்றால் கீழே... (பாதாள உலகம் என்பது தெற்குப் பிரதேசம், அங்கு அசுரர்கள் (இயக்கர்கள்) வாழ்ந்தார்கள் என்பது இதையே காட்டுவதாகும்). வானத்து தேவர்கள் வடக்கே இமயமலையில் இருப்பார்கள்..


நாம் பூமி மேல் ஒட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் சரி, நம்மை பூமி ஈர்த்துக் கொண்டிருக்கிறது. நாம் பூமியின் மையத்தை நோக்கி நம்மை நிலைப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் சரி. 

http://www.mysteryspot.com/video.shtml

கல்ஃபோர்னியா சாண்டா குரூஸ் என்ற பகுதியில் மிஸ்டரி ஸ்பாட் என்று ஒன்று உண்டு. அங்கே நீங்கள் சாய்ந்து நிற்பதாகத் தோன்றும். பள்ளத்தில் இருந்து மேட்டை நோக்கி குண்டு உருண்டு வரும். ஒரு பக்கம் இருந்து இன்னொரு பக்கம் நடந்தால் நீங்கள் குள்ளமாகிக் கொண்டே போவீர்கள்.. (எல்லாம் காட்சி மயக்கம், தோற்றப் பிழை.. அடிப்படை புவியீர்ப்பு விசை.)

ஒரு பந்தில் ஒரு ஊசியை குத்தி வச்சா எப்படி இருக்குமோ அப்படித்தான் நாம் பூமி மேல நிக்கறோம். நாம் நேரா இருக்கறமா தலைகீழா இருக்கமா கிடை மட்டமா படுத்துகிட்டு இருக்கமா என்பது எங்கிருந்து நாம் பார்க்கிறோம் என்பதைப் பொருத்தது. சூரியனில் இருந்து பார்த்தால் வட துருவத்தில் நின்னுகிட்டும், தென் துருவத்தில் தொங்கி கிட்டும், நிலநடுக்கோட்டில் படுத்துகிட்டும் இப்படி வித விதமான போசில் தெரிவோம். அதுவே பூமியின் மீது நின்று கொண்டு பார்த்தால் கண்ணுக்கெட்டியவரை எல்லாம் நின்னுகிட்டு தான் இருப்போம், காரணம் எதை ரெஃபரென்சாக வைக்கிறோம் என்பதுதான். சூரியனில் இருந்து பார்க்கும் பொழுது பூமி பந்து மாதிரி உருண்டையா தெரியறது. அதன் முழுவடிவம் தெரிவதால் நாம தொங்குவது தெரியும். ஆனால் பூமியில் இருந்து பார்க்கும் பொழுது தொடுவானம் வரை தட்டையான பிரதேசம் தான். அதனால் எல்லோரும் நேரா நிக்கிற மாதிரியே தெரியுது. அதாவது பூமியின் வளைவு நமக்குத் தெரிந்தால் மட்டுமே மனிதர்கள் சாய்ந்து நிற்பது தெரியும்.

இன்னொன்னையும் கவனிச்சி இருக்கலாம். 4 வது மாடியில் இருந்து கீழே குனிந்து பார்த்தால் கீழே இருப்பவர் குண்டாக குட்டையா தெரிவார். ஆனால் கீழே இருந்து நாலாவது மாடியில் இருப்பவரை பார்த்தால் அவ்வளவு குண்டாகத் தெரிய மாட்டார். அடிப்படைக் காரணம் கீழே பார்க்கும் பொழுது நம்முடைய ரெஃபரன்ஸ் பூமி.  தட்டையாகத் தெரிவது, ஆனால் மேலே பார்க்கும் பொழுது ரெஃபரன்ஸ் வானம். வளைந்தது. ஆக நாம் காணும் பொருளின் தோற்றத்தில் அதன் பிண்ணனியும் பங்காற்றுகிறது என்பதுதான் உண்மை.

இதனால்தான் தொங்கல்ல இருந்தாலும் ஒரு சமமான இடத்தில் இருந்தால் தொங்கல் தெரியாது, வளைந்து கொடுக்கறவங்க மத்தியில் தொங்கல்ல இருந்தா தெரியும். 

தகராறு கேள்விக்கு விடை:

தகர் + ஆறு = வழிமுறைகளை உடை, அதாவது நியாயமான வழிகளை விட்டு முறைகேடாக செயல்படுவது.

இதனால்தான் தகராறு என்ற உடன் மரங்களை வெட்டி, கல்வீசி, பஸ்ஸூக்கு நெருப்பு வைத்து சாலை மறியல் செய்யறதா அரசியல்வாதிகள் சொல்றாங்க..  

No comments:

Post a Comment