Wednesday, June 9, 2010

தாமரை பதில்கள் : 129

கேள்வி எண் 129:



கேட்டவர் : ஆதவா


கிரகங்கள் கண்டுபிடித்து ஐநூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் (கலீலீயோ ஆரம்பித்து..) ஆகின்றன. ஆனால் அதற்கு முன்னரேயே வான சாஸ்திரத்தில் இந்தியர்கள் தேர்ச்சி பெற்றிருப்பதாக அறிந்தேன். ஆயிரம் வருடங்களுக்கு முன்னரேயே ஜோதிடத்தில் கிரகப் பெயர்ச்சியை புகுத்தியிருக்கிறார்கள்... எனில், இந்தியர்கள் முன்னரேயே கிரகங்களைக் கண்டுபிடித்தவர்களா??


கிரகங்களை கிரேக்கர்கள், இந்தியர்கள், எகிப்தியர்கள், மயன் வமிசத்தினர் என பலரும் அறிந்திருந்தனர். இவர்கள் அறிந்திருந்தது புதன், சுக்கிரன், செவ்வாய், சனி, வியாழன் என்ற ஐந்து கிரகங்களை. இவற்றை நல்ல தெளிவான இரவில் வெளிச்ச சிதறல்கள் இல்லாத இடங்களில் இருந்து அடையாளம் காணலாம். மூவாயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே இவை பற்றி அனைத்து பெரிய இனத்தவரும் அறிந்திருந்தார்கள். 


எனவே கலிலியோதான் கிரகங்களை கண்டறிந்தார் என்பது தவறான தகவல்.

இந்தியர்கள், மனிதர்களுக்கோ காலத்திற்கோ மிகப் பெரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. இன்னார் இதை இந்தக்காலத்தில் செய்தார் என்று அதிகமாக சொல்லப்படாததால் இந்தியர்கள் தங்களுக்குச் சேர வேண்டிய புகழை பல துறைகளில் இழந்திருக்கின்றனர்.

வருடங்கள் 60 சுழற்சி. இதனால் கிடைக்கும் குறிப்புகளைக் கொண்டு வருடத்தைக் கணிப்பது கடினம். விக்ரம சகாப்தம், சாலி வாஹன சகாப்தம், கலியுகம் போன்ற சில கணக்கு முறைகள் இருந்தாலும் இவை அதிகம் குறிப்புகளில் உபயோகப்படுத்தப் படவில்லை. சாலிவாகன சகாப்தம் கி.பி 72 ல் தொடங்கும்,. விக்கிரமாதித்ய சகாப்தம் இதைவிட சற்று அதிகமானது கி.மு 57. . கலியுகம் 3102 BC ல் தொடங்குகிறது. (ஆயிரம் ஆண்டுகள் ஆண்ட விக்ரம சகாப்தம் ஏன் 100 ஆண்டுகளே அதிகமா இருக்குன்னு தைரியமா கேட்கலாம். இது விக்கிரமாதித்தனால் அவனுடைய கடைசிக் காலத்தில் சகரர்களை வென்ற பொழுது உண்டாக்கப்பட்டது எனப் பதிலும் சொல்லலாம்.)


மேலைநாட்டவர்கள் குறிப்புகளை டைரிக் குறிப்புகள் போல நாள் வருடம் எனக் குறித்து எழுத இந்தியர்கள் குறிப்புகளை கதைகளாகவும் சூத்திரங்களாகவும் எழுதினார்கள். கதைகள் எளிய கருத்துக்களையும் சூத்திரங்கள் காக்கப்படவேண்டிய கருத்துக்களாகவும் இருந்தன. தவறானவர் கையில் சிக்கி தவ்றாக பயன்படக் கூடாது என்ற நோக்கில். ஆனால் இதுவே இன்று யாராலும் புரிந்து கொள்ள முடியாது என்ற அளவில் ஆகிவிட்டது.

எனவே இன்னாரால் இக்காலத்தில் சொல்லப்பட்டது இது என்று இந்துக்களின் படைப்புகளை அறிய முடிவதில்லை. மேலை நாட்டினர் மூலப்படைப்புகளில் திரிப்புகள் ஏற்படாமல் இருக்க காட்டிய ஆர்வம் இந்தியர்களால் காட்டப்படவில்லை. இதன் காரணமாக எது உண்மை எது இடைச்செருகல் என்ற பாகுபாடு இன்றிப் போனது. 


என்ற இந்தப் புத்தகத்தில் பல விஷயங்கள் உள்ளன படியுங்கள்.


எனவே யார் முதன் முதலில் கிரகங்களை கண்டறிந்தவர்கள் என்று கேட்டால் சரியான பதில் சொல்ல முடியாது. 

யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ இவை மூன்றை மட்டுமே பிற்காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட கிரகங்களாய் அறிகிறோம். யுரேனஸ் மார்ச் 13,1781ல், வில்லியம் ஹெர்சல்(ஜெர்மானியர்) என்பவராலும், நெப்டியுன் செப்டம்பர் 23, 1846 ல் மூன்று விஞ்ஞானிகளால் கணித முறையில் அறியப்பட்டு பின்னர் தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்டது. புளூட்டோ 1930, பிப்ரவரி 18 ல்.
.. 

No comments:

Post a Comment