Friday, June 25, 2010

தாமரை பதில்கள் - 145

கேள்வி எண் 145:



கேட்டவர் : பரஞ்சோதி



நீண்ட நாள் சந்தேகம், அது ஏன் உழுந்து வடையில் மட்டும் நடுவில் துளை வைக்கிறாங்க, பருப்பு வடையில் ஏன் இல்லை?


லொள்ளு : உளுந்தா அடி பட்டு காயமாகும் என்பதால் உளுந்த வடையில் ஓட்டை போட்டு சிம்பாலிக்கா காட்டறோமாக்கும். ஆமை மாதிரி நிதானமா காரியங்கள் செய்தால் காயம் ஆகாது அப்படின்னு காட்ட ஆமை வடையில ஓட்டை இல்லை.


அறிவியல் : உளுந்த வடை மாவு குழைவா இருக்கும் தட்டிப் போடும் போது மத்தியில் ஒரு விரல் வத்து எடுத்தால் ஓட்டை விழுந்திடும், வடையின் மத்தியில் ஓட்டை போடுவதால் எண்ணை படும் பாகும் அதிகமாவதால் வடை எளிதாக வேகும். இல்லா விட்டால் உட்புறம் வேகும் போது வெளிப்புறம் கடக் முடக்குன்னு ஆகிடும். பருப்பு வ்டையின் பதம் அதில் துளை போட அனுமதிப்பதில்லை. 

No comments:

Post a Comment